சவாலாக இருக்கும் வழிப்பறிதிருடர்கள்! திணறும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலையம்!? நடவடிக்கை எடுத்து சாதனை படைப்பாரா தென் மண்டல ஐஜி!?
வாடிப்பட்டியில் இரவு நேரங்களில் வழிப்பறி மற்றும் விவசாய நிலங்களில் கிணற்றுக்களில் உள்ள மோட்டர் மற்றும் மோட்டார் மின்சாதனங்கள் திருடு போவதாக வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதாக தகவல் வந்துள்ளது.
நேற்று முன் தினம் இரவு தாதம்பட்டி டெம்பிள் சிட்டி ஹோட்டல் எதிரில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில் உள்ள மோட்டார் ரூமில் உள்ள மோட்டார் சாதனைகளை திருடர்கள் திருடி சென்று விட்டனர்.
வாடிப்பட்டி காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்துப் பணி மேற்கொண்டு வரும் நிலையில் காவல்துறையினருக்கு சவாலாக இருக்கும் திருடர்களின் கொட்டத்தை அடக்கி வாடிப்பட்டி காவல்துறையினர் சாதனை படைப்பார்களா!?
வாடிப்பட்டி சுற்றுவட்டாரத்தில் மாதத்திற்கு திருடு நடந்ததாக சுமார்பத்து புகார்கள் வாடிப்பட்டி காவல் நிலையத்திற்கு ப வந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அது மட்டும் இல்லாமல் வாடிப்பட்டி பைபாஸ் நான்கு வழிச் சாலையில் உள்ள சர்வீஸ் சாலை அருகே தோப்புக்குள் காலையிலிருந்து மர்ம நபர்கள் திறந்தவெளி மதுபான கூடமாக மாற்றி மது அருந்துவதும் கஞ்சா போன்ற போதைப் பொருள்களை பயன்படுத்தி கொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் வாடிப்பட்டி நகர்ப் புற சாலைகளில் குட்லாடம்பட்டி பிரிவு கச்சகட்டி பிரிவு பொட்டுலபட்டி பிரிவு மாதா கோவில் பின்புறம் மகாராணி நகர் மற்றும் வாடிப்பட்டி ரயில் நிலையம் செல்லும் காட் ஆஸ்பத்திரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்து பெண்களிடம் கழுத்தில் உள்ள நகைகளை பறித்து வழிப்பறி செய்து வருவது தொடர் கதையாக குறிப்பாக வாடிப்பட்டி காவல் நிலையம் முன்பு சில மாதங்கள் முன்பு வழிப்பறி நடந்தது அதேபோல் பொட்டில பட்டி பிரிவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடை நடத்தி வரும் பாமா என்ற பெண் நடந்து சென்ற போது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் கழுத்தில் அணிந்து இருந்த எட்டு கிராம் செயினை பறித்து கீழே தள்ளிவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த வழிப்பறி செய்வாது 20 வயதுக்குள்ள இளைஞர்கள் தான் அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் மது மற்றும் கஞ்சா போன்றவற்றிற்கு போதைக்கு அடிமையாகி இது போன்ற வழிப்பறிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
போதை ஆசாமிகள் தங்களுக்கு மது அருந்த கஞ்சா வாங்க பணம் இல்லை என்றால் இரவு நேரங்களில் கிணற்றுகளில் உள்ள மோட்டார்களை திருடி விற்று அந்தப் பணத்தில் கஞ்சா மற்றும் மதுபானங்களை வாங்கி பயன்படுத்துவதாகவும் தகவல் வந்துள்ளது. வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் சர்வீஸ் சாலையில் உள்ள முள் புதருக்குள் திறந்தவெளி மது கூடமாக பகல் நேரங்களில் மது பிரியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அதேபோல வாடிப்பட்டி சுடுகாடு அருகே சத்யா பால் பண்ணை சாலை செல்லும் வழியில் போதுமான மின்விளக்குகள் இல்லாததால் மதுபானங்களை வாங்கி வந்து சாலைகளில் உட்கார்ந்து கொண்டு திறந்தவெளி மதுபான கூடமாக பயன்படுத்தி வருவதால் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் அச்சத்துடன் சென்று வருவதாகவும் தகவல் இவை அனைத்தையும் வாடிப்பட்டி.காவல்துறையினர் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வாடிப்பட்டி சுடுகாடு அருகே உயர் கோபுர மின்விளக்கு வைக்க காவல்துறையினர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு வலியுறுத்தாமல் இருப்பது வேதனையாக இருக்கின்றது. மின்விளக்குகள் இல்லாமல் இருளாக காணப்படும் இடத்தில் மது அருந்தும் நபர்களுக்குள் சண்டை அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்குக் காரணம் காவல்துறையினர் தான் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏனென்றால் சுடுகாடு அருகே மூன்று டாஸ்மாக் கடைகள் இருப்பதால் தினந்தோறும் குறைந்தது ஆயிரத்துக்கு மேற்பட்ட மது பிரியர்கள் அந்த வழியில் சென்று அசம்பாவிதம் நடக்க ஏதுவாக உள்ள அந்த இடத்தில் மின்விளக்குகள் அமைக்காமல் பேரூராட்சி நிர்வாகம் சுணக்கம் காட்டுவது வேதனையாக உள்ளது.
ஆகவே வாடிப்பட்டி மற்றும் நான்கு வழிச்சாலை சுற்று வட்டார பைபாஸ் சாலையில் காவல்துறையினர் ரோந்துப் பணியை தீவர படுத்தினால் மட்டுமே வழிப்பறி செய்யும் திருடர்களிடமிருந்து பெண்கள் அச்சம் இல்லாமல் செல்வார்கள் அது மட்டுமில்லாமல் விவசாய நிலங்களில் இருக்கும் மோட்டார் சாதனங்களை பாதுகாக்க முடியும் . அது மட்டும் இல்லாமல் சில வருடங்களுக்கு முன்பு இருந்த கண்காணிப்பு கேமராக்கள் தற்போது பழுதடைந்து காணப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.என்பது தான் நிதர்சனம். ஆகையால் மதுரை சரக டிஐஜி மற்றும் தென் மண்டல ஐஜி அவர்கள் வாடிப்பட்டி சுற்றுவட்டாரத்தில் சவாலாக இருக்கும் வழிப்பறி திருடர்களை கூண்டோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.