Uncategorizedலஞ்ச ஒழிப்புத் துறை

சட்ட விரோதமாக கேரளாவுக்கு கனிம வளம் கடத்திச் செல்லும் சுமார் 100க்கும் மேற்பட்ட கனரக டாரஸ் லாரிகள்! சோதனை என்ற பெயரில் லாரி ஒன்றுக்கு 3000 முதல் 5000 என மாதம் 5 லட்சம் மாமூல் வசூல் செய்யும் உத்தமபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர்! அதிர்ச்சி தரும் தகவல்!

கடிவாளம் போட நினைக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை! அடங்க மறுக்கும் தேனி மாவட்ட வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள்!தேனி மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., வாகன ஆய்வாளர் மற்றும்உத்தமபாளையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தர ராமன் தலைமையில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

உத்தமபாளையத்தில் 23 ஆண்டுகளுக்கு முன் பகுதி நேர வட்டார போக்குவரத்து அலுவலகம் துவக்கப்பட்டது. உத்தமபாளையம் ஆர். டி.ஒ. அலுவலக தரைத் தளத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது.வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் தேர்வு தளம் அமைக்க கோம்பை ரோட்டில் சிக்கச்சியம்மன் கோயில் அருகில் இடம் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பஞ்சமி நிலம் என்ற பிரச்னை கிளம்பியது. ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் டி.ஆர்.ஒ. இடத்தை ஒதுக்கீடு செய்தும், கையகப்படுத்தி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இடத்தை முறைப்படி எடுக்க முடியாமல் வட்டார போக்குவரத்து துறை திணறி வருகிறது. நிலம் கையகப்படுத்தி தர வேண்டிய தாசில்தார் சுணக்கம் காட்டி வருவதாகவும் .5 கோடி ஒதுக்கீடு செய்த நிதி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலையிட்டு, ஒதுக்கீடு செய்த நிலத்தை கையகப்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.இது ஒரு பக்கம் இருக்க உத்தம பாளையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு சொந்த கட்டிடமே இல்லாத நிலையில் உத்தமபாளையம் கோட்டாட்சியர் அலுவலக படாகத்தில் செயல்பட்டு வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுனர் உரிமம் பெறுவதுபுதிய வாகனம் பதிவு செய்வது வாகனப் பதிவுச் சான்றிதழ் . ஆர் சி வழங்குவது வாகன உரிமையை மாற்றுவது, உரிமம் காலாவதியான வாகனங்களுக்கு புதுப்பித்தல் மற்றும் சாலை வரி வசூலிப்பது, சாலை அனுமதி வழங்குவது போன்றவற்றுக்கு இடைத்தரகர்கள் மூலம் ஆயிரம் முதல் பத்தாயிரம் வரை லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேபோல் தேனி அடுத்துள்ள பழனி செட்டிபட்டி அரசு போக்குவரத்து கழக வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனை சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனை சாவடியை கடந்து கேரளாவுக்கு வாகன செல்ல வேண்டுமென்றால் ஓட்டுனர்கள் லஞ்சம் கொடுக்காமல் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து அதிகமான அளவில் இயற்கை வளங்களை வெட்டி எடுத்து சட்ட விரோதமாக தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக டாரஸ் வாகனங்களில் கம்பம் மெட்டு வழியாக கேரளாவுக்கு கனிம வளம் கடத்தி செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கேரளாவில் 15 வருடங்களுக்கு முன்பே இயற்கை வளங்களை எடுக்கத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியாகும். கேரளாவையொட்டி தேனி மாவட்டம் அமைந்துள்ளது .