டிஜிபி சைலேந்திர பாபு நடவடிக்கை எடுப்பாரா!?? 2019 காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு!

திருச்சி மாநகர ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றும் கிருஷ்ணவேணி என்பவர் தற்போது நடந்து முடிந்துள்ள 2019 காவல்துறை சார்பு ஆய்வாளர் தேர்வில் தாலுகா SI ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார் (6650023).இந்நிலையில்
ஜூலை 10 தினமலர் நாளிதழில் கிருஷ்ணவேணி அவர்களை பற்றி ஒரு செய்தி வந்துள்ளது.

இவர் காவல்துறை பணிக்கு ஒன்றரை ஆண்டுகளாக பணிக்கு வராததால்(விட்டோடி) காவல்துறையின் ஒழுங்கு நடவடிக்கையான ‘3பி’ எனும் குற்ற தண்டனையை பெற்றவர். பெரும் குற்றங்களுக்கான புகாரில் சிக்கியவர் எஸ்.ஐ தேர்வில் பங்கேற்க முடியாது என்பது விதியாக உள்ளது. இந்த நடைமுறை தற்போது அமலில் இருக்கும்போது அவர் எவ்வாறு எஸ்.ஐ ஆக தேர்வு ஆனார் என்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
எஸ்.ஐ தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என்று வழக்குகள் தொடர்ந்த மாணவர்களின் ஆவணத்தில் கிருஷ்ணவேணியின் பெயரும் இருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.
இவருடன் தேர்வு எழுதியவர்கள் அடுத்தடுத்த எண்ணில் தொடர்ந்து தேர்ச்சி பெற்றுள்ளனர். K.கிருஷ்ணவேணி(6650023), R.அம்பிகா(6650022), T.காயத்ரி(6650040), R.சத்யா (6650039).
இதில் கிருஷ்ணவேணியும், சத்யாவும் ஒரே மதிப்பெண்ணை(67 mark) பெற்றுள்ளனர்.
மேலும் தாலுகா எஸ்.ஐ ஆக தேர்வு செய்யப்பட்டுள்ள வசந்தகுமார்(3111904)
என்பவர் ஊட்டி காவல்துறையில் பணியாற்றியவர். வசந்தகுமார் மற்றும் அவரது நண்பர் தங்கராஜ் இருவரும் காவலர்கள். தேர்வுக்கு ஒன்றாக விண்ணப்பித்து அடுத்தடுத்த பதிவு எண்கள் பெற்று (3111903,3111904) முறைகேடாக தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்துள்ளனர்.
வசந்தகுமார் காவல் பணியை விட்டு வீட்டோடியாக வந்து விட்டார்,
அவர் காவல் துறையில் பணியாற்றினார் என்பதை மறைத்துள்ளார்.
தேர்வுக்கான விண்ணப்ப படிவத்தில், ‘நீங்கள் ஏற்கனவே அரசு பணியில் உள்ளீர்களா?’ என்பதற்கான கேள்வி இடம் பெற்றிருக்கும். அந்த கேள்வியில் இவர் இல்லை என்று பொய்யான தகவல்களை கொடுத்துள்ளார்.
ஆற்காடு காவல் நிலையத்தில் பனி புரியும் நாராயணன், வேலூர் SP Officeல் இருக்கும் ரகு, Dog Squadல் இருக்கும் பிரபாகரன், A.Rல் இருக்கும் ரஜினி, Jail Warden பார்த்திபன் ஆகியவர்கள் முறைகேடு செய்து தேர்ச்சி அடைந்துள்ளனர். ரஜினி என்பவர் மீது 3B-விட்டோடி உள்ளது. நிறைய நாட்கள் விடுப்பு எடுத்துள்ள இவர்கள் சார்பு ஆய்வாளர் தேர்வில் தடையில்லா சான்றை முறைகேடாக பெற்றுள்ளனர்.
கேள்விப்பட்ட தகவல்களின்படி A,B,C கூட தெரியாத Xerox முருகன்(0614393), இத்தேர்வில் 53 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
இவர்கள் அனைவரும்
காவல்துறை தேர்வுகளில் முறைகேடு செய்துவரும் வேலூர் ‘சிகரம் பயிற்சி’ மையத்தின் மாணவர்கள்.
G.மனோகரன் (0613456) மற்றும் L.பார்த்திபன் (0613457) இருவரும் காவலருக்கான உயரம் இல்லாதவர்கள். பார்த்திபன் கண் பார்வை திறன் அற்றவர். இருந்தும் எப்படி இவர்கள் போலீசாக இருக்கீறார்கள் என்று தெரியவில்லை. மனோகரன் தான் சிகரம் பயிற்சிமையத்தின் உடற்பயிற்சி ஆசிரியர். காவல்துறையில் ஓட்டுநராக உள்ள இவர், ஒரு நாள் வேலை சென்னையில் முடித்துவிட்டு,மறுநாள் விடுப்பில் வேலூருக்கு
சென்று விடுவார். காவல் உடற்தகுதி தேர்வுகளில் மாணவர்களுக்கு ஊக்க மருந்து(Steroids) வழங்கியவர் இவர் தான்.
தேர்வாகியுள்ள தேர்வர்களின் நன்னடத்தை சான்றிதழை அவர்களின் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையம் விசாரித்து தரவேண்டும். இவர்கள் முறையாக விசாரிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
காவல் துறை தலைவராக இருக்கும் சைலேந்திர பாபு ஐயா அவர்கள் மனுக்களை 30 நாட்களில் விசாரித்து நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்துள்ளார். இவர்கள் அனைவரும் காவல்துறையில் பணிபுரிவதால் இவர்கள் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இம்முறைகேடுகள் பற்றி ஒரு நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும். முறைகேடுகள் நடந்தது நிரூபிக்கப்பட்டால், இத்தேர்வினை ரத்து செய்ய மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு டிஜிபி பரிந்துரை செய்ய வேண்டும்.
காவலர் சமூகம்