மாவட்டச் செய்திகள்

சரியான திட்டமிடல் இல்லாமல் அரசு சார்பாக நடந்த உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாம்! வருத்தம் தெரிவித்த தேனி மாவட்ட ஆட்சியாளர்!?

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி தென்னை நாற்று பண்ணையில் அட்மா திட்டத்தின் கீழ் உயர் பயிர் வளங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சியினை வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாம் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராசன் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

அதன்பின்பு வேளாண் இடுபொருட்களையும் , வேளாண் உபகரணங்களையும் , பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்கள்.

அதன் பின்பு மாவட்ட ஆட்சியாளர் தென்னை நாற்று பண்ணையை சுற்றி ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக, இத்துறை சார்ந்த அலுவலர்கள், சுமார் நூற்றிற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் விவசாயிகள் என்று அழைத்து வரப்பட்டவர்களில் பல பேர் விவசாயிகள் அல்லாதவர்கள் என்றும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வந்ததைப் போல் அவர்களுக்கு பணம் கொடுத்து அழைத்து வந்து பங்கேற்கச் செய்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை எழுப்பி உள்ளனர். ஆனால் இது சம்பந்தமாக விசாரித்த போது ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டதால் கட்சியினர் ஒரு சிலரை பணம் கொடுத்து அழைத்து வந்திருக்கலாம் என்றும் தகவலை தெரிவித்தனர். ஆனால் நடந்த உண்மை என்ன என்று சரியாக தெரியவில்லை.

விவசாயிகளுக்கான அரசு நலத்திட்டங்களை அறிவிக்கும் போது அந்நிகழ்ச்சிகளுக்கு வரவழைக்கப்பட்டவர்கள் விவசாயிகள்தானா என்று அரசு அதிகாரிகள் மற்றும் அப்பகுதி விவசாய சங்கங்களின் நிர்வாகிகள்தான் உறுதி செய்ய வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் அரசு நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளர்களுக்கு முறையாக அழைப்பிதழ் விடுவதில்லை என்றும் அப்படியே அரசு விழாக்களில் கலந்து கொள்ளும் புகைப்பட கலைஞர்கள் செய்தியாளர்கள் மற்றும் தொலைக்காட்சி ஒளிப்பதிவார்கள் இவர்களுக்கு முறையான குடிநீர் மற்றும் உணவு மற்றும் போக்குவரத்து வசதி எதையுமே செய்து தராமல் தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் உள்ள செய்தி துறை வஞ்சித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தென்னை நாற்று பண்ணையில் நடந்த அரசு நிகழ்ச்சிக்கு கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் அனைவரும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மாவட்ட ஆட்சியாளர் காரில் புறப்படுவதற்கு முன்பு நேரில் சந்தித்து அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பத்திரிகையாளர்களிடம் தேனி மாவட்ட செய்தி துறை சார்பாக கடந்த பல வருடங்களாக முறையாக நடந்து கொள்வதில்லை என்றும் அரசு நிகழ்ச்சிகள் நடக்கும் எந்த இடத்திலும் பத்திரிகையாளர்களுக்கு செய்தி சேகரிக்கும் பொருட்டு முறையான இட வசதி ஓ

ஒதுக்கி கொடுப்பதில்லை குடிதண்ணீர் வசதி கூட செய்து தருவதில்லை என்ற குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளனர். அதைக் கேட்ட தேனி மாவட்ட ஆட்சியாளர் இனிமேல் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் இதுவரை நடந்ததற்கு வருத்தம் தெரிவித்ததாக தகவல் வந்துள்ளது.
இந்நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்த, முறையான திட்டமிடல் இல்லாமல் அவலநிலை ஏற்பட்டதற்கு செய்தித்துறை நிர்வாகம் தான் என்று கூறப்படுகிறது.
. எது எப்படியானாலும், தேனி மாவட்டத்தில் அரசு விழாக்களில் செய்தியாளர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் படிபடியாக குறைந்து கொண்டே வருவதாகவும் செய்தியாளர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாடு தலைமைச் செயலாளரும், தமிழ்நாடு செய்தித்துறை இயக்குநரும், தேனி மாவட்டத்தில் செய்தியாளர்களின் செய்தி சேகரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களும், சாதனைகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு சென்று சேரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button