சினிமா

டி ராஜேந்திரன் அணி பிரிந்து இரண்டு அணியாக சென்னை செங்கல்பட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் கடும் போட்டி! வெற்றி யாருக்கு?

திரைப்படத்துறையில் மிகவும் முக்கியமாக அங்கம் வகிப்பது திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் .அதிலும் முக்கியமாக சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கம் மிகவும் முக்கியமான திரைப்படம் வெளியிடுவதில் ஒரு பிரச்சினை என்றால் அதை முதலில் தீர்த்து வைப்பது சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் மட்டுமே . ஆகவே இந்த சங்கத்தின் தலைவர் செயலாளர் யார் என்பதை திரைப்பட தயாரிப்பாளர் வட்டாரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் கூடிய ஒன்று.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்திருள்ளூர் ஆகிய 3 மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் செயலாளர் பதவி முடிவடையும் நிலையில் புது தலைவர் செயலாளர் பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் வருகிற ஜூன் 19 / 2022 அன்று நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், 16 செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு தற்போது தேர்தல் நடக்க உள்ளது.

திருவேங்கடம். & K. ராஜன்

இந்த நிலையில் கே ராஜன் தலைமையில் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் நலன் காக்கும் அணி என்ற பெயரில் தலைவராக கே ராஜன், செயலாளர் காளியப்பன் ,பொருளாளர் முரளி பலராமன்,
துணைத்தலைவர் நந்தகோபால் ,துணைச்செயலாளர் சாய்பாபா ,மற்றும் 16 கமிட்டி உறுப்பினர்கள் இந்த அணியில் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

இந்த அணிக்கு எதிராக
ஜனநாயக முற்போக்கு அணி தனது வேட்பாளர்களை அறிவித்து உள்ளது . அதில் தலைவராக திருவேங்கடம் செயலாளராக ஸ்ரீராம் பொருளாளராக சஞ்சய் லால்வானி. உப தலைவருக்கு கே ராஜகோபால் என்ற ஆனந்தன் இணைச் செயலாளர் டி .ராஜகோபால்.
செயற்குழு உறுப்பினர்களாக
அன்புமணி அரசு சொக்களிங்கம் தனசேகரன் கிருஷ்ணமூர்த்தி மோகன் முரளி ராஜா ரஹீம் நாராயணன் ரகுபதி
ராஜேந்திரன் ரகுபதி சரவணன் நானே செல்வம் தியாகு கணபதி வித்யாசாகர்

இந்த இரண்டு அணிகளில் இருப்பவர்களும் கடந்த தேர்தலில் டி ராஜேந்திரன் தலைமையில் ஒன்றாக இருந்து செயல்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும் முக்கியமாக கே ராஜன் மற்றும் திருவேங்கடம் காளியப்பன் சஞ்சய் லால்வானி ஸ்ரீராம் இவர்கள் அனைவரும் ஒன்றாக டிஆர் தலைமையில் கடந்த தேர்தலில் பணியாற்றியவர்கள் வேட்பாளர்கள் நின்று வெற்றி பெற்றவர்கள் ஆவர். ஆகையால் தற்போது இந்த இரண்டு அணிக்கும் இடையே கடும் போட்டி தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த சங்கத்தில் முன்னணி திரைப்பட விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களா இருக்கும் கலைப்புலி எஸ் தாணு ,எஸ் ஏ சந்திரசேகர் இவர்களது ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பும் தற்போது எழுந்துள்ளது. எது எப்படியோ இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பினால் தற்போது திரைப்படங்கள் வாங்கி வெளியிடும் தொழில் மிகவும் மோசமாக இருந்து வரும் நிலையில் மீண்டும் திரைப்பட வினியோகஸ்தர்கள் திரைப்படங்களை வாங்கி திரையரங்கில் வெளியிடும் நிலையை உருவாக்க வெற்றி பெற்று புதிதாக பொறுப்பேற்கும்தலைவர் செயலாளர் பொருளாளர் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் ஆதங்கம் ஆகும்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button