தேனி மாவட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குவாரிகள் செயல்படுகிறது. பல கல்குவாரிகள் மற்றும் எம் சாண்ட் தயாரிக்கும் கிரஷர்கள் அரசு வழங்கியுள்ள அனுமதி காலாவதியாகியும் சட்ட விரோதமாக இயங்கி வருவதாகவும் மாவட்ட கனிமவளத்துறை உரிமம் பெற்று இயங்கி வரும் கல் குவாரிகளிலிருந்து கனிம வளம் எடுத்துச் செல்வதற்கு வழங்கப்படும் அரசு அனுமதிச்சீட்டை முறைகேடாக பயன்படுத்தி வருவதாகவும் ஒரு அனுமதி சீட்டை வைத்து பல கனரக டாரஸ் லாரிகளில் கேரளாவுக்கு கனிம வளம் கடத்தி செல்வதாகவும் இதை கம்பம் மெட்டு பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் உள்ள காவலர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு கண்டு கொள்வதில்லை என்றும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.அது மட்டும் இல்லாமல்மோட்டார் வாகன விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக சட்டவிரோதமாக கனிம வளங்களை கொண்டு செல்லும் கனரக டாரஸ் லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்வதில்லை என்றும் அதற்காக உரிமையாளர்கள் தேனி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தர ராமன் ஒரு கனரக டாரஸ் லாரி உரிமையாளர் 3000 முதல் 5000 ரூபாய் வரை மாதம் சன்மானம் வழங்கி வருவதாகவும் அப்படி வழங்கி வரும் சன்மானம் சுமார் 100 கனரக டாரஸ் லாரிகள் கேரளாவுக்கு தினந்தோறும் செல்வதால் சுமார் மூன்று லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை மாதம் தேனி மாவட்ட உத்தமபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் சுமார் மூன்று ஆண்டுகளாக கல்லா கட்டி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த வசூல் வேட்டையை உத்தமபாளையம் வட்டாரப் போக்குவரத்து வாகன ஆய்வாளர் கனக்கச்சிதமாக செய்து தேனி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலருக்கு கொடுக்க வேண்டியது கொடுத்து வருவதாகவும் கனிம வளம் கொண்டு செல்லும் லாரி ஓட்டுநர்கள் சர்வ சாதாரணமாக பரவலாக பேசி வருவதால் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தேனி மாவட்ட வட்டார போக்குவரத்து கிளை அலுவலகமான உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்த வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.அதுமட்டுமில்லாமல் கேரளத்திற்கு இயற்கை வளங்களான எம்சாண்ட், ஜல்லி, கிரஷர் மற்றும் பாறைப்பொடிகளை அரசு அனுமதி சீட்டு மூலம் வாங்கி செல்கின்றனர். ஆனால் அரசு அனுமதி சீட்டில் குறிப்பிட்டுள்ள அளவை விட அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை எடுத்துச் செல்லும்நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளின் உரிமையாளர்கள் மற்றும் கல் குவாரி உரிமையாளர்கள்தேனி மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் கனிமவளத்துறை வருவாய்த்துறை, வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் சோதனைச் சாவடியில் இருக்கும் காவலர்கள், வனத்துறை, வருவாய்த்துறை என அனைத்து துறை அதிகாரிகளுக்கு சுமார் மாதம் ஒரு கோடி வரை கவனிக்க வேண்டியதை சரியாக கவனித்து வருவதாகவும் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக கனரக டாரஸ் லாரிகளில் இரவு பகலாக கேரளாவுக்கு கனிம வளம் கடத்திச் செல்வதை யாரும் கண்டுகொள்வதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமில்லாமல்கனிம வளங்கள் வெட்டி எடுக்க அனுமதி வழங்கும் கனிமவளத்துறையின் வழிமுறைகளை பின்பற்றாமல் காற்றில் பறக்க விட்டு தற்போதுதேனி மாவட்டத்தில்கனிமவளம் கொள்ளை நடந்து வருவது தொடர்கதையாக உள்ளது என்றும் இந்தக் கனிம வள கொள்ளை கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் தற்போது உள்ள திமுக ஆட்சியில் உள்ள மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் தொடர்ந்து கனிமவள கொள்ளை இரவும் பகலமாக படுஜோராக நடப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சித் தகவலை தெரிவிக்கின்றனர். அரசு அனுமதி வழங்கிய வழிமுறைகளை பின்பற்றி கனிம வளங்களை வெட்டி எடுக்கிறார்களா இல்லை அளவுக்கு அதிகமாக சட்ட விரோதமாக வெட்டி எடுக்கிறார்களா என்பதை ஆய்வு செய்யாமல் சட்ட விரோதமாக கல்குவாரி நடத்தும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தேனி மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து சுணக்கம் காட்டி வருவதாகவும் ராமன் ஆண்டாலும், ராவண ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை என்ற திரைப்பட பாடல் வரிகள் போல தேனி மாவட்ட ஆட்சி நிர்வாகம் செயலிழந்து இருப்பதாகவும் இதனால் அரசிற்கு பெறும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.