சரியாக கட்சிப் பணி செய்யாத திமுக மாவட்ட செயலாளர்கள் சிலரை மாற்றப் போவதாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்!!

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றாலும் பேரூராட்சி நகராட்சி தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் பல மாவட்டங்களில் பல பேரூராட்சிகளில் பல நகராட்சிகளில் தலைமை அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து திமுக கட்சிக்குள்ளே வேறு நபரை தேர்ந்தெடுத்தவர்கள் மீது திமுக தலைமை கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இருந்தாலும் அப்படி மாவட்டத்திற்குள் கட்டுப்பாடில்லாமல் உட்கட்சி மோதல் இருக்க மாவட்டச் செயலாளர்கள் தான் பொறுப்பு என்று தலைமை கழகம் அறிவித்திருந்தது மாவட்ட செயலாளர்கள் கட்டுப்பாட்டில்தான் அனைத்து கட்சி நிர்வாகிகளும் இருக்கவேண்டும் அப்படி மாவட்ட செயலாளர் கட்டுப்பாட்டில் இல்லாத மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களை மாற்றி மறுசீரமைப்பு செய்ய

மே 28-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள் மறுசீரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினார். அதோடு, சரியாக கட்சிப் பணி செய்யாத மாவட்ட செயலாளர்களின் பதவி பறிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனால் பல மாவட்டச் செயலாளர்கள் பதவி பறிபோய்விடும் அச்சத்தில் பல அமைச்சர்கள் ஆதரவுடன் தலைமையிடம் சிபாரிசு கேட்டு அனுகியுள்ளதாக கூறப்படுகிறது.