காவல் செய்திகள்

அரசு அனுமதியின்றி போலி ஆவணங்களை வைத்து சட்ட விரோதமாக கனிம வளம் கடத்திச் சென்ற இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்த மடத்துக்குளம் காவல்துறை!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா பகுதியில் உள்ள அனுமதி இன்றி ஏங்கி வரும் கல் குவாரிகளில் வெடிவைத்து கனிம வளம் வெட்டி எடுத்து அரசு அனுமதி இன்றி கேரளா மாநிலத்திற்கு கடத்திச் செல்வதாக பொதுமக்கள் காவல்துறை மற்றும் வருவாய்துறை கனிமவளத் துறைக்கு தொடர்ந்து புகார் கொடுத்த வண்ணம் இருக்கின்றனர்.
இதன் அடிப்படையில் உடுமலைப்பேட்டை காவல் உட்கோட்ட காவல் காவல்துறையினர் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் மடத்துக்குளம் தாலுகா உட்பட்ட பகுதிகளில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வரும் கல் குவாரிகளில் வெடிவைத்து வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்களை இரண்டு டிப்பர் லாரிகளில் சட்டவிரோதமாக கடத்தி சென்றபோது மடத்துக்குளம் காவல் உட்கோட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மடத்துக்குளம் காவல் ஆய்வாளர் இரண்டு டிப்பர் லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது

அதில் அரசு அனுமதியின்றி போலி ஆவணங்களை வைத்து கனிமவள கற்களை எடுத்து சென்றது தெரிய வந்தது.
உடனே காவல்துறையினர் அந்த இரண்டு டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். டிப்பர் லாரிகளை ஓட்டி சென்ற ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் யார் என்று காவல்துறையினர் மேல் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது சம்பந்தமாக உடுமலை மடத்துக்குளம் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கூறும்போது திருப்பூர் மாவட்டம் பல்லடம் உடுமலைப்பேட்டை மடத்துக்குளம் குடிமங்கலம் பகுதிகளில் பல கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.

இதில் பல கல்குவாரிகள் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். அப்படி அரசு அனுமதி இன்றி இயங்கி வரும் கல்குவாரிகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்களை போலி ஆவணங்கள் மூலம் நூதன முறையில் கடத்திச் செல்வதாகவும். தகவல் தெரிவிக்கின்றனர். அது மட்டும் இலலாமல் அரசு அனுமதியுடன் இயங்குகின்ற கல்குவாரிகளின் உரிமையாளர்கள் அனுமதி இல்லாத கல் குவாரிகளில் சட்டவிரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுத்த அனுமதி வாங்கியுள்ள கல்குவாரிகளில் வழங்கும் அரசு அனுமதி சீட்டை வைத்து நூதன முறையில் தனிம வளங்களை கடத்திச் செல்வதாகவும் இதுபோன்று கடத்திச் செல்லும் போது வாகன சோதனையில் ஈடுபடும் காவல்துறையினர் அனுமதிச்சீட்டு இருந்தால் போதும் என நினைத்து அந்த வாகனத்தை விட்டு விடுவதாகவும் இதை சாதகமாக பயன்படுத்தி போலி ஆவணங்களை வைத்து கனிம வளங்களை தொடர்ந்து கடத்தி வருவதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். ஆகவே திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் கல் குவாரிகளை நேரடியாக சோதனையிட்டால் மட்டுமே அரசு அனுமதி இல்லாமல் எத்தனை கல் குவாரிகள் இயங்கி வருகின்றன என கண்டுபிடித்து அப்படி சட்டவிரோதமாக கல்குவாரியை நடத்தி வரும் உரிமையாளர்கள் மீது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது!

Related Articles

Back to top button