கனிம வளம் கடத்தல் சம்பந்தமாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை என்று சமூக ஆர்வலர்களின் குமுரலாக உள்ளது. மேலும், தேனி மாவட்ட கனிமவளக் கொள்ளையை பொறுத்தவரையில் திமுக அதிமுக என எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என்ற வேறுபாடின்றி ஒரே கூட்டணியில் செயல்பட்டு வருகிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்..ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் தேனி மாவட்டத்தில் எத்தனை ஆட்சியாளர்கள் மாறினாலும் எந்த மாற்றமும் நடக்கப் போவதில்லை என்றும் ஆனால் தங்களது வாழ்வாதாரத்திற்காக மாட்டு வண்டி, டிராக்டர்களில் ஒரு சிலர் மணல் கடத்தினால் அவர்கள் மீது குண்டாஸ் வழக்கு கூட பாயும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.தேனி மாவட்டத்தில் கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாக, கேட்பாரின்றி இயற்கையான மலைகள் சக்தி மிகுந்த வெடிமருந்துகள் மூலமும், இராட்சத இயந்திரங்கள் மூலம், தகர்க்கப்பட்டு கடத்தப்படுவது மாவட்ட ஆட்சியருக்கும் கனிமவள உதவி இயக்குனருக்கும் வருவாய்துறை அதிகாரிகளுக்கும் தெரியாமல் போவது எப்படி என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.எந்த ஒரு புகார் வந்தாலும் அந்தப் புகார் மீது நேர்மையான முறையில் கள ஆய்வு செய்து அதை தடுத்து நிறுத்தி நிரந்தரமான தீர்வை ஏற்படுத்த தவறுவது மட்டும் இல்லாமல் தங்களது வருவாயை மட்டும் பெருக்கி கொண்டு அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வரும் அரசு உயர் பதவியில் இருக்கும் ஒரு சில கருப்பு ஆடுகள் திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.கடந்த அதிமுக ஆட்சியிலும் தேனி மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளையை அரங்கேற்றி வந்தவர்கள் தான் தற்போது திமுக ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்து சட்டவிரோதமாக கனிம வளங்களை வெட்டி கடத்தும் செயல் கொடிகட்டி பரப்பதாக அதிர்ச்சித் தகவலை சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.அதைவிட அதிர்ச்சியான தகவல் தேனி மாவட்ட ஆட்சியர் பல கோடி ரூபாய் மதிப்பில் கேரளாவில் எஸ்டேட் வாங்கி இருப்பதாகவும் அதனால் தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அடிக்கடி சென்று தங்கி வருவதாகவும்சமூக வலைதளங்களில் வைரலாகி வந்ததும் குறிப்பிடத்தக்கது.எது எப்படியோ மாதம் மாதம் மாமூல் என்ற பெயரில் ஒவ்வொரு அலுவலகத்திலும் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிக் கொண்டு லஞ்சம் வாங்கும் கறைபடிந்த கரங்களுக்குச் சொந்தமான அரசு அலுவலர்கள் மீது தேனி மாவட்ட ஆட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் கடந்து போவது தான் வேதனையாக இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் குமுறல்!தேனி மாவட்ட ஆட்சி நிர்வாகத்தின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு உண்மையா!? இல்லையா!? என நேர்மையான ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டால் மட்டுமே மறைந்திருக்கும் உண்மை என்ன என்பது பொதுமக்களுக்கு தெரியவரும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Related Articles

Back to top button