காவல் செய்திகள்

சமூகவிரோதிகளின் கட்டுப்பாட்டில் சமயநல்லூர் காவல் உட்கோட்டம்!
செயலிழந்து கோமாவில்  வாடிப்பட்டி காவல்துறை!

சமூகவிரோதிகளின் கட்டுப்பாட்டில் சமயநல்லூர் காவல் உட்கோட்டம்!
இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு சாலையில் மது பாட்டில்களை  உடைத்து  அட்டகாசம்!
செயலிழந்து கோமாவில் இருக்கும் காணப்படும் வாடிப்பட்டி காவல்துறை!


மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டை அலங்காநல்லூர் சமயநல்லூர் சோழவந்தான் வாடிப்பட்டி ஆகிய சுற்றுவட்டார பகுதியில் சமீப காலங்களாக தடை செய்யப்பட்ட  கஞ்சா போலி மது பாட்டில் லாட்டரி விற்பனை மற்றும் கொலை கொள்ளை வழிப்பறி வாகனங்கள் திருட்டு போன்ற சமூக விரோத செயல்களை செய்யும் சமூகவிரோதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக சமயநல்லூர் முதல் வாடிப்பட்டி வரை சமூகவிரோதிகளின் நடமட்டம் அதிகமாக இருப்பதாகவும் அதிர்ச்சி வந்துள்ளது. சமயநல்லூர் காவல் உட்கோட்ட வாடிப்பட்டி அலங்காநல்லூர் சோழவந்தான் சமயநல்லூர் ஆகிய காவல் நிலைய காவலர்கள்  பெயருக்கு சோதனை என்ற பெயரில் கண்துடைப்பு செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


தற்போது மூன்று சாராயக்கடைகள்  வாடிப்பட்டி சுடுகாடு அருகே அமைந்துள்ளதால் போதுமான மதுபானங்கள் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் தாராளமாக கிடைப்பதாகவும் அதனால் சமூக விரோதிகள் வாடிப்பட்டியை தேர்ந்தெடுத்து வாடிப்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட  சுற்றுவட்டார பகுதிகள் கஞ்சா மது போதைகளில் கொலை கொள்ளை வழிப்பறி திருட்டு போன்ற சமூக விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும்
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

15/03/2024 அன்று இரவு 10 மணி அளவில் சுடுகாடு எதிரில் உள்ள சத்யா பால் பண்ணை சாலையில் மூன்று இரு சக்கர வாகனத்தில் சுமார் ஐந்து பேர் கொண்ட சமூக விரோத கும்பல்கள் மது போதையில் அதிவேகமாக சென்றதும் இல்லாமல் பெட்ரோல் பாட்டில்களை போல் சாலை முழுவதும்  மது பாட்டில்களை  உடைத்து கொண்டே சென்றுள்ளனர் .

சத்தியா பால் பண்ணை சாலை வாடிப்பட்டி சுடுகாடு எதிரில்

அப்போது பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் வெளியில் பார்த்துவிட்டு காவல்துறை கட்டுப்பாட்டு அறை 100 க்கு தகவல் கொடுக்க தொடர்பு கொண்ட போது காவல் கட்டுப்பாட்டு அறை எண் இயங்காமல் கோமாவில் இருந்துள்ளது.
உடனே பத்திரிக்கை நிருபருக்கு தகவல் கொடுத்து அதன் பின்பு வாடிப்பட்டி காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அரை மணி நேரத்திற்கு பின்பு
உதவி காவல் ஆய்வாளர் உதயகுமார்   காவலர் ஒருவர் வந்து அங்கு பதட்டத்தில் இருந்த பொதுமக்களிடம் விசாரித்து விட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட நபர்கள் யார் என்று கண்டுபிடிக்க அந்த சாலையில் உள்ள எந்த கண்காணிப்பு கேமராவை சோதனை செய்து அந்த நபர்கள் யார் என்பதை கண்டுபிடிக்காமல் மாறாக அங்கிருந்த பொது மக்களிடம் யாராவது வீட்டில் கண்காணிப்பு கேமராவில் பதிவு இருந்தால் அதை பதிவு செய்து காவல் துறைக்கு தெரிவிக்கவும் என்று சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டு சென்று விட்டனர்வாடிப்பட்டி காவல்துறையினர்.
. சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபடுவதை பொதுமக்கள் தானாக முன்வந்து கண்காணிப்பு கேமராவில் பதிவுகளை எடுத்து வந்து காவல்துறைக்கு கொடுக்க வேண்டுமா இதுதான் சட்டம் இப்படித்தான் வாடிப்பட்டி காவல்துறை செயலிழந்து காணப்படுகிறது. நாள் தான் வாடிப்பட்டி காவல் நிலையம் கோமாவில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சத்யா பால் பண்ணை சாலையில் இரவு முழுவதும் மது அருந்திவிட்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக பல முறை காவல்துறையினருக்கு  தகவல் கொடுத்தும்  சம்பந்தமாக காது கொடுத்து கேட்க விருப்பம் இல்லாமல் கடந்து சென்று வருகின்றனர்.
மட்டுமில்லாமல் வாடிப்பட்டி காவலர்கள் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுகிறார்களா என்பது பொது மக்களிடம் வந்துள்ளது என்பதுதான் நிதர்சனம்.
அப்பகுதியில்  தொடர் திருட்டு வழிப்பறி போன்ற செயல்களில் சமூக விரோதிகள் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

