காவல் செய்திகள்

மனைவிக்கு தெரியாமல் இளம் பெண்ணுடன்  உல்லாசமாக இருந்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் கண்ணன்! அதிர்ச்சி தகவல்!




சென்னை விருகம்பாக்கம் பகுதியில்  அடுக்குமாடி குடியிருப்பு தனியாக வசித்து வந்த 25 வயது இளம்பெண்
கடந்த 4 மாதத்திற்கு முன் இரவு நேரத்தில் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் தகராறு செய்வதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை எண்  100 க்கு கால் செய்துள்ளார்.
உடனே

விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு    காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் கொடுக்கப்பட்டது.
புகார் கொடுத்த இளம் பெண்ணின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு முகவரியை கேட்டு சென்ற விருகம்பாக்கம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கண்ணன்  விசாரணை செய்து சமாதானம் பேசி பிரச்சினையை அப்பொழுதே தீர்த்து வைத்துள்ளார்.
அதற்காக அந்த இளம் பெண்  காவல் ஆய்வாளர் கண்ணன் வாட்ஸ்அப் எண்ணிற்கு நன்றி என ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
அதன் பின்பு
அந்த இளம் பெண்ணும் காவல் ஆய்வாளர் கண்ணனும்  வாட்ஸ் ஆப் இல் தினமும் காலையில் குட் மார்னிங் அனுப்பியுள்ளார். அதன் பின்பு அடிக்கடி தொலைபேசியில்
பேசி வந்த நிலையில்  காதலாக மாறி.
ஒரு கட்டத்தில் தனக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது எனவும், தற்போது தனியாகத்தான் வசிக்கிறேன். விருப்பம் இருந்தால்  நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆய்வாளர் கண்ணன் சொன்னதை நம்பி அந்த இளம் பெண்  அவரை திருமணம் செய்து கொள்வதாக  சம்மதம் தெரிவித்த நிலையில் காவல் ஆய்வாளர் கண்ணன் அந்த இளம் பெண்ணை பல இடங்களுக்கு அழைத்து சென்று

இருவரும் தனியாக தங்கி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர் .  கண்ணன் அவரது வீட்டிற்கு சரியாக செல்லாமல்  வீட்டிற்கு பணம் தராமல் இருந்ததால் கண்ணன் மனைவிக்கு சந்தேகம் எழுந்து தன் கணவர் கண்ணனை பற்றி விசாரித்த போது.
வேறொரு பெண்ணுடன் கணவர் தொடர்பில் இருப்பது
தெரியவே  பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
காவல் ஆய்வாளர் கண்ணன் மனைவி தற்கொலை  செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். அதன் பின்பு விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் கண்ணன் மீது அவரது மனைவி
ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் மாநகர காவல் ஆணையர் விருகம்பாக்கம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கண்ணனை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் சென்னை மாநகர காவல் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button