சூலூர் RVS பல் மருத்துவ கல்லூரி நிர்வாக டார்ச்சரால் நான்காம் ஆண்டு மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை!?
கோவை சூலூர் கன்னம் பாளையம் RVS மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவ படிப்பு நான்காம் ஆண்டு படிக்கும் சக்தி பிரியா (வயது 21)21/07/23 அன்று கல்லூரியில் உள்ள விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
22/07/23 அன்று இந்த மாணவிக்கு பிறந்தநாள் என்றும் இவருடைய தந்தை பெயர் சதாசிவம்.சொந்த ஊர்
கிர்ஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை என்ற தகவல் வந்துள்ளது.
இது சம்பந்தமாக இந்த கல்லூரியில் படிக்கும் ஒரு சில மாணவியரிடம் விசாரித்த போது கல்லூரி நிர்வாகம் கண்டிப்பு என்ற பெயரில் மாணவர்களிடம் மிக மோசமான முறையில் நடந்து கொள்வதாகவும் கல்லூரி HOD யாக இருக்கும் யசதோ அவர்கள் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு மாணவர்களை மிகவும் துன்புறுத்தி வருவதாகவும் தற்போது இந்த மாணவியையும் கல்லூரி நிர்வாகம் அழைத்து கண்டித்ததாகவும் அதை தாங்க முடியாத மாணவி மன உளைச்சலில் இருந்ததாகவும் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வந்துள்ளது. எதற்கு மாணவியை கல்லூரி நிர்வாகம் கண்டித்தது என விசாரித்த போது தற்கொலை செய்து கொண்ட மாணவி உடன் படிக்கும் மாணவர்களிடம் மருத்துவ உபகரணங்கள் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார் அதில் ஏதோ மருத்துவ உபகரணம் காணாமல் போனதாகவும் அந்த மருத்துவ உபகரணம் கொடுத்த மாணவர் தகாத வார்த்தையில் இந்த மாணவியை திட்டியதாகவும் இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வந்துள்ளது.
அது மட்டுமில்லாமல் ஆர் வி எஸ் கல்லூரி நிர்வாகத்தில் பணியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் மாணவர்களை கண்டிப்பு என்ற பெயரில் மிக மோசமாக முறையில் நடந்து தொடர்ந்து இது போன்ற தற்கொலை முயற்சிகளில் மாணவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகளை பிடிக்காத பல மாணவ மாணவிகள் பாதியிலேயே கல்லூரியை விட்டு சென்றுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. இந்த தற்கொலையால் கல்லூரி மாணவர்கள் மிகவும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் சனி, ஞாயிறு இரண்டு நாட்களுக்கு சொந்த ஊருக்கு சென்று வரும் மாணவர்களை யாரையும் கல்வி நிர்வாகம் வெளியில் விடவில்லை என்றும் தகவல் தற்கொலை சம்பந்தமாக பள்ளி நிர்வாகம் வெளியில் வராமல் கவனமாக பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.நான்காம் ஆண்டு படிக்கும் மாணவி தற்கொலை செய்ததற்கு காரணம் என்ன என்று பல கோணங்களில் சூலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மாத்தையன்
உதவி ஆய்வாளர் அய்யாசாமி அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் மாணவி தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவரும்!
அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..