காவல் செய்திகள்

சேலம் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட  பகுதிகளில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் பிரபல ரவுடிகள் 19 பேரின் பெயர்கள் ( ஹிஸ்ட்ராய் ஷீட்)  (H S)  வரலாற்றுக் குறிப்பேட்டில் மாயமானதாக அதிர்ச்சி தகவல்!
தமிழக டிஜிபி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பாரா!?

சேலம் நகரத்திற்குட்பட்ட பகுதிகளில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் 19 ரவுடிகளின் பெயர்கள்( ஹிஸ்ட்ராய் ஷீட்)  (H S)  வரலாற்றுக் குறிப்பேட்டில் மாயமானதாக அதிர்ச்சி தகவல்!
தமிழக டிஜிபி நடவடிக்கை எடுப்பாரா!?
.


தமிழகம் முழுவதும் 1,296 சட்டம் – ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்கள், 196 பெண் போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.
தமிழக முழுவதும் உள்ள காவல் நிலையங்களில்
தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வரும் ரவுடிகளின் பெயர் மற்றும் அவர்கள் செய்த குற்றங்களின் வரலாற்று பட்டியல் அடங்கிய ஹிஸ்ட்ராய் ஷீட்  (H S) என அழைக்கப்படும் புத்தகத்தை  காவல்துறையால் பராமரிக்கப்படுகிறது .
சேலம் காவல் நிலையங்களில் உள்ள
(H S) (ஹிஸ்ட்ராய் ஷீட் )வரலாற்றுத் தாள்கள் அடங்கிய ரவுடி பட்டியலில் இருந்து 19 ரவுடிகளின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முக்கியமாக   
தமிழகத்தில், அரசு நிதி ஒதுக்கீட்டில் பற்றாக்குறை, காலதாமதம் ஏற்படுத்தும் நிர்வாக நடைமுறை, அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாதது உள்ளிட்ட காரணங்களால், ஒரு சில காவல் நிலையங்களில் பராமரிப்பு செலவு என்ற பெயரில் நூதன முறையில் லஞ்ச முறைகேடு
கள் அதிகரித்து இருப்பதாகவும் அதுமட்டுமில்லாமல்
ஒரு சிலர் காவல் நிலையங்களில் ஒரு சில காவல்துறையை அதிகாரிகள் ‘லஞ்சம், மாமூல் வாங்கிய பணத்தில் காவல் நிலையத்தில் பராமரிப்பு செலவுகளை செய்து வருவதாகவும் காவலர்கள் பரவலாக பேசுவதையும் நம்மால் காண முடிகிறது.
குறிப்பாக ஒரு காவல் நிலையத்தின் பராமரிப்பு செலவு  மாதம் குறைந்தது 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என காவல் நிலைய ஆய்வாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
இது போன்ற பராமரிப்பு செலவுகளுக்காக புகார் கொடுக்க வரும் புகார்தாரர்களிடம் மற்றும் சாலையோர வியாபாரிகள் மற்றும் வணிக வளாகங்கள் மற்றும் ஹோட்டல் தனியார் விடுதிகள் போன்ற உரிமையாளர்களிடம் மாதம் ஒரு தொகை கையூட்டாக பெறப்படுகிறது என சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் டாஸ்மார்க் கடை 10 மணிக்கு மோடி மறுநாள் 12 மணிக்கு திறப்பதற்கு முன்பு வரை விதிமுறைகளை மீறி சப்தவிரோதமாக இரவு 10.00 மணிக்கு மேல் செயல்படும் ‘டாஸ்மாக்’ பார்களில் இருந்து மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு சில காவல்துறையினர் மாமுல் வசூலித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் தற்போது பாஸ்போர்ட் கேட்டு ஆன்லைனில் பதிவு செய்தவர்களிடம்
விசாரணை செய்யும் காவல்துறையினர்  ஒரு சில நேரங்களில் சுமார் 1000 ரூபாய்  லஞ்சம் வாங்குவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை வைக்கின்றனர்.
இது போன்ற செயல்களில் தமிழகத்தில் உள்ள ஒரு சில காவல் நிலையங்களில் ஒரு சில காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு சேலம் மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


சேலம் மாநகரக் காவல்துறைக்குக்கீழ் 15-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் இருந்துவருகின்றன. இதில், மகளிர் காவல் நிலையமும் அடக்கம்

இந்த நிலையில், ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் பொறுப்பாளராக இன்ஸ்பெக்டர், உதவி ஆணையர் என்று இருந்தாலும், காவல் நிலையங்களில் நடக்கக்கூடிய நேரடி விஷயங்களையும், மறைமுக விஷயங்களையும் மாநகர காவல் ஆணையரின் கவனத்துக்குக் கொண்டுசெல்வது நுண்ணறிவுப் பிரிவு எனும் ஐ.எஸ் `இன்டெலிஜென்ஸ் செக்‌ஷன்’தான். இந்தப் பிரிவு, மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் இயங்கிவருகிறது.

