சிலைகள் திருடிய 6 நபர்களை அதிரடியாக கைது செய்த வாடிப்பட்டி காவல் ஆய்வாளர்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் உள்ள குட்லாடம்பட்டி கிராமத்தில் இருக்கும் அண்ணாமலையார் சிவன் கோவிலில் சில நாட்களுக்கு முன்பு இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் சென்று நான்கு ஐம்பொன் சிலைகளை திருடி சென்றார்கள்.
ஐம்பொன் சிலைகளை திருடியது கோவிலில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் வாடிப்பட்டி காவல்துறையினர் திருடிய நபர்களை காவல்துறை தேடி வந்த நிலையில் சிலை திருடிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் இருந்த நிலையில்
தற்போது வாடிப்பட்டி காவல் ஆய்வாளராக ராதாமகேஷ் பொறுப்பேற்று சில நாட்களே ஆன நிலையில்
ஒரு வருடமாக வாடிப்பட்டி சுற்று வட்டாரத்தில் பல திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் துரித நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் ஆய்வாளர் ராதா மகேஷ் செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் கோவில் சிலைகள் திருடிய நபர்களை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் கோவிலில் திருடிய சிலைகளுடன் ஆறு நபர்கள் பிடிபட்டனர் .இதையடுத்து அந்த நபர்களிடம் இருந்த சிலைகளை கைப்பற்றி அந்த நபர்களை விசாரணை செய்து கைது செய்து சிறைக்கு அனுப்பினார் வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் ராதா மகேஷ்.
சிலைகள் திருடிய நபர்கள் பெயர் முகவரி
1.முகமது மைதீன் வயது 42 s/o செய்யது புகாரி
வடக்கு ஆத்தூர்
திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டம்.
2. இயேசு அகிலன் வயது 29 s/தொம்மை
வடக்கு ஆத்தூர் திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டம்
3. ஐகோர்ட் துறை வயது 29 s/o மூக்காண்டி பழையகாயல் தூத்துக்குடி மாவட்டம்
4. சென்னை (எ) அங்கப்பன் வயது 19 s/o சின்னச்சாமி வி . கள்ளபெட்டி காலனி உசிலம்பட்டி
5. அபினேஷ் குமார் வயது 20 s/o இசக்கிமுத்து பழையகாயல் மஞ்சள் நீர் காயல் தூத்துக்குடி மாவட்டம்
6. கேசவன் வயது 19 s/o ரவீந்திரன் வடக்குத்தெரு
.
இந்த திருட்டு வழக்கில் திருடர்களை கண்டுபிடிக்க உதவி ஆய்வாளர் மற்றும் வாடிப்பட்டி காவல் நிலைய காவலர்கள் உதவியாக இருந்தனர்.
கோவில் ஐம்பொன் சிலை திருடர்களை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தற்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் பாராட்டியுள்ளார்