சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல் ஆணையரிடம் திரைப்பட தயாரிப்பாளர்கள் புகார்
சமீபகாலமாக மாலை முரசு யூடியூப் சேனலில் பயோஸ் கோப் நேர்காணல் என்ற நிகழ்ச்சி நடத்தி வரும் பயில்வான் ரங்கநாதன் திரைத்துறையில் இருக்கும் நடிகைகள் பற்றி அவர்களுடைய குடும்ப வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாக அவதூறு செய்தியை பரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தன.
இந்த நிலையில் திரைப்பட விழாக்களில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன் எச்சரிக்கை விட்டும் அவர் அதைப் பற்றி கவலைப்படாமல் பயில்வான் ரங்கநாதன் முன்னணி நடிகைகள் திரிஷா நயன்தாரா இவர்களின் வாழ்க்கையைப் பற்றி அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் பரப்பிக்கொண்டு வருகிறார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்துவிட்டு பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார் .
அப்போது பேசிய தயாரிப்பாளர் கே ராஜன்
சமூக வலைதளம் யூ டியூப் களில் தொலைக்காட்சி தொடர் மற்றும் திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகளை பற்றி கொச்சையாக பேசி அவதூறு பரப்பி வருவதாக. திரைப்பட நடிகர் மற்றும் பத்திரிக்கை நிருபர் பயில்வான் ரங்கநாதன் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் கே ராஜன் பழனிவேல் திருமலை ஆகியோர் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
எது எப்படியோ தொலைக்காட்சி தொடர்களில் மற்றும் வெள்ளித் திரை மற்றும் திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகள் ஒரு சிலர் அவர்கள் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களைப் பற்றி பொதுவெளியில் சமூக வலைதளங்களில் அவர்கள் மனது புண்படும் 6 கொச்சையாக அவதூறாக பேசுவது நாகரிகமற்ற ஆகையால் இது போன்ற சமூக வலைதளங்களில் பேசுவதை பயில்வான் ரங்கநாதன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.