சாலை போக்குவரத்து விதிகளை மீறி இரவு நேரங்களில் கனிம வளம் கடத்திச் செல்லும் டிப்பர் லாரிகள்! மாதம் பல லட்சம் லஞ்சம் வாங்கிகொண்டு கண்டுகொள்ளாத தாராபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் போக்குவரத்துகாவலர்கள்!
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கை பாயுமா!?
சாலை போக்குவரத்து விதிகளை மீறி இரவு நேரங்களில் கனிம வளம் ஏற்றுச்செல்லும் கனரக டிப்பர் லாரிகள்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சின்ன புதூரில் இரவு நேரத்தில் பயணிகள் பேருந்துக்காக காத்திருந்தபோது கனரக டாரஸ் டிப்பர் லாரி மோதி இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோக சம்பவம் மற்றும் சில பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இப்படி இந்தப் பகுதியில் இரவு நேரங்களில் கனிம வளம் எடுத்துச் செல்லும் கனராக வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது . இதற்குக் காரணம் இரவு நேரங்களில், கனரக டாரஸ் லாரிகளில் அதிக கொள்ளளவு கனிமங்கள் ஏற்றுக்கொண்டு தங்கு தடையின்றி, ஊர்வலம் போல் அணிவகுத்துச் செல்கின்றன.
இரவு நேரங்களில் கனிம வளங்களை கேரளாவுக்கு எடுத்துச் செல்ல அனுமதித்து விட்டு, அதன் பிறகு, குவாரிக்குச் சென்று, ‘சர்வே’ எடுக்கும் பணியை, கனிம வளத்துறையினர் மேற்கொள்கின்றனர். இதெல்லாம் ஏமாற்றும் வேலை.
அதேபோல் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக் காவலர்கள் மற்றும் போக்குவரத்து வட்டார அலுவலகத்தில் இருக்கும் வாகன ஆய்வாளர் யாரும் வாகனங்களை சோதனை இடுவதில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்காக கனிம வளம் ஏற்றுச் செல்லும் கனரக டிப்பர் லாரிகளின் உரிமையாளர்களிடம் மாதம் கணிசமான தொகையை பெற்றுக் கொள்வதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் தாராபுரம் பகுதியில் அடிக்கடி இரவு நேரங்களில் விபத்து ஏற்படுவதற்கு காரணம் என்ன என்று அப்பகுதி மக்கள் கூறியது. கனிம வளம் எடுத்துச் செல்லம் கனரக டிப்பர் லாரி ஓட்டுநர்கள் சாலை விதிகளை மதிக்காமல் அலட்சியமும் அவசரம் தான் இதற்கு காரணம்!சாலையில் வாகனங்களை இயக்கிக் கொண்டு போகும் போது தாறு மாறாக இயக்கி விதிகளை மீறுகிறவர்களைக் சாலைப் போக்குவரத்து காவலர்கள் கண்டும் காணாமல் அலட்சியப் போக்கை கடைபிடித்து வருகிறார்கள் .
இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவது பகலில் ஓட்டுவதைக் காட்டிலும் சவாலானது மற்றும் ஆபத்தானதாகும்.இரவு நேரங்களில் கிரவல் மண் கொண்டு செல்லும் கனரக டிப்பர் லாரி ஓட்டுநர்கள் தூக்க கலக்கத்தில் லாரியை இயக்குவதால் விபத்து ஏற்படுகிறது . நிதானமான வேகம் நான்கு மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வாகனத்தை ஓட்டக் கூடாது. போக்குவரத்து விதிகளை ஒழுங்காக கடைப்பிடித்தல் தூக்கம் வரும் பொழுது வாகன காப்பக இடங்களில் நிறுத்தி ஒரு மணி நேரம் தூங்கி பின் வாகனத்தை எடுத்துச் செல்ல வேண்டும் ஆனால் இதையெல்லாம் எந்த கனரக வாகன ஓட்டுனர்களும் கடைப்பிடிப்பதில்லை என அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.கனரக வாகனமான லாரிகளை இரவு நேரங்களில் நெருங்கிய வண்ணம் பின் தொடர்ந்து செல்ல கூடாது ஏனெனில் பெரும்பாலான லாரிகளில் பிரேக் லைட் எரியாது, சாலை விபத்து ஏன் ஏற்படுகிறது என நினைக்கிறீர்கள்?
வாகணத்தின் அதி வேகம், இடத்திற்கு தகுந்தபடி வாகணத்தின் வேகத்தை கட்டுப்படுத்தாதது, இடது வலது என்பதை சரியாக கடைபிடிக்காதது, கவணமின்றி முந்திச்செலவது, தேவையான சமயத்தில் போக்குவரத்து சைகைகளை சரியாக செய்யாமல், அல்லது கவணிக்காமல் இருப்பது, சாலையில் குறிப்பிட்டிருக்கும் விதிகளை மீறிச்செல்வது, சாலையை கவணிக்காமல் கைபேசி அல்லது வேறு கவணத்தில் இருப்பது, மதுவருந்தி நிதானமின்றி செல்வது, மோசமான வாகனப்பராமரிப்பு, சாலைகள் சரியான பராமரிப்பின்றி மோசமாய் இருப்பது இப்படி பல காரணங்கள்.தெரிந்தே செய்கின்ற விதி மீறல்களாலும், கவணமின்றி செயல்படுவதாலும் தான் தாராபுரம் பகுதியில் அடிக்கடி விபத்து நடந்து கொண்டு இருக்கிறது. சாலைகளை மேலும் பாதுகாப்பானதாக ஆக்க என்ன சாலை விதியை மாற்ற வேண்டும்.
நெடுஞ்சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போக்குவரத்து காவலர்கள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் ஆகியோர் மாலை 5 மணிக்கு மேல் வீட்டுக்கு சென்று விடுகிறார்கள் என்றும் இதனால் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இரவு நேரங்களில் அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் சூப்பர் லாரிகளில் கிரவல் மண் எடுத்து சொல்வதுதான் முக்கிய காரணமே என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கிறார்கள் .
இவற்றையெல்லாம் தடுக்க வேண்டிய தாராபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் தாராபுரம் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் கண்டும் காணாமல் தங்களுக்கு சேர வேண்டியதை கேட்டு பெற்றுக் கொண்டு இருப்பதாகவும் அதனால் டிப்பர் உரிமையாளர்கள் இரவு பகலாக கனிம வளங்களை கடத்திச் செல்ல டிப்பர் லாரிகளே பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
பொது மக்களின் நலன் கருதி இரவு நேரங்களில் சட்டவிரோதமாக கனிம வளங்களை எடுத்துச் செல்லும் டிப்பர் லாரிகளை ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்து லாரிகளை பறிமுதல் செய்ய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற விபத்துகளை தடுக்க முடியும் என்பதை அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
ஆனால் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரரின் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மட்டும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் நடவடிக்கையை பொறுத்திருந்து பார்ப்போம்.