சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகளின் உரிமையாளர்களிடம் பல லட்சம் லஞ்சம் வாங்கும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மோகன் குமார்!! விவசாயிகள் ஆவேசம்
சட்டவிரோதமாக நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளில் உரிமையாளர்களிடம் பொதுப்பணித்துறை AE மோகன் குமார் பணத்தை பெற்றுக்கொண்டு
மதுரை கூத்தியார்குண்டு விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு!
செயற்பொறியாளர் மோகன்குமாரை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
ஒரு கோடி ரூபாய் செலவில் கூத்தியார்குண்டு நிலையூர் கண்மாய் கரை வலுவாக பொதுப்பணித்துறை மராமத்து பணி செய்துள்ள நிலையில்
இரவோடு இரவாக விவசாயிகள் நிலத்தில் தேக்கி வைத்திருந்த தண்ணீரை திறந்துவிட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மோகன் குமாரின் அலட்சியப்போக்கை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்!
மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு கண்மாய்க்கு வைகை அணையில் இருந்து வரவேண்டிய தண்ணீரை அரசு அதிகாரிகள் துணையுடன் நிறுத்திய பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் AEமோகன் குமார்.
கூத்தியார்குண்டு நிலையூர் கண்மாயை சுற்றி சுமார் 2000 ஏக்கர் விவசாயம் செய்து வரும் நிலையில் இது போன்ற விவசாயிகளுக்கு எதிராக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் லஞ்சம் பெற்றுக்கொண்டு விரோதமாக செயல்படுவதாக பல குற்றச்சாட்டுகள் பலமுறை அதிகாரிகளுக்கு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் கொதித்து சாலையில் போராட்டம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே நீதிமன்றம் பலமுறை நீர் நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டடங்களை அகற்றச் சொல்லி பொதுப்பணித்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் களுக்கு உத்தரவு போடும் உத்தரவை கிடப்பில் போட்டு லஞ்சம் வாங்குவதில் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் இந்த அதிகாரிகளை இந்தியாவிலேயே தமிழ் நாட்டை முதல் மாநிலமாக மாற்ற போராடி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதுபோன்ற அரசுக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர் வாங்கி கொடுக்கும் லஞ்சப் பெருச்சாளிகளை உடனே களைய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்