தமிழகத்தில் கனிம வளத்துறை அமைச்சர் ஆகிறாரா புதுக்கோட்டை எஸ் ஆர்!?? (mines )கயவர்களின் பிடியில் கனிமவளத் துறையா!?கனிமவள துறையை தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டதா தமிழக அரசு!?தமிழக முதல்வரின் நல்லாட்சியை நாசமாக்கி நினைக்கிறாரா புதுக்கோட்டை எஸ் ஆர் நிறுவனம் s.ராமச்சந்திரன்!??
தமிழ்நாட்டில் தற்போது ஒரு யூனிட்டுக்கு 1000ரூபாய் விலை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு போட்ட நிலையில் கிராவள் மண் எடுத்துச் செல்ல வேண்டுமா !?ஒரு யூனிட்டுக்கு 500 ரூபாய் தனியாக கிஸ்தி (Royalty)கேட்கும் புதுக்கோட்டை எஸ் ஆர் நிறுவனம்!
பாஸ் வழங்காமல் இழுத்தடிக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள்!
கொதித்து எழும் தஞ்சை மாவட்ட கட்டிட பொறியாளர்கள் மற்றும் டிப்பர்லாரி உரிமையாளர்கள்!
தஞ்சை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான ஏரி குளங்கள் ஆகியவற்றில் மணல் எடுப்பதற்கு ஒரு யூனிட்டிற்கு 500 ரூபாய் கப்பம் கட்ட வேண்டும் என்று நிர்பந்தம் செய்யும் புதுக்கோட்டை எஸ் ஆர் நிறுவனம்.
பணம் கொடுக்க மறுத்தால் மண் எடுக்க முடியாது என்றும் மண்ணை எடுத்துச் செல்ல பாஸ் வழங்கும் (mines)அதிகாரிகள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்றும்
புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ் ராமச்சந்திரனின் எஸ் ஆர்( mines) நிறுவனத்தில் வேலை செய்யும் வீரக்குடி ராஜா என்ற ராஜகுமார் பாலகிருஷ்ணன் மற்றும் சக்தி ஆகியோர் ராயல்டி யூனிட்டுக்கு 500 ரூபாய் தரவில்லை என்றால் குவாரிகளில் மண் அள்ள முடியாது என்று நடைமுறையிலுள்ள குவாரிகளை இயங்க விடாமல் தடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
இப்படி அவர்களுக்கு 500 ரூபாய் கொடுத்து மண்ணை விற்கவேண்டும் என்றால் கூடுதலாக விலை வைத்து 1500 ரூபாய்க்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தொழிலை நம்பி இருக்கும் கட்டிட பொறியாளர்கள் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
7000 ரூபாய்க்கு விற்ற 6 யூனிட் கிராவல் மண் தற்போது 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை ஏற்றத்தினால் சாமானிய பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் பொதுமக்களுக்கு பயனுள்ள தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
1. கனிமவள துறையை தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுத்து உள்ளதாக தமிழக அரசு!?
2 தமிழ்நாட்டில் கயவர்களின் பிடியில் கனிம வளத்துறையா!?
3. தமிழகத்தில் கனிம வளத்துறை அமைச்சராகிறாரா எஸ் ராமச்சந்திரன் (எஸ் ஆர் நிறுவனம்)
4. தமிழக முதல்வரின் நல்லாட்சியை நாசமாக்கி நினைக்கிறாரா புதுக்கோட்டை எஸ் ஆர் நிறுவனம் s.ராமச்சந்திரன்
5. தமிழ்நாட்டில் கனிமவளத்துறை அரசு கட்டுப்பாட்டில் இயங்குகிறதா!? இல்லை புதுக்கோட்டை ராமச்சந்திரன் என்பவரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறதா!?
இந்த 5 கேள்விகளுக்கும் உடனடியாக தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் முறையாக நேர்மையான அதிகாரிகளை வைத்து விசாரணை செய்து இந்த ராயல்டி வசூல் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பாக கட்டிட பொறியாளர் மற்றும்தஞ்சை மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளனர். இது சம்பந்தமாக வரும் 07/02/22அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர் தஞ்சாவூர் கட்டட பொறியாளர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம்.
எது எப்படியோ தமிழ் நாட்டில் நல்லாட்சியை சீர்குலைக்கும் நோக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஆதரவுடன் இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களை இன்னும் ஒரு சிலர் செய்து வருகிறார்கள்.ஆகவே முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாவட்ட வாரியாக நேர்மையான அதிகாரிகளை நியமித்து இது போன்ற குற்றச்சாட்டுகள் வராமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்!