தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை! ஏழு பேரை தட்டி தூக்கி கைது செய்த பழனி தனிப்படை காவல்துறை!52 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் !.
திண்டுக்கல் பழனி தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், அண்டை மாநிலமான கேரளாவில் விற்பனை செய்யப்படும் லாட்டரி சீட்டுக்கள் தமிழக எல்லையோர பகுதிகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் கேரளாவில் விற்பனை செய்யப்படும் லாட்டரிகளை அடிப்படையாகக் கொண்டு தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்யப்படுகிறது. சட்டவிரோதமாக விற்கப்படும் ஆன்லைன் லாட்டரிகளை வாங்கி ஏராளமானோர் தங்களது பணங்களை இழந்து வருகின்றனர். பழனியிலும் ஆன்லைன் லாட்டரி விற்பனை அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் மருத்துவர் பிரதீப் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்களை அவ்வப்போது போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்த போதிலும், ஆன்லைன் லாட்டரி விற்பனை நடப்பது குறித்து பழனி டிஎஸ்பி தனஜெயன் க்கு தகவல் கிடைத்தது. இதனை கண்காணிக்க தனிப்படை காவல்துறையினர் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு, பழனி பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கார்த்திகை மார்கழி தை மாதம் ஆகிய மூன்று மாதங்களுக்கு ஐயப்பன் கோவிலுக்கு மாலை மாலை போட்டு செல்லும் பக்தர்கள் பழனி திருக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். அதுமட்டுமில்ல தைப்பூசம் வர உள்ள நிலையில், பழனி வரும் பக்தர்களிடம் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை அச்சடித்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தனன்ஜெயன் தலைமையில் ஆன போலீசார் பழனியில் அனைத்து பகுதிகளும் அதிரடி சோதனை மேற்கொண்டனர் அப்போது
தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பாஸ்கரன், மணிகண்டன், நாகராஜ், செல்வராஜ், முத்துராஜ், ஈஸ்வரன், சக்திவேல் ஆகிய ஏழு பேரை அதிரடியாக கைது செய்து விற்பனை செய்ய வைத்திருந்த சுமார் 50,000 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளும், 7000 ரூபாய் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் ஏழு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.