காவல் செய்திகள்

டிவிஎஸ் 50 க்கு மாதம் ஒரு லட்சம் வரை லஞ்சம் வாங்கும் உணவு கடத்தல் பிரிவு காவல்துறை!?

இரண்டு சக்கர வாகனத்தில் தொடர்ந்து கேரளாவுக்கு ரேசன் அரிசியை கடத்தி வரும் கடத்தல் ராணியாக வலம் வரும் பெரியபேது ஈஸ்வரி.

ஒரு கிலோ ரேஷன் அரிசி 7 ரூபாய் வரை விலைக்கு விற்கும் கடத்தல் கும்பல்.

தமிழ்நாட்டிலிருந்து வாங்கிச் செல்லும் கடத்தல் அரிசியை கேரளாவில் 16 ரூபாய் வரை விற்கும் அவல நிலை!

ஆனைமலை சட்ட ஒழங்கு போலீசாருக்கு தண்ணிர் காட்டும் ரேசன் அரிசி கடத்தல் கும்பல் .

பெரியபோது ஈஸ்வரி,
பழைய குற்றவாளி சேகர் இரண்டு பேரும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் ஆனைமலை போலீசாருக்கே தண்ணீர் காட்டி வருவதாக தகவல்கள் வந்துள்ளது.

நெற்றியில் மஞ்சள் குங்குமத்துடன் மங்களகரமாக பயபக்தியுடன் காலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள் ரேசன் அரிசி கடத்தல் வேலையை சேகர் துணையுடன் ஈஸ்வரி செய்து முடித்து விடுவாராம்.

கிழவன் புதூர் அருகே உள்ள காந்திஆசிரமம் வழியாக
போலீசார் ரோந்து செல்லாத வழியில் ரேசன்அரிசி கடத்தல் நடக்கிறது என்ற தகவல் வந்துள்ளது.

இதில் சேகர் சிறுவயது முதலே ரேசன் அரிசி கடத்தல் மட்டுமே செய்பவன் .
தற்போது ஈஸ்வரி வீட்டில் அவனது கூட்டாளிகள் 3 பேருடன் தங்கி இருந்து ரேசன் அரிசியை தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு போலீசார் கண்ணில் மண்ணை தூவி கடத்தல் செய்வது மட்டுமே இவர்கள் வேலை ஆகும்.
இதற்காக மூன்றுபேருக்கும் தினமும. 3000 ரூபாய் கூலி கொடுத்து வேலைக்கு அமர்த்தி உள்ளனர் ஈஸ்வரி சேகர் ஆகிய இருவரும் .

இவர்கள் ரேசன் அரிசி கடத்துவது பெரியபோது சின்னப்பாளையம் சுப்பேகவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் பட்டப்பகலிலேயே நடக்கிறது.
அங்குள்ள பொதுமக்களே புகைபடம் எடுத்து அனுப்பும் அளவுக்கு நடக்கும் ரேசன் அரிசி கடத்தல் போலீசாருக்கு மட்டுமே தெரியாமலா போவது எப்படி.

இது குறித்து கூறிய அந்த பகுதியை சேர்ந்த எதிர்கட்சி பிரமுகர் சேகரிடம் ரேசன் அரிசி கடத்தல் செய்வது தவறு என பொதுமக்கள் கூறினால் நான் பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு போலீசாருக்கு மாதம் ஒருலட்சம் வரை மொத்தமாக கொடுக்க வேண்டியதை கொடுக்கிறேன் என்றும் அவர்எங்குபோய் என்னைப் பற்றிபுகார் கொடுத்தாலும் என்னை ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று சேகர் கூறுகிறார் என்றால் எந்த அளவுக்கு உண்மை என்பதை லஞ்ச ஒழிப்பு போலீசார் தான் விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சேகர் இந்த கொரனோ பேரிடர் காலத்தில் வேலை இல்லாமல், தவிக்கும் ஏழைமக்களுக்கு உணவுக்கு பயன் படும் ரேசன் அரிசி மக்களுக்காக தமிழக அரசு கொடுக்கும் விலை இல்லா ரேசன் அரிசியில் பசியில்லாமல் இருந்தது பொதுமக்கள் அல்ல சேகர் ஈஸ்வரி என இருவர் மட்டுமே என்று அப் பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

இந்த ரேஷன் அரிசி கடத்தல் பற்றி பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு இது குறித்து புகார் மனு கொடுக்க உள்ளதாக கூறினார்கள்.
இவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இனி கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தல் நடப்பது முடிவு பெறும் .

மேலும் கேரளா கோவிந்தாபுரத்தை சேர்ந்த மளிகை கடைகாரன் கனகு மீது நடவடிக்கை எடுக்க கேரளா போலிசாருக்கு புகார் மனுஅளிக்கப்ட்டுள்ளதாக கூறினர் .

உணவுபொருள்கடத்தல் பிரிவு போலீசார் மற்றும் ஆனைமலை போலிசார் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார் .

இதில் ஈஸ்வரி மீது வழக்கு பதிவு செய்து சிறை சென்று வந்த பின்பும் ரேசன் அரிசி கடத்தல் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

இவர்கள் மீது நடவடிக்கை பாயுமா!??

ஆனைமலை பெரியபோது பகுதியில் இருந்து கேரளா மாநிலத்துக்கு ரேசன் அரிசி கடத்தும் ஈஸ்வரி ,சேகர் ஜாபர் என்ற 3 பேர் கும்பல் பொள்ளாச்சி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் ஆசியோடு டன் கணக்கில் ரேஷன் அரிசியை கடத்துகின்றனர் .

