சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சமூக விரோதிகளை தெறிக்க விடும் பேராவூரணி எஸ் பி தலைமை காவலர்! பாராட்டும் சமூக ஆர்வலர்கள்!

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சமூக விரோதிகளை தெறிக்க விடும் பேராவூரணி எஸ் பி தலைமை காவலர்!
அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, குற்றச் செயல்களைத் தடுப்பதும், நாட்டில் சட்டம் ஒழுங்கை முறையாகப் பேணுவதும் காவல்துறையின் முக்கியக் கடமையாகும்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குற்றங்களைத் தடுப்பதற்கும், மக்களிடம் சட்டம் மற்றும் ஒழுங்குகளைக் காக்கவும் காவல்துறைக்கான அமைப்பு செயல்பட்டு வருகிறது. மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஒருவர் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு கீழ்காணும் அதிகாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது.இந்த அமைப்பில் கீழ்காணும் காவல்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்
மாவட்டக் கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர்
துணைக் காவல்துறைக் கண்காணிப்பாளர்
காவல்துறை வட்ட ஆய்வாளர்
சார்பு ஆய்வாளர்கள் ஆகியோர் இதில் அடங்குவர்.
எஸ்.பி.க்களுக்கு (காவல்துறை கண்காணிப்பாளர்கள்) சொந்த காவல் நிலையங்கள் உள்ளதா?
ஆம், காவல் கண்காணிப்பாளர்களுக்கு (SPs) பொதுவாக சொந்த காவல் நிலையங்கள் இருப்பதில்லை. அவர்கள் ஒரு மாவட்டத்தின் காவல் துறைக்கு பொறுப்பான மூத்த அதிகாரிகள் மற்றும் அவர்களின் அதிகார வரம்பிற்குள் உள்ள பல்வேறு காவல் நிலையங்களின் செயல்பாட்டை மேற்பார்வையிடும் பொறுப்பு. அவர்களுக்கு பிரத்யேக காவல் நிலையம் இல்லை என்றாலும், அவர்கள் வழக்கமாக மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்குள் ஒரு அலுவலகத்தை வைத்திருப்பார்கள், அங்கு அவர்கள் காவல்துறை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்கிறார்கள். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும், வளங்களை நிர்வகிப்பதிலும், அந்தந்த மாவட்டங்களில் காவல்துறையின் ஒட்டுமொத்த செயல்திறனை உறுதி செய்வதிலும் எஸ்.பி.க்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
எஸ்பி போலீஸ் (ஐபிஎஸ் அதிகாரி) சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் தொடர்பான அனைத்தையும் முடிவு செய்து, டிஎம் ஒப்புதல் அளிக்குமாறு கேட்கிறார். SP முடிவுகளுக்கு அவர் தனது ஒப்புதலை வழங்க வேண்டும், ஏனெனில் அவர் இந்திய சட்டங்களால் அவ்வாறு செய்யக் கடமைப்பட்டுள்ளார்.
இதில் முக்கியமாக காவல் நிலையங்களில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை எஸ்பி அலுவலகத்திற்கு எஸ்பி தனி காவலர்கள் அனுப்பி வைப்பது முக்கிய பங்காவும்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்ட காவல் நிலையம் பேராவூரணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட கஞ்சாவை லாட்டரி விற்பனை சட்டவிரோதமாக டீ கடைகளில் கூட விற்பனை கொடி கட்டி பரப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லாட்டரி விற்பனை செய்யும் சமூக விரோதிகள் தங்கள் வியாபாரத்தை மேம்படுத்துவதற்கு பேராவூரணியை பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் பேராவூரணி காவல் நிலையத்தில் ஒரு சிலரை மட்டும் பெயரளவில் கைது செய்து கண்டுடைப்பு நாடகம் நடத்தி வருவதாக பேராவூரணி காவல் நிலையத்தின் மீது சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில்கடந்த மூன்று மாதங்களாக

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தர்மா மாவட்ட கண்காணிப்பாளரின் தனி காவலராக இருந்து வருகிறார்.
இவர் பேராவூரணி காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்த நாள் முதல் இப்பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள் மற்றும் லாட்டரி விற்பனை செய்துவரும் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மற்றும் குற்றபின்னணியில் இருப்பவர்களின் பட்டியல்களை கையில் வைத்துக் கொண்டு அதிரடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இதனால்
குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் சமூக விரோதிகள்
பேராவூரணி காவல் நிலையத்தில் உள்ள காவலர்களை கண்டு அஞ்சுகின்றார்களோ இல்லையோ தலைமை காவலர் தர்மாவை கண்டு அஞ்சிநடுங்குகின்றனர் என்றும் காவல் கண்காணிப்பாளர் தனி தலைமை காவலருக்கு ஏற்ற தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து வருகிறார் என்பதுதான் நிதர்சனம், எத்தனையோ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன் தனி தலைமை காவலர்கள் பேராவூரணி காவல் நிலையங்களில் தொடர்ந்து இரண்டு வருடங்களாக பணியில் இருந்து உள்ளன ஆனால் தற்போது பேராவூரணி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சமூக ஆர்வலர்களின் அனைவரின் பார்வையும் தற்போது பணியில் இருக்கும் தலைமை காவலர் தர்மாவின் பக்கம் திரும்பி இருக்கின்றது என்கின்றனர் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.
இதனால் பேராவூரணி சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வரும் ஒரு சில சமூக விரோதிகளுக்கு உறுதுணையாக இருந்து வரும் பேராவூரணி காவல் நிலையத்தில் பணியில் இருக்கும் உயர் பதவியில் உள்ள ஒரு சில காவல் அதிகாரிகள் தலைமைக் காவலர் தர்மாவின் நேர்மையான பணியை பொறுத்துக் கொள்ள முடியாமல் மறைமுகமாக வேறு விதமாக பேசி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதையெல்லாம் கண்டு கொள்ளாத தலைமை காவலர் தர்மா தன்னுடைய நேர்மையான மக்கள் பணியை தொடர்ந்து செய்து வருகிறார் என பாராட்டி வருகிறார்கள் என்பதுதான் நிதர்சனம். எது எப்படியோ தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சமூக விரோதிகளின் கூடாரங்களை ஒட்டு மொத்தமாக ஒழித்துக் கட்ட வேண்டும் என சமீபத்தில் நடந்த காவல்துறை உயர் அதிகாரி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.