காவல் செய்திகள்

சட்டவிரோதமாக போதை ஊசி மற்றும் விபச்சாரம் கொடி கட்டி பறக்கும் புதுக்கோட்டை நகரம் !? கண்டுகொள்ளாமல் கல்லாக்கட்டும் காவல்துறை!? போதை ஊசிக்கு அடிமையாகி வாழ்க்கையையே சீரழிக்கும் பள்ளி கல்லூரி மாணவர்கள்!?நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்!?

சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் போதை ஒழிப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் கடந்த ஆட்சியில் மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்காளின் அலட்சியப் போக்கால் தான் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடையே போதை பொருள் பயன்படுத்தும் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் வரும் காலங்களில் போதை பொருள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றும் அந்த விஷயத்தில் நான் சர்வாதிகாரியாக நடந்து கொள்வேன் என்று கூறியதையும் நாம் சாதாரணமாக கடந்து போக முடியாது என்பதுதான் நிதர்சனம்.

இந்திய காவல் துறையில் அதிரடிக்கு பெயர் பெற்றவர்தான் வந்திதா பாண்டே ஐபிஎஸ்.கண்டிப்பான நேர்மையான போலீஸ் அதிகாரி. உத்தரப்பிரதேசம் அலகாபாத்தை சேர்ந்தவர் .
தமிழகத்திற்கு இவர் மாற்றலாகி வந்தபோது, அனைவரின் கவனத்தையும் திருப்பியவர்..
தன் துறை நபர்கள் என்றெல்லாம் கரிசனம் காட்டாமல் காக்கிகளிடம் கண்டிப்பை காட்டியவர்.. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பணியாற்றி, மக்களிடம் நன்மதிப்பை நேரடியாக பெற்றவர்.. இவர் எடுத்த பல அதிரடிகளால் பலமுறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டவர்.. எத்தனை முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டாலும், நேர்மையை கைவிடாதவர் வந்திதா ஐபிஎஸ்.


கரூர் அன்புநாதன் விவகாரத்தில்தான்.. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்காக அரசாங்க முத்திரையை போலியாக பதித்திருந்த ஆம்புலன்ஸில் கட்டுக்கட்டாகப் பணம் கடத்தி, வாக்காளர்களுக்கு விநியோகம் செய்த குற்றச்சாட்டில் கைதானவர்தான் அன்புநாதன்.
அய்யம்பாளையம் அன்புநாதன் வீட்டில் ரெய்டு நடந்தபோது கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.. இந்த ரெய்டை முன்னின்று நடத்தியவரே எஸ்பி வந்திதா பாண்டேதான்.. இதற்கும் அவருக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம் தரப்பட்டது என்பதை மறுக்க முடியாது. வந்திதா பாண்டே ஐபிஎஸ் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்பியாக இருந்து, பிறகு பொருளாதாரக் குற்றப்பிரிவு எஸ்பியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டார்..
அதன் பின்பு சம்மந்தமே இல்லாத துறை என்றாலும், நேர்மை காரணமாகவே தூக்கியடிக்கப்பட்டவர்தான் வந்திதா பாண்டே ஐபிஎஸ்.
இன்னும் இதுபோன்ற ஏராளமான துணிச்சல் காரியங்களை நிகழ்த்திய வந்திதா ஐபிஎஸ் அவர்கள்,

தற்போது திமுக ஆட்சியில் பல மாவட்டங்களில் நேர்மையான காவல் கண்காணிப்பாளர்களை நியமித்து உள்ள நிலையில் தற்போது புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார் .புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் சட்டவிரோதமான கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை மற்றும் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட் விற்பனை மற்றும் மசாஜ் சென்டர்கள் அனுமதி இல்லாமல் நடந்து வந்ததாக பல குற்றச்சாட்டுகள் புகார்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சமூக ஆர்வலர்கள் கொடுத்ததாகவும் ஆனால் பெயரளவுக்கு மட்டும் நடவடிக்கை எடுத்ததாகவும் நிரந்தர தீர்வு எடுக்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். .

தற்போது அனுமதி இல்லாமல் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் ஸ்பா என்ற பெயரில் ஆயில் மசாஜ் சென்டர்கள் நடப்பதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. அப்படி மசாஜ் என்ற பெயரில் நடக்கும் விடுதிகளில் விபச்சாரம் நடப்பதாகவும் தற்போது திடுக்கிடும் தகவல் வந்துள்ளது.

