மின்சார வாரியம்

டிஜிட்டல் மின் மீட்டரில் 55,000 ரூபாய் வந்துள்ள  மின் கட்டணத்தை ரத்து செய்ய 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும்
மின் கணக்கெடுப்பு ஊழியரின் அதிர்ச்சி வீடியோ!



திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் ஐ. பெரியசாமி ஐந்து முறை வெற்றி வெற்றி பெற்றவர். தற்போது  ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருக்கிறார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி 46 ஊராட்சிகள், 7 பேரூராட்சிகள், 2 ஒன்றியங்கள், 300 குக்கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாகும்.

கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் விவசாயமே முதன்மையான தொழிலாக இருந்து வருகிறது. ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலை கிராமமான ஆடலூர் ஊராட்சியில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள வீடுகளுக்கு சிங்கிள் பேஸ் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

ஆடலூர் பன்றி மலை ,
கே சி பட்டி, குப்பம்மாள்பட்டி, பெரியூர், உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் 
கடந்த சில மாதங்களாக

மின் மீட்டர் பொருத்தப்பட்டுள்ள மீட்டர்களில் ஆயிரக்கணக்கில் மின் கட்டணம் வருகிறது. இது குறித்து மின் வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்  கடந்த ஜனவரி மாதத்தில் இளையராஜா என்பவருக்கு 8976 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியுள்ளதாக  ரூ.1 லட்சத்து 1333 மின் கட்டணம் செலுத்த வேண்டும் என விவசாயி இளையராஜாவுக்கு  மின் வாரியம் நோட்டீஸ் அனுப்பி
மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது .இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த இளையராஜா தான் அந்த அளவுக்கு மின்சாரத்தை பயன்படுத்தவில்லை என்றும் கூடுதல் மின் கட்டணம் எவ்வாறு வந்தது என மின் வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதே போல பலருக்கும் ரூ.7 ஆயிரம், ரூ.8 ஆயிரம் என மின் கட்டணம் செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டு
இதனை கட்டாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்திருந்ததால் மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.

மின் இணைப்புகள் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில்  மின் கட்டணம் அதிக அளவு வருவதாக தொடர்ந்து  குற்றம்சாட்டி வந்த நிலையில்  அந்த சம்பவம் அப்போது சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில் தற்போது ஆடலூர் மலை கிராமத்தில் கடை நடத்துபவருக்கு ரூபாய் 55 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளதாக மின் கட்டணம் கணக்கெடுக்கும் ஊழியர்  மணி என்பவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட பகுதிக்கு உடனடியாக மின்வாரிய பறக்கும் படையினரும் வந்து டிஜிட்டல் மீட்டரில் ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து கடைக்காரர் மின் கட்டணம் எனக்கு இவ்வளவு வராது என்னால் இவ்வளவு தொகை கட்ட முடியாது என்று

மின் கட்டணம் கணக்கெடுக்கும் மணியிடம் முறையிட்ட போது பறக்கும் படை அதிகாரிகளிடம்  சொல்லி விட்டீர்களா? அவர்கள் என்ன சொன்னார்கள் என கேட்கிறார் பறக்கும் படை அதிகாரிகள் மின் கட்டணம் கணக்கெடுக்கும் மணி உங்களிடம் வந்து பேசுவார் என   சென்றதாக கூறியவுடன் அதற்கு   நான் சொன்னால்தான் மின் கட்டணத்தை ஆன்லைனில் பதிவு செய்வார்கள் அதுவரை பதிவு செய்ய மாட்டார்கள் அதற்காக 25 ஆயிரம் ரூபாய் கேட்டார்கள்  என்று மணி கூறுகிறார் அதற்கு என்னிடம் ஐந்தாயிரம் ரூபாய் இருக்கிறது  என்று கடைக்காரர் சொல்லும்பொழுது ஐந்தாயிரம் ரூபாய் பத்தாவது 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அதுவும் இன்றே கொடுத்தால் உடனடியாக ஆன்லைனில் பதிவு செய்வதை  நிறுத்தி விடுவோம் என்று கூறுகிறார். இதை அருகில் இருப்பவர் ஒருவர்  வீடியோ எடுத்து  தற்போது   சமூக வலைதளங்களை பதிவிட்டு வைரலாகி வருகிறது.
மலைப்பகுதிகளில் பணி செய்யும் மின்வாரிய பணியாளர்கள் முறையாக கணக்கீடு எடுப்பதில்லை அதுமட்டுமில்லாமல் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள டிஜிட்டல் மீட்டர்களில் ஏற்பட்டுள்ள கோளாறால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் டிஜிட்டல் மீட்டர் என்ற பெயரில் மின்வாரிய ஊழியர்கள்  லஞ்சம் ஊழல் முறைகேடு செய்து வருவதாக  எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் மாநில மின் வாரியத் துறை  அதிகாரிகள் நேர்மையான முறையில் விசாரணை மேற்கொண்டு வஞ்சம் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுப்பார்களா  என பொறுத்திருந்து பார்ப்போம்!

Back to top button