பெரியபோதுவை சேர்ந்த ஈஸ்வரி ,சேகர், கோவிந்தாபுரத்தை சேர்ந்த ஜாபர் ஆகிய மூவரும் டன்கணக்கில் ரேசன் அரிசி தினமும் கடத்துவது தொடர்கதையாகவே உள்ளது .
இவர்களுக்கு உடந்தையாக இருக்கும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாதம் ஒரு லட்சம் வரை சன்மானம் வழங்கப்படுவதாக தகவல் வந்துள்ளது!!

14/09/21 (செவ்வாய்க்கிழமை) காலை ஆனைமலை சட்ட ஒழுங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான பெரிய பெரிய மூட்டைகளுடன் வந்த 2 சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் இலவச ரேசன் அரிசி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதில் போலீசாரை கண்டவுன் சேகர் என்பவன் வண்டியை கீழே போட்டு விட்டு காட்டுக்குள் தப்பி ஓடினான் மற்றொரு குற்றவாளி கார்த்திக் மட்டும் கைது செய்தனர் அவனிடம் இருந்து அரிசி கடத்தலுக்கு பயன் படுத்திய இருசக்கரவாகனம் 2ம் 300 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர் .

ஆனால் இவர்கள் மீது வழக்கு பெயர் அளவுக்கு வழக்கு பதிவு செய்து லஞ்சம் பெற்றுக் கொண்டு குற்றவாளிகளை ஜாமீனில் விட்டு உள்ளனர்.

இரண்டு இருசக்கர வாகனத்திற்கு ஒரே குற்றவாளி கைது செய்து மீண்டும் ஜாமீனில் விடுவது தொடர்கதை யாகவே உள்ளது.

சட்ட ஒழுங்கு போலீசார் இரவு பகல் பாராமல் குற்றங்களை தடுக்க இரவு பகல் பாராமல் ரேசன் அரிசி கடத்தல் கும்பலை ரோந்து சென்று கைது செய்து உணவு பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தால் குற்றவாளிகளிடம் பணம் பெற்று கொண்டு குற்றவாளிகளை ஜாமீனில் வரக்கூடிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தப்பிக்க விடுகின்றனர் .

பொதுமக்கள் ரேசன் அரிசி கடத்தல் கும்பலை பிடித்து கொடுத்தாலும் சட்ட ஒழுங்கு போலீசார் பிடித்து கொடுத்தாலும் பொள்ளாச்சி உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீசார் பணம் பெற்றுக்கொண்டு குற்றவாளிகளை தப்பிக்க விடுவது வாடிக்கையாகவே உள்ளது.

ஈஸ்வரி ரேசன்அரிசி கடத்த சேகர் என்பவனை தன்வீட்டில் தங்க வைத்துள்ளார் சேகர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவன்.

அவனுடன் 3 அடியாட்களும் உள்ளனர் இவர்கள் இரவு பகல் பாராமல் ரேசன் அரிசி கடத்துவது வாடிக்கை .
ஆனைமலை சட்ட ஒழுங்கு போலீசார் பிடித்தாலும் சரி பொதுமக்கள் பிடித்தாலும் சரி பொள்ளாச்சி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாமூல் மட்டுமே உறுதியாக கிடைக்கும்

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஈஸ்வரியை கைது செய்து சிறையில் அடைத்தனர் 15 நாட்கள் சிறையில் இருந்த ஈஸ்வரி ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் ரேசன் அரிசி கடத்த காரணம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பொள்ளாச்சியை பொறுத்தவரை உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தங்கள் கடமையை பெயர்அளவுக்கு கூட செய்வது இல்லை .
குற்றவாளிகளின் வாகனங்களை பறிமுதல் செய்தால் அதனையும் பணம் பெற்றுக்கொண்டு வண்டியை விடுவித்து விடுகின்றனர்.
அந்த வண்டிக்கு பதிலாக பயன்படுத்த முடியாத வாகனங்களை கணக்கில் எழுதி கொள்வது தான் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் பணியாகவே உள்ளது .

இதுகுறித்து உயர் அதிகாரிகள் பொள்ளாச்சி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீது நடவடிக்கை எடுப்பார்களா 20நாட்களுக்கு முன்பு கோவை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரை 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்

ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் பொள்ளாச்சி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் சோதனை செய்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக காவல் நிலையத்தில் உள்ள ஹெட் கான்ஸ்டபிள் ரைட்டர் சுந்தரேசன் மற்றும் அங்கு எடுபிடி வேலையில் உள்ள சரவணன் ஆகியோர் தான் பணம் பெற்றுக்கொண்டு குற்றவாளிகளை தப்பிக்க விடுவதாக கூறுகின்றனர் .

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டுள்ள ஈஸ்வரி சேகர் ,ஜாபர் ஆகியோரை கைது செய்வார்களா
உணவு கடத்தல் பிரிவு காவல்துறை அதிகாரிகள் என்றால் அது வெறும் கனவாகவே உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் யாரும் உணவுக்காக பட்டினியில் இருக்கக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் வழங்கும் ரேஷன் அரிசியை பணத்திற்காக கடத்தும் தொழிலில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு உடந்தையாக செயல்படும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் வேலை செய்யும் காவலர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மற்றும் காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்கள் முன் வர வேண்டும். என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button