இந்த நுண்ணறிவுப் பிரிவை தமிழகமெங்குமுள்ள மாநகர காவல்துறையில் கொண்டு வந்ததற்கான காரணமே, ஒவ்வொரு காவல் நிலையத்திலுமிருந்து வரக்கூடிய தகவல்கள் சரியாக வருவதில்லை. குற்றச் சம்பவங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை, தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பிரிவு கொண்டுவரப்பட்டது..

இதற்கென தனி உதவி ஆணையர், இன்ஸ்பெக்டர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். இவர்களுக்குக்கீழ் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஐ.எஸ் என்ற காவலர்கள் மஃப்டியில் இருந்துகொண்டு, தகவல்களைச் சேகரித்து அனுப்புவார்கள். இந்த நிலையில், சேலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கண்ட ஐ.எஸ் பிரிவில் இன்ஸ்பெக்டர் பதவி நிரப்பப்படாமல் இருந்துவந்தது. `மூன்று ஆண்டுகளாக காலியாக இருந்த ஐ.எஸ் இன்ஸ்பெக்டர் பதவி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு நிரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.சேலம் மாநகர் பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும் பொதுமக்கள் அச்சம் இன்றி வாழவும் மாநகர காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.சேலம் மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியில் இருக்கும் தலைமை காவலர்கள் மூலம் மாமுல் வசூல் செய்து வரும் பணத்தில்
சேலம் மாநகரத்தில் உள்ள காவல் உயர் அதிகாரிகள் அனைவருக்கும்
பகிர்ந்து கொடுக்கப்படுகிறது என தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வரும் நிலையில் மாமுல் வசூல் செய்த பணத்தில் ஒரு
குறிப்பிட்ட தொகை மட்டும் காவல் நிலையத்தில் பராமரிப்பு  செலவுக்காக செலவு செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது எல்லாம் எல்லா காவல் நிலையங்களும் வழக்கமாக நடப்பது தான் என்றும் சேலம் மாநகர காவல் நிலையங்களில் பல லட்சங்கள் கையூடாக பெற்றுக்கொண்டு சமூகத்தையே சீர்குலைக்கும் அளவுக்கு குற்றச் செயல் நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர். இது சம்பந்தமாக  சேலம் மாநகர காவல் துறையில் பணியாற்றும் ஒரு சில நேர்மையான அதிகாரிகளிடம் விசாரித்த போது அவர்கள் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


தமிழக முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல்துறையினர் குற்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என
தமிழக முதல்வர் அடிக்கடி காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் இல்லாமல் தமிழக டிஜிபி தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு
லஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் ஒரு சில காவல்துறை அதிகாரிகள் இருக்கும் வரை
லஞ்சம், மாமூல் முறைகேடுகள் எப்படி ஒழியும்? என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பி உள்ளனர்.
ஒரு சில நேர்மையான காவல்துறை அதிகாரிகள் லஞ்சம், மாமூல் வாங்கவும் மாட்டார்கள் . அதேபோல் வாங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டார்கள்.
ஒரு சில காவல்துறை உயர் அதிகாரிகள்  தன்னைத் தேடி வந்து கொடுக்கும் மாமூல், லஞ்ச பணத்தை வாங்கிக் கொள்வதில் தயக்கம் காட்ட மாட்டார்கள் .
ஒரு சில காவல்துறை அதிகாரிகள் எதற்கெடுத்தாலும் பணம் இல்லாமல் எந்த வேலையும் செய்வதில்லை என ஒரு கொள்கை பிடிப்போடு இருப்பார்கள்.
இதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு
சேலம் மாநகர காவல் நிலைய
எல்லைக் குட்பட்ட அயோத்தியா பட்டணம், வலசையூர், வீராணம், அம்மாபேட்டை, வரகம்பாடி, மாசிநாயக்கன்பட்டி, காரிப்பட்டி ஆகிய பகுதிகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தல் போன்ற பல்வேறு சம்பவங்களில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த  ரவுடிகளின் குற்ற பட்டியல் ( H S)
(ஹிஸ்ட்ராய் ஷீட் ) வரலாற்றுக் குறிப்பு
களை, சேலம் மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல் துணை ஆணையர் ஆகியோருக்கு 
குறிப்பு கோப்புகளை அனுப்பாமல் மறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும்
வரலாற்று குறிப்பு பட்டியலில் உள்ள 19 ரவுடிகளின் பெயர்களை
பட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும்
இது சமூகத்தையே சீர்குலைக்கும் செயலாகும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டால் சேலம் மாநகரத்தில் பொதுமக்கள் மத்தியில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாநகர காவல் ஆணையர்


19 ரவுடிகளின் பெயர்கள் நீக்கப்பட்டது சம்பந்தமாக

சேலம் மாநகர துணை காவல் ஆணையர்
உதவி காவல் ஆணையரிடம் விசாரணை நடத்தியதாகவும்
விசாரணையில், ” ரவுடிகளின் பெயர்களை
வரலாற்று பதிவேட்டில் இருந்து
  நீக்க அதிகாரம் இருப்பதாக” துணைக் காவல் ஆணையரிடம்

