தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023 – 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா!?
தமிழ்த் திரையுலகில் தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்து வரும் சங்கம் என்றால், அது தயாரிப்பாளர்கள் சங்கம் தான்.
2020- 2022 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தேர்தல் நடந்து முடிந்து இதில் தேனாண்டாள் முரளி அணியினர் வெற்றி பெற்றுப் பொறுப்பேற்று கொண்டனர் .
அந்தத் தேர்தலில் முரளி அணிக்கு எதிராகக் களத்திலிருந்த டி.ராஜேந்தர் அணியினர், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் புதிதாக ஒரு தயாரிப்பாளர்கள் சங்கத்தை உருவாக்கிய சில நாட்களில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் இணைந்து பாரதிராஜா தலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தைத் தொடங்கினார்கள். இதனையடுத்து, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் (முன்னாள்), தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் (தற்போது), தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்று பிரிந்தது.
கடந்த டிசம்பர் மாதம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூடியது.தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2022 – ம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் சங்கத் தலைவர் என்.ராமசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன் , ஆர்.கே.சுரேஷ் , கௌரவ திரு ராதாகிருஷ்ணன் பொருளாளர் சந்திரபிரகாஷ்ஜெயின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட 500 – க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டார்கள்.
பொதுக்குழுவில் 10 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றம்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2022 – ம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று சங்கத் தலைவர் என்.ராமசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன் , ஆர்.கே.சுரேஷ் , கௌரவ திரு ராதாகிருஷ்ணன் பொருளாளர் சந்திரபிரகாஷ்ஜெயின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட 500 – க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டார்கள்.
தமிழக அரசின் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இந்த பொதுக்குழுக் கூட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தார் . அந்த கடிதம் வாசிக்கப்பட்டது . மேலும் , இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் ஏகோபித்த தயாரிப்பாளர்களின் ஆதரவுடன் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
அதில் குறிப்பிடத்தக்கது
1). தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று நன்றியை ஆறுவருடத்திற்கான திரைப்பட விருதுகளை வழங்கிய தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் இந்த பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது . மேலும் , நிலுவையில் வருடத்திற்கான விருதுகளுக்கும் குழு அமைத்து விரைவில் வழங்கிடப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
2.தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் டிக்கெட்களை சென்டர்லைஸ் சாவர் மூலம் மானிட்ரிங் செய்து டிக்கெட் விற்பனை செய்யத் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது .
3.அரசு Digital service provider ( QUBE , UFO ) நிறுவனங்கள் அதிகப்படியான தொகையினை தயாரிப்பாளர்களிடமிருந்து வசூலிப்பதைக் கட்டுப்படுத்தி பாதியாகக் குறைத்து வாங்கிடச் செய்யுமாறு தமிழக அரசு ஆணை பிறப்பித்திட வேண்டுமாய் இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது .
4.1957 CHENNAI ) 500 000 Tat மானியம் வேண்டி 2015-2016-2017 ஆண்டுகளுக்கு விண்ணப்பித்துள்ள சிறுமுதலீட்டு திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு 7 – லட்சம் மானியத் தொகையினை ரூ .8 – லட்சம் சேர்த்து ரூ .15,00,000 மாக உயர்த்தி தர பொதுக்குழு தமிழக அரசிடம் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறது.
5.தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி சங்கத் தயாரிப்பாளர்களுக்கு பையனூரில் வழங்கிய 10 ஏக்கர் நிலத்தில் தயாரிப்பாளர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டித்தரத் தமிழக முதல்வர் தாயுள்ளதோடு பரிசீலித்து உதவிட வேண்டுமாய் இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது .
6. வர்த்தக சிறுமுதலீட்டுத் திரைப்படங்களை நமது சங்கத்தின் அறக்கட்டளை மூலம் OTT தளத்தில் வெளியீட்டுத் தயாரிப்பாளர்கள் பயனடையும் வண்ணம் வழிவகை ஏற்பாடு செய்யப்படும் .
7.திரைப்படங்களின் விமர்சனங்களைப் படம் ரிலீசான தேதியிலிருந்து சமூகவலைத்தளங்கள் 3 – நாட்கள் கழித்து எழுதுமாறு இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது .
8.திரையரங்குகளில் படம் பார்த்த பின் கருத்துக் கேட்பதற்காகக் கொண்டுவரும் . கேமராக்களை திரையரங்குகளின் உள்ளே அனுமதிக்க வேண்டாம் எனத் திரையரங்கு உரிமையாளர்களை இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது .
9. திரைப்படங்களையும் , நடிகர் , நடிகையா உள்ளிட்ட திரைப்படத் துறையினர் மீது தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பொய் செய்தி பரப்பும் ஊடகவியலாளர்களுக்கு எந்தவித பேட்டியும் . திரைத்துறையினர் தருவதைத் தவிர்க்குமாறு இந்தப் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது .
