கோலிவுட் சினிமா

செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்கள் பற்றிய உண்மை சம்பவம் தான் “ஃபைண்டர்”

நடிகர் சார்லி நடித்த ஃபைண்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகர், இயக்குநர் எஸ் ஜே சூர்யா ஆகியோர் வெளியிட்டனர்.

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்” (கண்டுபிடிப்பாளர்)

ஜெயிலில் நடக்கும் சம்பவங்களின் பின்னணியில் சார்லி நிற்கிறார்., ஒரு திரில்லர் திரைப்படத்திற்கான அத்தனை அம்சங்களும் நிறைந்த திரைப்படமாக உருவாகியுள்ளது.

அமெரிக்கா நாட்டில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பெற்றுத்தரும் நிறுவனத்தை பற்றிய உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையை மையமாக வைத்து கதையின் பின்னணியில்  இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்கள் இருக்கையின் நுனியில் உட்கார்ந்து பார்க்க வைக்கும் அளவிற்கு திரில்லராக உருவாகி வருவதாக இப்படத்தில் இயக்குநர் வினோத் ராஜேந்திரன் கூறினார் அது மட்டும் இல்லாமல்,  இப்படத்தில் முக்கியமான வேடத்திலும் இயக்குனர் நடித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

நடிகர் சார்லி கதையின் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார்.  இவர்களுடன் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர் நடிகை பிரானா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.  இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள  பகுதிகளில்  படப் பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு  குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப குழு விபரம்

தயாரிப்பு நிறுவனம் – Arabi production  & Viyan ventures
தயாரிப்பாளர்கள் – ரஜீப்  சுப்பிரமணியம் &  வினோத் ராஜேந்திரன்
இயக்கம் – வினோத் ராஜேந்திரன்
ஒளிப்பதிவு – பிரசாந்த் வெள்ளிங்கிரி
எடிட்டர் – தமிழ் குமரன்
கலை இயக்கம் – அஜய் சம்பந்தம்
இசை – சூர்ய பிரசாத்
மக்கள் தொடர்பு – சுல்தான் ராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button