உதவி ஆணையர் விசாரணையில் சர்வ சாதாரணமாக கூறியதாகவும்
19 ரவுடிகளின் பெயர்களை வரலாற்று பதிவேட்டில் இருந்து நீக்கம் செய்ததற்கு சேலம் தர்மபுரி மாவட்ட பொறுப்பில் உள்ள அரசியல் கட்சியின்  முக்கிய பிரமுகர்களின் அழுத்தமும் ஒரு காரணமாம் . இந்த விஷயத்தை துணை காவல் ஆணையர் சேலம் மாநகர காவல் ஆணையரிடம்   அப்படியே தெரிவித்ததாகவும் உடனே உதவி காவல் ஆணையரை சேலம் மாநகர காவல் ஆணையர்  நேரில் விசாரணைக்கு வரும்படி கூறியுள்ளார். அதன்படி உதவி காவல் ஆணையர் விசாரணைக்கு சென்றபோது காவல் உதவி ஆணையரை சேலம் மாநகர காவல் ஆணையர்
கடுமையாக எச்சரித்து அனுப்பியதாக சேலம் மாநகர காவல் ஆணையர்  அலுவலகத்தில் உள்ள நேர்மையான காவல்துறை அதிகாரிகள் பரவலாக பேசி வருகின்றனர்.
இது சம்பந்தமாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறும்போது சேலம் மாநகர காவல் உதவி ஆணையர்
செல்வம், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். அதனால் தனது சமூகத்தினரான வக்கீலும், ஆளுங்கட்சி கவுன்சிலர் பிரமுகர் மற்றும் அயோத்தியா
பட்டணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆகியோருடன் சேர்ந்து,
முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும்
தமிழக காவல்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்
  “எப்.ஐ.ஆர், சி.எஸ்.ஆர் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளிட்டவை எந்த ஒரு மனுக்கள் மீதும் காவல்துறை விசாரணையும் நடத்தக் கூடாது. பணத்தகராறு, சொத்து தகராறு, வழித்தட தகராறு போன்ற சிவில் விவகாரங்களில் தலையிடுவதை போலீசார் தவிர்க்க வேண்டும். சிவில் விவகாரங்களில் தலையிடுவது அவசியம் என கருதினால் மாவட்ட எஸ்.பி அல்லது காவல் ஆணையர்களிடம் முன் அனுமதி பெற வேண்டும். உரிய ஒப்புதல் இன்றி விசாரணை மேற்கொண்டால் சட்ட விரோதமாக கருதப்படும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் ” என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது ஆனால்
அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்ட சேலம் மாநகர காவல் காவல் உதவி ஆணையர் செல்வம் நிலம் மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட எந்த புகாராக இருந்தாலும்  விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து அதற்கான பெரும் தொகையை கையொட்டாக பெற்று வருவதாகவும் சேலம் மாநகர காவல் உதவி ஆணையராக பொறுப்பேற்ற ஐந்து மாதங்களில் எஸ்.சி., எஸ்.டி.பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அது மட்டுமில்லாமல் வரகம்பாடி, வீராணம், காரிப்பட்டி பகுதிகளில் சட்டவிரோதமாக இரவு நேர சீட் விளையாடும் கிளப் வந்து வருவதாகவும் அம்மாபேட்டை, வீராணம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடப்பதாகவும் பல புகார்கள் சமூக ஆர்வலர்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை உயர் அதிகாரி செல்வம் கண்டு கொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அது மட்டுமில்லாமல், கடந்த 15 நாட்களுக்கு முன் கைலாஷ் மானசரோவர் பள்ளியில் நடந்த நடிகர் விஜய் ஆண்டனி பாடல் நிகழ்ச்சி காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் நடக்க இருப்பதாக  சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர் அதன் பின்பு உரிய அனுமதி பெறாமல் நடக்க இருந்த பாடல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பல லட்சங்கள் கையூடாக  பெற்றுக் கொண்டு உரிய அனுமதியை காவல்துறை அளித்துள்ளது எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர்களின் இந்தக் குற்றச்சாட்டுகளின் மீது சேலம் மாநகர காவல் ஆணையர்
விஜயகுமாரி உண்மைத்தன்மை அறிய நேர்மையான காவல் உயர்வு அதிகாரிகளை நியமித்து உரிய விசாரணை மேற்கொண்டு சட்டவிரோதமாக நடக்கும் லாட்டரி விற்பனை சட்டவிரோதமாக நடக்கும் சீட் கிளப்  ஆகியவற்றை நிரந்தரமாக நிறுத்த நிறுத்த வேண்டும் அது மட்டும் இல்லாமல் சேலம் காவல் உதவி ஆணையருக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளை கண்டுபிடிக்க தனிப்படை காவல்துறை அமைக்க வேண்டும் அது மட்டுமில்லாமல்
ரவுடிகளின் பட்டியலில் இருந்து 19 ரவுடிகளின் பெயர் பட்டியலை நீக்கியதாக
சேலம் மாநகர காவல் உதவி ஆணையர் செல்வத்தின் மீது வந்துள்ள குற்றச்சாட்டின் மீது நேர்மையான முறையில் விசாரணை நடத்தி உண்மை தன்மை அறிந்து
நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button