அது மட்டுல்லாமல்
புதுக்கோட்டை நகர் பகுதியில் இளைஞர்கள் மட்டுமில்லாமல் மாணவர்கள் வரையிலும் தற்போது போதை ஊசிக்கு அடிமையாக இருப்பதால் போதை ஊசி விற்பனை நகர் பகுதி முழுவதும் தொடங்கி கிராமங்கள் வரை வரையிலும், அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் மற்றும் போதை ஊசி வியாபாரம் இந்த இரண்டு தொழில்களையும் சட்ட விரோதமாக செய்து வரும் சமூக விரோதிகள் புதுக்கோட்டை காவல் துறைக்கே சவாலாக இருந்து கொண்டு தண்ணி காட்டி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.


போதை ஊசி எங்கு விற்கின்றார்கள் யார் போதை ஊசியை பயன்படுத்து கின்றார்கள் என்ற விவரத்தை SP யின் ரகசிய போலிஸ் என்று அழைக்கப் படும் எஸ் பி சி ஐ டி காவலர் நாகராஜன் செய்தியாளர்கள் மற்றும் காவல்துறைக்கு வேண்டியவர்களிடம் முதலில் கேட்டறிவாராம் .

எஸ் பி சி ஐ டி நாகராஜன்


பின்பு இதை விற்பனை செய்பவர்களிடம் மறைமுகமாக மாதம் மாதம் வாங்க வேண்டியதை கச்சிதமாக வாங்கிக் கல்லாக் கட்டிக் கொண்டு காவல்துறையில் உள்ள ஒரு சிலருக்கு மட்டும் பாகப்பிரிவினை செய்வதில் நாகராஜனுக்கு கைவந்த கலையாம் .
மேலும் போதை ஊசிக்கு அடிமையான இளைஞர்கள் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் இந்த போதை ஊசி விற்பனை செய்பவர் மாத மாதம் நாகராஜனுக்கும் ராஜாராமுக்கும் சிறப்பான விருந்துகளுடன் ரகசியமாக சிறப்பான வகையில் உபசரிப்பதால் செய்து தருவதும் இந்த போதை ஊசி விசயத்தில் ரகசியம் காப்பதோடு அதிலும் முக்கியமாக புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு செல்லாமல் ரகசியம் காக்கும் ரகசிய போலீஸ் நாகராஜனுக்கு துணை நிற்கின்றவர்களை நமது ரிப்போர்ட்டர் விஷன் விரைவில் உயர்மட்ட காவல் அதிகரிகளுக்கு இவர்களது மறைமுக முகத்திரையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் என்பதனை இதன் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.

நாகராஜனின் நெருங்கிய கூட்டாளியான காவலர் ராஜாராமன் சைபர் கிரைம் துறையில் சிறிது காலம் பணியாற்றிய தாகவும், நாகராஜனை பற்றி யார் யார் பேசிக் கொள்கின்றார்கள்.

ராஜாராம் (முன்னால் சைபர் கிரைம்)

என்பதை நாகராஜனுக்கு ரகசிய தகவல் கொடுப்பதற்காக இரவு வேளையில் இருவரும் திருக்கோகரம் காவல் நிலையம் எதிர்புறத்தில் உள்ள காலியான விளையாட்டு திடலில் இருவரும் தகவல் பரிமாற்றங்களை பகிர்ந்து கொண்டு .இரவு வேளையில் சந்தித்து பேசிக் கொள்வது வாடிக்கையாக இருக்கிறதாக தகவல் வெளிவந்துள்ளது.


மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹன்ஸ்மற்றும் குட்கா போதை வாஸ்து நிறைந்த புகையிலையை நாகராஜன் பயன்படுத்துவது வழக்கமம்.
இவர் எப்பொழுதும் காக்கி உடையில் இல்லாமல் சாதாரண உடைகள் அணிந்து வலம் வருவதால் எந்தெந்த பெட்டிக்கடை மற்றும் மளிகை கடையில் குட்கா விற்பனை செய்கின்றார்கள் என்பதை குட்கா வாங்குவது போல் அவர்களை நோட்டமிட்டு அவர்கள் மீது சிறிய வழக்கு பதிவு செய்து குட்காவை பறிமுதல் செய்து. பரிமுதல் செய்த குட்காவை மிக நெருங்கிய நண்பர் மளிகை கடையில் கொடுத்து விற்பனை செய்ய சொல்வதும் இரவு வேளையில் டாஸ்மார்க் கடை மூடியதும் மது பாட்டில்களை ரகசியமாக தெரிந்த நபர்களுக்கு மட்டும் விற்பனை செய்யும்படி துணை நின்று இதற்காக மாதம் மாதம் ஒரு தொகையை வசூல் செய்து குறிப்பிட்ட காவலர்களுக்கு பாகப்பிரிவினை செய்து கொடுப்பதில் எஸ் பி சி ஐ டி காவலர் நாகராஜனின் வேலை என்கின்றர்கள்.
மேலும் காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு எப்போதும் .கொடுக்க வேண்டிய பாக பிரிவினை செய்வதில் எஸ் பி சி ஐ டி நாகராஜன் தனது கடமையை சிறப்பாக உயர் அதிகாரிகளுக்கு பாக பிரிவினை செய்வதில் தேர்ச்சி பெற்றவர் என்கின்றார்கள் நேர்மையான காக்கிகள் .
புதுக்கோட்டை திருகோணம் காவல் நிலையத்தில் எஸ் பி சி ஐ டி யாக இருக்கும் நாகராஜன் சுமார் நான்கு வருடத்திற்கும் மேலாக இதே பகுதியில் ஆணி அடித்தது போல் பணியில் இருந்து வருவதால் எங்கெங்கெல்லாம் கஞ்சா போலி மது விற்பனை போதை ஊசி கேரளா லாட்டரி சீட்டு விபச்சாரம் போன்றவற்றை நடத்துகின்றவர்கள் எல்லாம் SP யின் ரகசிய போலிஸ் நாகராஜனையும் ராஜாராம் என்பவர்களின் புகைப்படத்தை வைத்து கடவுளாக தீபாரனை காண்பித்து தங்களது வியாபாரத்தை படு ஜோராக நடத்தி வருவதாக நேர்மையாக இருக்கும் காக்கிகள் புலம்பி கொண்டிருக்கிறார்கள் என்கின்றனர்.
புதுகை மக்கள் மேலும் இவர்களுக்கு உறுதுணையாக அரசியல் மற்றும் பண பலம். தொடர் குற்ற சம்பவத்தில் உள்ள ரவுடிகள். இவர்களுக்கு மறைமுகமாக துணை நிற்பதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம்
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அருகில் அமைந்திருக்கும் தனியார் விடுதியில் மேல் தளத்தில் ரகசிய அறையில் பல மாதங்களாக ஆயில் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாகவும் இந்த மசாஜ் சென்டருக்கு முக்கிய புள்ளிகள் மற்றும் தொழிலதிபர்கள் வாடிக்கையாளராக இருந்து வருவதாக ஒரு சிலர் நம்மிடம் கூறவே சற்று அந்த தனியார் ஹோட்டலுக்கு ரகசிய கள ஆய்வில் நமது நிருபர்கள் குழு களம் இறங்கின.
இந்த சொகுசு ஹோட்டலில் பணம் பலம் வசதி படைத்தவர்களை குறி வைத்து இந்த ஆயில் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் மிக கச்சிதமாக நடப்பதாக சிலர் கூறுகின்றனர் .
இந்த தங்கும் விடுதியில் ஏசி மது விற்பனை பார் இந்த ஹோட்டலில் உள்ளது இந்த ஹேட்டலில் தங்குபவர்களிடம் எப்படி பணப்புழக்கம் உள்ளது என்பதை ரூம் சர்வீஸ் செய்யும் நபரிடிம் கேட்ட போது முதலில் உளவு பார்க்கும் பணி நடைபெறுமாம் அவர்கள் ரூம் சர்வீஸ் நபரிடம் பீர் மற்றும் சாப்பாடு சிகரெட் பாக்கெட்டை வாங்கி வரும்படி கூறுகின்றவர்களிடம் முதலில் நோட்டம் பார்ப்பார்களாம்.
பின்பு ரூம் சர்வீஸ் நபரிடம் இவர்கள் கொடுக்கும் டிப்ஸ் பணத்தை பொறுத்து வாடிக்கையாளர்கள் எப்படி பணம் புழக்கத்தில் உள்ளனர் என்பதை முதலில் தகவல் கொடுப்பார்களாம்.
இந்த ஹேட்டல் நிற்வாகத்திற்க்கு பின்பு இந்த ஹோட்டலில் வாடகைக்கு தங்கி இருக்கும் நபர்கள் நல்ல போதையில் இருக்கும் போது நேரம் பார்த்து சார் எங்கள் ஹோட்டலில் எங்கும் கிடைக்காத கேரள மாநிலத்திலிருந்து அழகிகள் இயற்கை முறையில் ஆயில் மசாஜ் செய்கிறார்கள்.
நீங்கள் வேண்டுமென்றால் ஒரு முறை வந்து பாருங்கள் தங்களது வாழ்நாளில் ஒரு பெரிய அனுபவம் கிடைக்கும் புதிய சொர்க்கத்தையே பார்க்கலாம் இந்த வாய்ப்பை நீங்கள் மிஸ் பண்ணிடாமல் ஒரு தடவை மட்டும் வந்து பாருங்கள் சார் உங்களைப் போன்ற விஐபி
களுக்கு மட்டும் இந்த சர்வீஸ் உள்ளது வேறு யாருக்கும் இங்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று முதலில் அவர்களின் மனநிலையை மாற்ற தொடங்குவார்களாம் .
அதன் பின்பு பல ஆசை வார்த்தைகளை கூறி நுழைவு கட்டணமாக ரூபாய் 1500 ரூபாய் என்ற அடிப்படையில் உள்ளே சென்றதும் ஆடைகளை கழட்டிய பின்புஆயில் மசாஜ் செய்ய தொடங்குவார்களாம் .பின்பு உடல் முழுவதும் எண்ணையை பூசி மெதுமெதுவாக ஆயில் மசாஜ் செய்ய தொடங்கியவுடன் அறையின் விளக்கு அனைத்த பின்பு பேரம்பேசபடும்மாம் .
மேலா கீழ என்று கேட்பார்கலம் மேல் என்றால் ஒரு தொகை. கீழ் என்றால் ஒரு தொகையாம் பின்பு ரூபாய் ஐந்தாயிரம் முதல் எட்டாயிரம் ரூபாய் வரை ஒரு மணி நேரத்திற்கு பணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் வந்துள்ளது.
இப்படி படுஜோராக ஆயில் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் இந்த தனியார் தங்கும் விடுதியில் மிகச் சிறப்பாக இயங்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இந்த ஆயில் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதற்கு மாதம் மாதம் காவல்துறையில் உள்ள ஒரு சில முக்கிய அதிகாரிகளுக்கு கப்பம் கட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டவிரோத ஆயில் மசாஜ் என்ற பெயரில் நடைபெறும் விபச்சார தொழில் இடையூறு இல்லாமல் நடைபெற புதுக்கோட்டை நகர் பகுதியில் பெயர் சொல்லும் அளவிற்கு உலா வரும் ரவுடிகளுக்கும் கப்பம் கட்டி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தங்கும் விடுதியில் காவல்துறை எந்த சோதனையும் செய்வதில்லை என்று தெரிந்து கொண்ட உள்ளூர் வாசிகளும் வெளியூரிலிருந்து வருபவர்களும் ஆயில் மசாஜ் என்றே பெயரில் நடக்கும் விபச்சார அழகிகளிடம் தங்களது ஆசையை தனித்துக்கொள்ள இந்த தனியார் தங்கும் விடுதியில் தங்குவதற்காகவே சில வாடிக்கையான ரசிகர்கள் கூட்டம் உள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வந்துள்ளது.
.
காவல் துறைக்கு இந்த விஷயம் தெரிந்தும் இதை பற்றி கண்டுகொள்ளமல் ஒரு சில காவல்துறை அதிகாரிகளே இந்த ஆயில் மசாஜிற்கு அடிமையாகி இருப்பதாலும் இது பற்றி எவ்வித புகார் வந்தாலும் கிடப்பில் போட்டுவிட்டு புகார் கொடுத்தவர்களை ஹோட்டல் நிர்வாகத்திடம் கூறி விடுவார்களாம் .