இதற்கு உதாரணமாக சில தினங்களுக்கு முன்பு வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலக சுற்றுச்சுவர் அருகே பட்டப்பகலில்

மதுரை ஜெயந்திபுரத்தை சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் சேர்ந்த கும்பல் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் பின்பு  மது மற்றும் கஞ்சா அருந்திவிட்டு கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.ஆனால் மூன்று நாட்களாக கொலை செய்யப்பட்ட நபரை காணவில்லை என்று வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து மூன்று நாட்களாக காணாமல் போன நபரை தேடாமல் இருந்ததால் மூன்று நாள் கழித்து கொலை செய்யப்பட்ட நபரின் உடலில் இருந்து வந்த துர்நாற்றத்தை வைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின்பு அழுகிய நிலையில் இருந்த இந்த உடலை காவல்துறையினர் அந்த உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு உடலுக்கு ஒரு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு கொலையாளிகளை தேடி வந்த நிலையில் அதன் பின்பு கொலை செய்த நான்கு பேர் மதுரை மாவட்டம் பேரையூர் நீதிபதி முன்பு ஆஜராகி சிறையில் அடைக்கப்பட்டனர் .

தற்போது வாடிப்பட்டி காவல்துறையினர் கொலையாளிகளை விசாரித்து வருகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் வாடிப்பட்டியில் சமீப காலமாக பட்டப்பகலில் பூட்டி இருக்கும் வீடுகளில் நகை பணம் விலை உயர்ந்த செல்போன் இரண்டு சக்கர வாகனங்களை திருடி திருடிச் செல்வது வாடிக்கையாக உள்ளது. அது மட்டும் இல்லாமல் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் கழுத்தில் நகைகளை பறித்து தப்பி சென்று வரும் அவல நிலையும் தற்போது அரங்கேறி ஆனால் வாடிப்பட்டி காவல்துறையினர் வழிப்பறி கொலை கொள்ளை திருட்டில் ஈடுபட்ட சமூகவிரோதிகளே இதுவரை கைது செய்ததாக தெரியவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எந்தத் தகவலையும் பத்திரிகை செய்திக்கு கொடுக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.
ஆனால் காவல் நிலையங்கள் சார்பாக கூறப்படும் குற்றச்சாட்டு என்னவென்றால் சமயநல்லூர் உட் கோட்ட நாகமலை புதுக்கோட்டை வாடிப்பட்டி அலங்காநல்லூர் பாலமேடு சோழவந்தான் சமயநல்லூர் ஆகியகாவல் நிலையங்களில் போதுமான காவலர்கள் இல்லை என்ற ஒற்றை பதிலை மட்டும் கூறிவிட்டு தங்களை காப்பாற்றிக் கொள்ள நினைக்கிறார்கள்.
எது எப்படியோ தற்போது சமூகவிரோதிகளின் கட்டுப்பாட்டில் வாடிப்பட்டி வந்துவிட்டது. வாடிப்பட்டி காவல் நிலையத்துக்கு சவாலாக சமூக விரோதிகள் செயல்பட்டு வருகின்றனர்.ஆகையால் வாடிப்பட்டி காவல்துறையினர் சமூக விரோதிகளை கண்டுபிடிக்க முடியாமல்
செயலிலிருந்து கோமாவில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டு உண்மையா இல்லையா காவல்துறையினருக்கு தான் வெளிச்சம்.
ஆகவே புதிதாக பொறுப்பேற்றுள்ள தென் மண்டல ஐஜி மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் வாடிப்பட்டி சுற்று வட்டார பகுதியில் நடக்கும் சட்டவிரோத செயல்களை தடுக்க நேர்மையான தனிப்படை காவல்துறையினரை நியமித்து  கண்காணித்தால் மட்டுமே  கொலை கொள்ளை வழிப்பறி திருட்டு போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும்
சமூக விரோதிகளை கண்டுபிடிக்க முடியும் அதுமட்டுமில்லாமல்  விரோதிகளிடமிருந்துபொதுமக்களை காப்பாற்ற முடியும் என்பது தான் நிதர்சனம்.
பொறுத்திருந்து பார்ப்போம்
புதிதாக பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ள தென் மண்டல ஐஜி மற்றும் மதுரை மாவட்ட கால் காவல் கண்காணிப்பாளரின் செயல்பாட்டை!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button