சோதனைக்கு வராமல் இருக்க லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளருடன் சேலம் நட்சத்திர ஓட்டலில் டீலிங் பேசிய சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர்!அதிர்ச்சி தகவல்! நடந்தது என்ன!?
லஞ்ச ஊழல் முறைகேடு அதிகம் நடக்கும் அரசு அலுவலகங்களில்
பத்திரப்பதிவு துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், வருவாய்த்துறை அலுவலகம் ஆகிய மூன்று அலுவலகங்களில் முதல் இடத்தில் உள்ள
பத்திர பதிவு துறை அலுவலகம் என்பது யாராலும் மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது! தமிழகம் முழுவதும் 450க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் புயல் ,மழை வெயில் எதுவாக இருந்தாலும் பத்திரங்களை பதிவு செய்ய கடன் வாங்குவதற்கு வங்கிகளுக்கு சொத்துக்களை அடமான பத்திரம் செய்து தருவது போன்ற பணிகள் தடையில்லாமல் நடந்து கொண்டிருப்பது தான் நிதர்சனம். அதேசமயம் பத்திரப்பதிவு அலுவலகம் இருக்கும் இடங்களில் பத்திர எழுதும் அலுவலகங்கள் குறைந்தது பத்துக்கு மேற்பட்டதாக இருக்கும். அந்த அலுவலகங்களில் தான் பத்திரங்களை ஸ்கேன் செய்வது ஆன்லைனில் பணம் கட்டுவது அனைத்து வேலைகளையும் பொதுமக்கள் நம்பி கொடுக்கின்றனர்.
இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் இடைத்தரகர்கள் சொத்துக்களின் மதிப்பிற்கு ஏற்றவாறு ஒரு தொகையை வாங்குகிறார்கள். அப்போது வாங்கும் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகை சார்பதிவாளர்களுக்கு என்று சொல்லியே வாங்குகிறார்கள் என சார் பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில் பரவலாக பேசப்படுகிறது. இதில் குறிப்பாக தமிழக முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் கணக்கில் வராமல் வாங்கும் பணத்தில் மாதம் 10 லட்சம் ரூபாய் வரை பத்திரப் பதிவு துறை அமைச்சர் அலுவலகத்திலிருந்து வருவதாக கூறி ஒரு குழு வாங்கி செல்வதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.
ஆனால் அது உண்மையா இல்லையா என உறுதியாக தெரியவில்லை என்றும் ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்!
அது ஒரு புறம் இருக்க சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிகப்படியான முறைகேடுகள் நடப்பதாகவும், லஞ்சம் வாங்கபடுவதாக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவுக்கு புகார்கள் தொடர்ந்து வருவதன் அடிப்படையில்
சி பி சி ஐ டி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு ஐஜி அபய் குமார் ஐபிஎஸ் உத்தரவின் பேரில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை தொடர்ந்து மேற்கொண்டு அப்படி சோதனை மேற்கொள்ளும் போது சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டு அந்த சார் பதிவாளர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக
தீபாவளிக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனை தமிழக முழுவதும் பரவலாக கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு இயக்குநரகம், கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவு செய்த வழக்குகளின் புள்ளிவிவரங்களை ஆராய்ந்ததில் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, 2023 – 24ஆம் ஆண்டில் 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விரிவான விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குறைந்தது 100 ஊழியர்கள், அதிகாரிகள் மீது வழக்குகள் பதியப்படுகின்றன. ஆனால் தீபாவளிக்கு முன்பு தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் வருவாய்த்துறை அலுவலகம் போன்ற முக்கிய அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்திய நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் செல்லவில்லை என்றும்.குறிப்பாக
சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தின் வழியை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மறந்து விட்டார்களோ என சமூக ஆர்வலர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் முருகன் சூரமங்கலம் சார்பதிவாளர் சம்பத் ஆகிய இருவரும் நெருக்கமாக இருப்பதாகவும் அதனால் தான லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்யவில்லை என பத்திரப் பதிவு துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. இது உண்மையா என அப்பகுதியில் கள ஆய்வு செய்தபோது திடுக்கிடும் அதிர்ச்சி தகவலை ஒரு சில தெரிவித்தனர். அந்த தகவல் என்னவென்றால்
லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் முருகன் மற்றும் சார்பதிவாளர்
சம்பத் இருவரும் சேலம் ஜங்ஷன் ரோட்டில் உள்ள சிவராஜ் இன் தனியார் நட்சத்திர ஹோட்டலில் ரகசியமாக சந்திப்பு நடந்ததாகவும் இந்த சந்திப்பில் மாதம் மாதம் ஒரு பெரிய தொகை கொடுத்து விடுவதாகவும் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு சில சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சோதனைக்கு வர வேண்டாம் என்றும்
டீலிங் பேசி முடித்து சூரமங்கலம் சார் பதிவாளர் மூலம் ஒரு பெரிய தொகையை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி முருகனுக்கு கொடுத்திருப்பார்களோ என்றும் அதனால் தான் தீபாவளிக்கு முன்பு அனைத்து அரசு அலுவலகங்களுக்குச் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சோதனை செய்ய வரவில்லையோ என சந்தேகம் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் மத்தியில் தகவல் தெரிவிக்கின்றனர். உண்மையிலேயே லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் முருகன் மற்றும் சூரமங்கலம் சார்பதிவாளர் சம்பத் ஆகிய இருவரும் சிவராஜ் இன் ஹோட்டலில் ரகசியமாக சந்தித்து டீலிங் பேசினார்களா என சேலம் ஜங்ஷன் அருகே உள்ள சிவராஜ் இன் நட்சத்திர ஹோட்டலின் நுழைவாயிலில் மற்றும் ரெஸ்டாரன்ட் ஆகிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தால் மட்டுமே இரண்டு பேருக்கும் நடுவில் டீலிங் நடந்ததா இல்லையா என விடை தெரிய வரும் என்றும் அது மட்டுமல்லாமல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி முருகனை சந்திப்பதற்கு சார் பதிவாளர் சம்பத் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் முருகனிடம் பர்சனல் தொலைபேசி எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு பேசிவிட்டு தான் ஹோட்டலுக்கு சந்திக்க செல்வார் என்றும் தகவலை தெரிவிக்கின்றனர். ஆகவே லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் முருகன் மற்றும் சார் பதிவாளர் சம்பத் ஆகிய இருவரும் பயன்படுத்தும் பர்சனல் செல்போன் நம்பரில் இருந்து பேசிய தரவுகளை லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டால் நடந்தது என்ன என்ற உண்மை வெளிச்சத்திற்கு தெரிய வரும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மங்கை சூதகமானால் கங்கையில் குளிக்கலாம்! ஆனால், கங்கையே சூதகமானால் என்ன செய்வது என்ற பழமொழிக்கு ஏற்றார் போல்
ஒரு சில அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் பிடித்து கைது செய்த பின் அந்த அதிகாரிகள் வெளியே வந்தபின் லஞ்சம் வாங்கினேன் கைது செய்தார்கள். லஞ்சம் கொடுத்தேன்
விட்டு விட்டார்கள் என பொது வழியில் பேசி வருவது மக்களுக்கு தெளிவாக அறிந்திருக்கும். சமூக ஏற்றத் தாழ்வு கட்டுமானத்தை அதிகாரிகளை வைத்து முன்னெடுப்பதால் லஞ்சம் சமூக நீதியாக மக்களால் பார்க்கப்படுகிறது .
எது எப்படியோ லஞ்சம் பெற்றதாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கைது செய்யப்பட்டாலும், தண்டனை பெறுவது என்னவோ குறைவுதான்.
இது மாற வேண்டும் என்றால், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், அதுமட்டுமில்லாமல் ஆதாரத்துடன் புகார் கொடுக்கும் பொது மக்களின் குறைகளையும் ஏற்க வேண்டும். சிபிசிஐடி பிரிவு டிஜிபியாக இருந்த அபய் குமார் சிங், ஐபிஎஸ் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவின் இயக்குநராக கடந்த 2023 மே மாதம் நியமனம் செய்யப்பட்டது முதல் தற்போது வரை அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் கடைநிலை ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பதுதான் உண்மை. ஆகையால் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் முருகன் மற்றும் சேலம் சூரமங்கலம் சார் பதிவாளர் அலுவலக சார் பதிவாளர் சம்பத் ஆகிய இருவரும் நெருக்கமாக கைகோர்த்து கொண்டு சேலம் சூரமங்கலம் சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் சேலத்தில் உள்ள மற்ற சார் பதிவாளர் அலுவலகங்களில் நடக்கும் லஞ்ச ஊழல் முறைகேட்டை மறைத்து டீலிங் பேசி முடித்து விட்டதாக சமூக ஆர்வலர்கள் வைக்கும் குற்றச்சாட்டின் உண்மை தன்மையை கண்டுபிடிக்க குறிப்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது பொதுமக்களிடம் உள்ள நம்பிக்கையை உறுதி செய்ய நேர்மையான அதிகாரிகளை நியமித்து விசாரணை மேற்கொண்டு உண்மை தெரியவரும் பட்சத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவின் இயக்குனர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.