இந்த ஆயில் மசாஜ் பற்றி வெளியில் விமர்சனம் செய்கின்றவர்களை ரவுடிகள் தலையிட்டு இப்ப பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பார்களாம் .

புதுக்கோட்டையின் நேர்மை மிக்க காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஐபிஎஸ் அவர்கள் கழுகு பார்வை இந்த தனியார் தங்கும் விடுதி மீது படுமா!?
மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு ரகசிய தகவல் கொடுக்கும் எஸ்பி சிஐடி காவலர் நாகராஜன் மாத மாதம் பெருந்தொகையை ரகசியமாக கல்லாக் கட்டிக் கொண்டு வருகிறார் என்ற அதிர்ச்சி தகவலும் வந்துள்ளது.
பூனை கண்ணை மூடி கொண்டு பால் குடித்தால் யாருக்கும் தெரியாது என்ற பழமொழி போல் காவல்துறையை கலங்கப்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருக்கும் எஸ் பி சி ஐ டி காவலர் நாகராஜன் மீது நேர்மையான ஐபிஎஸ் அதிகாரியான புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது மட்டும் இல்லாமல் இது போன்ற சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட மசாஜ் என்ற பெயரில் விபச்சார தொழில் செய்பவர்களை கண்காணிக்க நேர்மையான காவலர்களை நியமித்து விபச்சாரம் நடக்கும் விடுதிகளை சோதனை செய்து விடுதிகளை சீல் வைத்தால் மட்டுமே புதுக்கோட்டையில் உள்ள தனியார் விடுதிகளில் நடக்கும் விபச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க முடியும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button