மாநகராட்சி

சமூக விரோதிகளின் கூடாரமாக
கலைஞர் பேருந்து நிலைய அதி நவீன கட்டணமில்லா இலவச கழிப்பறை   கட்டிடம்! அச்சத்தில் சென்று வரும் பயணிகள்!
செயலிழந்து கோமாவில் இருக்கும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம்!

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் மாநகரின் பிரதான போக்குவரத்து மையமாக உள்ளது. நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதால் இரவு நேரங்களிலும் தூங்கா நகரம் போல் காட்சியளிக்கும்.

ஆகவே கடந்த அதிமுக ஆட்சியில் 2019 ஆகஸ்ட் மாதம் ‘சீர்மிகு நகரம்’ திட்டத்தின் கீழ்,
.38 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையமும் அதன் அருகாமையில் ரூ.18 கோடி மதிப்பீட்டில்

அடுக்குமாடி வாகன நிறுத்தம் வசதி, வணிக வளாகங்கள், மற்றும் மின் ஏணியுடன் கூடிய நடை மேம்பாலம் ,தரைத் தளம், முதல் தளம் என இரு தளங்களுடன் பிறைநிலா வடிவில் நவீன வடிவமைப்பில் நுழைவுவாயில்,
மின் விளக்கு வசதிகள், கழிப்பறைகள், ஓய்வு இருக்கைகள், பயணிகளுக்கான பொருட்கள் பாதுகாப்பு அறைகள், வாகன நிறுத்துமிடம்,நவீன வடிவமைப்பில் நுழைவுவாயில், கண்கவர் அலங்கார விளக்குகளும்
உலகத் தரத்தில் மறுசீரமைப்பு செய்து கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.


அதன் பின்பு 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது.
2022-ஆம் ஆண்டு நடைபெற்ற திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில்  பழைய பேருந்து நிலையத்திற்கு,

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட மேயர் தினேஷ்குமார் முன்மொழிந்த, பொதுத் தீர்மானத்தின் கீழ் நிறைவேற்றப்பட்டது.

2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் தேதி

கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் எனப் பெயரிடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு
திறக்கப்பட்டது.
திருப்பூர் மத்திய கலைஞர் பேருந்து நிலையத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட

கட்டண கழிப்பிட கழிவறைகள்
மற்றும் கட்டணமில்லா இலவச கழிப்பறைகள் இருக்கின்றன.
தற்போது

திருப்பூர் கலைஞர் பேருந்து நிலைய கட்டணமில்லா கழிப்பறை

கட்டணம் இல்ல இலவச கழிப்பறை முறையான பராமரிப்பு இல்லாமல் கதவுகள் இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின் விளக்குகள்   குழாய்கள் சேதமடைந்தும் , தண்ணீர் இல்லாமல்

சுத்தம் செய்யப்படாமல்
கடும் சுகாதாரமற்ற நிலையில்  துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல்    மின் விளக்குகள்  இல்லாததால் இரவு நேரங்களில்
கழிப்பறைகள் மது அருந்துவோர் மற்றும் சமூக விரோதிகளின் இடமாக மாறி  கழிப்பறை முழுவதும் மது பாட்டில்கள் மற்றும் கழிவு குப்பைகளால் துர்நாற்றம் வீசி வருகிறது.
இரவு நேரங்களில் வெளியூருக்கு செல்லும் மற்றும் வெளியூரிலிருந்து  பேருந்து நிலையத்திற்கு வரும் பெண் பயணிகள் இலவச கழிப்பறை கட்டிடத்தை தாண்டி செல்லும்போது அச்சத்துடனே சென்று வருகின்றனர். .  இது சம்பந்தமாக

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் எம்பி அமித்

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் எம்பி அமித் அவர்களிடம் நேரிலும் தொலைபேசியிலும் சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்தும்
திருப்பூர் மாநகராட்சி  நிர்வாகம் மெத்தனம் காட்டி  வருவதாகவும்
இதற்குக் காரணம் பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பிட கட்டிடங்களை ஏலத்திற்கு எடுத்துள்ள தனியார் நபர்கள் இலவச கழிப்பறை கட்டிடத்தை பராமரிக்க விடாமல் தடுத்து வருவதாகவும்
எனவே, உலகத் தரம் வாய்ந்த அதிநவீன முறையில் கட்டப்பட்டுள்ள திருப்பூர் கலைஞர் பேருந்து நிலையத்தில் பராமரிப்பின்றி உள்ள கழிப்பறையை  பயணிகள் நலன் கருதி திருப்பூர் மாநகராட்சி ஆணையர்  தூய்மையான பராமரிப்பின்றி கிடக்கும் கட்டணமில்லா கழிப்பறை கட்டிடத்தில் கதவுகள் மற்றும் மின்விளக்கு மற்றும் தண்ணீர் வசதிகளை ஏற்படுத்தி தர விரைந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொறுத்திருந்து பார்ப்போம் திருப்பூர் மாநகராட்சி ஆணையரின் செயல்பாட்டை.

Related Articles

Back to top button