காவல் செய்திகள்

கோவை சூலூர் R V S கல்லூரியில் நடக்கும் ராக்கிங் தற்கொலை! மாணவர்களை அச்சுறுத்தும் நிர்வாகம்!?

கோவை கல்லூரிகளில்
தொடரும் ராக்கிங்! தலைமறைவான மாணவர்கள் கைது!

கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சீனியர் மாணவர்கள் இரண்டாம் ஆண்டு மாணவரை மொட்டை அடித்து தாக்குதல் நடத்தி ராகிங் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கல்லூரியில் ராகிங் சம்பவம் கோவையில் பயிலும் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில்


கோவை: சூலூரில் கல்லூரி மாணவனை ராக்கிங் செய்ததாக சக கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம்  சூலூரில் தனியார் (ஆர்.வி.எஸ்) இன்ஜினியரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த வளாகத்திலேயே டீச்சர் ட்ரெயினிங் உட்பட  ஆர்.வி.எஸ் கல்வி நிறுவனத்தின் பல்வேறு கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.

கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.  ஆர் வி எஸ்  கல்லூரியில்           24 /11 /23 அன்று சேலத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு பொறியியல் (மெக்கட்ரானிக்ஸ்) படிப்பை கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் மாணவன் அகிலேஷ்  வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுள்ளார். கல்லூரியில் செல்லும்போது அனைத்து மாணவர்களை போல இவர் அணிந்திருந்த சட்டை டக்கின் செய்து சென்றுள்ளார். கல்லூரி வேலை நேரம் முடிந்தது வகுப்பறை விட்டு வெளியே வந்தவர் சட்டையை டக்அவுட் எடுத்துள்ளார்.
இதை கவனித்த அதே கல்லூரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு படிக்கும் குரல் இனியன், அரவிந்த், நான்காம் ஆண்டு படிக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த முத்து குமார் மற்றும் கரூரை சேர்ந்த கோகுல் ஆகியோர், கல்லூரிக்குள் காப்பு கயிறு கட்டக்கூடாது, முழுக்கை சட்டை அணிந்து டக்கின் செய்திருக்க வேண்டும், சீனியர் முன்னாள் கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது, சீனியர் வந்தால் மரியாதை செலுத்த வேண்டும் எனக் கூறி எச்சரித்து
அவரை தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக அகிலேஷ் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளார்.  இதனையடுத்து, அகிலேஷ் மற்றும் 12 மாணவர்களும் சென்ற நிலையில் அகிலேஷைத் தவிர மற்ற 12 மாணவர்களையும் கோகுல், முத்துக்குமார் ஆகிய இருவரும் எச்சரித்து அனுப்பி வைத்ததாகவும், அகிலேஷை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்ட முத்துக்குமார் மற்றும் கோகுல் ஆகியோர் முத்துக்குமாரின் நண்பரான சூலூர் டீக்கடையில் வேலை செய்து வரும் தனபால் என்பவரின் அறைக்கு அழைத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.
அங்கு மூவரும் இணைந்து அகிலேஷை தகாத வார்த்தையால் திட்டியதோடு கைகளால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அகிலேஷின் கைக்கடிகாரம் மற்றும் செல்போனை பிடுங்கி உடைத்து, “சீனியர் மாணவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும், இல்லையென்றால் கொலை செய்து விடுவோம்” என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் நெற்றி பகுதியில் காயமடைந்த அகிலேஷ் இதுகுறித்து விடுதி காப்பாளர் இடம் தகவல் கூறிவிட்டு சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அந்த புகாரின் பேரில் சூலூர் காவல் துறையினர் 294(b), 323, 506(i),4 of tamilnadu prohibition ragging act ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து, இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரையும் காவல் துறையினர் முத்துக்குமார், கோகுல், டீக்கடை ஊழியர் தனபால் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் ராக்கிங் செய்யப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், மேலும் ஒரு கல்லூரியில் மாணவர்கள் மீது ராக்கிங் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமில்லாமல்
சூலூர் கன்னம் பாளையம் RVS மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவ படிப்பு நான்காம் ஆண்டு படிக்கும் சக்தி பிரியா (வயது 21)21/07/23  அன்று கல்லூரியில் உள்ள விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
நான்காம் ஆண்டு படிக்கும் மாணவி தற்கொலை செய்ததற்கு காரணம் என்ன என்று பல கோணங்களில் சூலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மாத்தையன்
உதவி ஆய்வாளர் அய்யாசாமி அவர்கள் விசாரணை மேற்கொண்டு  வரும் நிலையில் தற்போது அதே ஆர் வி எஸ் கல்லூரியில் பொறியியல் படிக்கும் மாணவனை  மூன்றாம் ஆண்டு நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ராக்கிங் செய்து கைது செய்யப்பட்டுள்ள  சம்பவம் கோவை சுற்றி உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இது சம்பந்தமாக  கோவை சூலூர் ஆர் வி எஸ் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களிடம் விசாரித்த போது அவர்கள் அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளனர் .என்னவென்றால் கல்லூரியில் நடக்கும் அவலங்களை வெளியில் சொல்லக்கூடாது என்று கல்லூரி நிர்வாகமே மாணவர்களை அழைத்து  மிரட்டி அச்சுறுத்தி வந்ததாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர் .

இதனாலேயே மாணவர்கள் கல்லூரியில் நடக்கும் சம்பவங்களை தங்களுடைய பெற்றோர்களிடமோ காவல் நிலையத்தில் கூட புகார் கொடுக்காமல் இருந்ததாகவும் கல்லூரி நிர்வாகத்தின் மீது முன்னாள் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எது எப்படியோ ஆயிரம் மாணவர்கள் படிக்கும் இடத்தில் ஒரு சிலர் செய்யும் தவறுகளை மூடி மறைக்க கல்லூரி நிர்வாகம் நினைத்தால் அது ஒட்டுமொத்த கல்லூரி நிர்வாகத்திற்கு தான்  ஓட்டு மொத்த கெட்ட பெயர் உண்டாகும். ஆகவே மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் நலன் கருதி கல்லூரி நிர்வாகம் கல்லூரியில் ஒரு சிலர் செய்த தவறுகளை உடனே கண்டுபிடித்து அவர்களை கல்லூரியை  விட்டு நீக்கி மற்ற மாணவர்களிடம் உள்ள அச்சத்தை போக்க வேண்டும் என்பதுதான் அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button