10.இனிவரும் காலங்களில் தேர்தல் முடிந்து புதியதாகத் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகத்தின் காலம் 2 – வருடம் என்பதை மாற்றி 3 – வருடப் பதவிக்காலம் என்று மாற்றி அமைக்கப்பட்டது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
அதில் ஒரு சில விதிகளை திருத்தி அமைத்து பொதுக்குழு தீர்மானத்தில் நிறைவேற்றினர். அதில் முக்கியமாக வேறு சங்கத்தில் உள்ள முக்கிய பொறுப்புகளில் உள்ள தயாரிப்பாளர்கள் 2023-2026 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் எந்தப் பதவிக்கும் நிற்க முடியாது என்ற திருத்தத்தை கொண்டு வந்தனர். அது மட்டும் இல்லாமல் புதிய உறுப்பினர்களாக சேர்ந்தவர்கள் 2020 டிசம்பர் மாதத்திற்குள் ஒரு திரைப்படம் சென்சார் செய்திருந்தால் போதும் அவர்களுக்கு ஓட்டு போடும் உரிமை வழங்கப்படும் என்றும் 2021 ஜனவரி மாதத்திலிருந்து இரண்டு திரைப்படங்கள் சென்சார் செய்தவர்கள் மட்டுமே ஓட்டு போடும் உரிமை வழங்கப்படும் என்ற திருத்தங்களை கொண்டு வந்தனர் இதற்கு ஒரு சில தயாரிப்பாளர்கள் பொதுக்குழுவில் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் இருதரப்பினர்களுக்கும் இடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின்பு பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மார்ச் 26 ஆம் தேதி2023_2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு எதிரான வழக்கு !
ஜனவரி 23ம் தேதி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், சங்கத்தின் விதிப்படி 2023-2026ஆம் ஆண்டிற்கான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு தலைவர், இரு துணைத் தலைவர்கள், இரு செயலாளர்கள், ஒரு பொருளாளர், 26 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், அறிவிப்புக்கு தடை விதித்து, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரியும், கவுன்சில் உறுப்பினர்களான கமல்குமார், சீனிவாசன் உள்பட எட்டு தயாரிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தியாகேஸ்வரன், “செயற்குழுவில் விவாதிக்காமல் தேர்தல் நடத்தும் அலுவலராக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமனை தன்னிச்சையாக அறிவித்துள்ளனர். இதனை ரத்து செய்து நடுநிலையான ஒருவரை தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த எதிர் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன், “செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலேயே தேர்தல் அலுவலர் நியமிக்கப்பட்டார். தேர்தல் தொடர்பாக ஏதேனும் பிரச்னை இருந்தால் தேர்தல் அலுவலரை அணுகலாம். மேலும், தேர்தல் அலுவலர் நியமிக்கப்பட்டுவிட்டதால் இந்த மனுவே காலாவதியாகிவிட்டது” என தெரிவித்தனர். இதனையடுத்து, கடந்த ஜனவரி 13-ம் தேதி நடைபெற்ற செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட விவாகரங்களை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
21/02/2023 அன்று உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் செந்தில்குமார் ராமமூர்த்தி அவர்கள் பிறப்பித்துள்ள உத்தரவில் , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023 – 2026 ஆம் ஆண்டுக்கான தலைவர், துணைத்தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் , இணைச்செயலாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் திரு. வெங்கட்ராமன் மற்றும் திரு. பாரதிதாசன் இருவரும் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றுவார்கள் என்று கூறியுள்ளார்.
அடுத்த மாதம் 26-ந்தேதி (26.3.2023) நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட இந்த மாதம் 23-ந்தேதி முதல் 26ந்தேதி வரை (23.3.2023 to 26.3.2023) ஏற்கனவே அறிவித்துள்ளபடி வேட்புமனுக்கள் சங்க அலுவலகத்தில் அதற்கான பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.என்றும்
27.2.2023 காலை 11.00 மணி முதல் 2.3.2023 மாலை 4.00 மணிவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.என்றும்
2.3.23 வேட்புமனு பரிசீலனையும், 3.3.2023 முதல் 5.3.2023 வரை வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம்.என்றும்
5.3.2023 வெளிடப்படும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் 6.3.2023 அன்று வாக்களிக்க உரிமையுள்ள
உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.என்றும்
26.3.2023 வாக்குப் பதிவும்
அன்று மாலை 5.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.என்றும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் பற்றி ஒரு சில மூத்த தயாரிப்பாளர்களிடம் விசாரித்த போது பாரதிராஜா தலைமையில் உள்ள தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் உஷா டி ராஜேந்திரன் தலைமையில் உள்ள தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவார்களா இல்லை புறக்கணிப்பார்களா என்று இதுவரை தெரியவில்லை என்றும். ஆனால் தேர்தல் தேதி அறிவித்த பின் அந்த இரண்டு அணியில் உள்ளவர்களும் எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆகையால் நடக்க இருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் எது எப்படியோ நேர்மையான முறையில் தேர்தல் நடந்தால் தயாரிப்பாளர்கள் அனைவரும் வரவேற்போம் என்று மூத்த தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.