தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு கடும் போட்டி! கைப்பற்ற போவது யார்!?


தமிழ் திரையுலகில் முக்கிய பங்கு வைக்கும்
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான  தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை  நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 2026 முடிவடையும் நிலையில் முன்கூட்டியே தற்போது
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான  நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது.


இதில் தலைவர் பதவிக்கு ஜி எம் குமார் , ராம நாராயணன் முரளி, மன்னன்  5 ஸ்டார் கதிரேசன் ஆகிய நான்கு பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 5 ஸ்டார் கதிரேசன் தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை வாபஸ் வாங்கி விட்ட நிலையில்

செயலாளர் பதவிக்கு மட்டும் 5 ஸ்டார் கதிரேசன் போட்டியிடுகிறார்.

விடியல் ராஜ் பொருளாளராக சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

ஜி எம் குமார் ,ராமசாமி முரளி, மன்னன் ஆகிய மூன்று பேரும் தலைவர் பதவிக்கு  போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் தயாரிப்பாளர்கள்  நலன் காக்கும் அணி மற்றொன்று இராமநாராயணன் அணி என இரண்டு அணியாகவும் மன்னன் சுயேட்சையாகவும் போட்டியிடுகிறார்.

.தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணியில்
துணைத் தலைவர் பதவிக்கு ஆர்.கே.சுரேஷ் மற்றும் எஸ்.கமலக்கண்ணன் போட்டியிடுகிறார்கள்.
செயலாளர்கள் பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் கமீலா நாசர் போட்டியிட,  பொருளாளர் பதவிக்கு என்.சுபாஷ் சந்திரபோஸ் போட்டியிடுகிறார்.
இணைச் செயலாளர் பதவிக்கு சுஜாதா விஜயக்குமார் போட்டியிடுகிறார்.
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு
மூத்த தயாரிப்பாளர்களான அழகன் தமிழ்மணி, சித்ரா லட்சுமணன், எச்.முரளி, எம்.கபார், ஆர்.மாதேஷ் ஆகியோருடன் சேர்ந்து சாலை சகாதேவன், பைஜா டாம், எஸ்.ஜோதி, வி.பழனிவேல், கே.செந்தாமரை கண்ணன், நீல்கிரிஸ் ஏ.முருகன், ஜி.எம்.டேவிட்ராஜ், டி.என்.தாய்சரவணன், கே.முருகன், .வி.ஞானவேல், பிரவின்காந்த், வி.என்.ரஞ்சித் குமார், எஸ்.ஜெயசீலன், ராஜா @ பக்ருதீன் அலி அகமத், எம்.தனசண்முகமணி, பி.ஜி.பாலாஜி, இசக்கிராஜா, பி.மகேந்திரன், எஸ்.பிரப்தீஸ் சாம்ஸ், ஏ.ஏழுமலை, எஸ்.என்.ராஜராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதேபோல்

ராமநாராயணன் அணியில் துணைத் தலைவர் பதவிக்கு விஜய் முரளி மற்றும் மதியழகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
செயலாளர் பதவிக்கு கவுன்சில் சௌந்தர் மற்றும் டிடி ராஜா ஆகியோர் போட்டியின்றனர்.
இணைச் செயலாளர் பதவிக்கு தயா பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
பொருளாளராக சி.வி. குமார் போட்டியிடுகிறார்.


செயற்குழு உறுப்பினர்களாக அன்பாலயா, பிரபாகரன், சுப்பிரமணி என்ற சுப்பு பஞ்சு அருணாச்சலம், சக்தி சிதம்பரம் ,அன்பு துறை என்ற மிட்டாய் அன்பு ,பெரும்பாக்கம் எஸ் ராமச்சந்திரன், செந்தில் குமார் ,ராஜசிம்மன் ,திருப்பூர் எஸ் ஆர் செல்வராஜ், சிவராமன் என்ற சிவ ஸ்ரீ சிவா, அழகப்பன் என்ற ராசி அழகப்பன், சுரேஷ் கே ராஜன் ,கோகுல் கிருஷ்ணன் என்ற கோகுல், ஜான் மேக்ஸ் ,முருகராஜ் ,
வேலாயுதம், சித்திரைச் செல்வன், ஸ்ரீகாந்த், கோகுலகிருஷ்ணன் ,
அமீர்ஜான், மேகலா ,பாரத், கிருஷ்ணா ,செல்வகுமார் என்ற செல்வா ,சீனிவாசன், யுவகந்த் ராஜ் என்ற அசோக் ரஞ்சித் குமார் கெட்டப் ராஜேந்திரன் ஆகிய 26 பேர்கள் போட்டியிடுகின்றனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நலம் காக்கும் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் முரளி வெற்றி பெற்றுள்ளார். தலைவர் பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட டி.மன்னனை விட 150 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்  பொருளாளராக சந்திரபிரகாஷ் ஜெயினும் வெற்றி பெற்றார். செயலாளர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் ஜி.கே.எம்.தமிழ்குமரன், இணைச்செயலாளர் எஸ்.செளந்தரபாண்டியன், செயற்குழு உறுப்பினர்கள் மாதேஷ், சுபாஷ் சந்திரபோஸ், விஜயமுரளி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

கடந்த தேர்தலில் தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற
‘தேனாண்டாள்’ முரளி ராமசாமி 615 வாக்குகளும், துணைத்தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட ஜிகேஎம் தமிழ்குமரன் 651 வாக்குகளும், பெற்றது குறிப்பிடத்தக்கது. 


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற தேனாண்டாள் முரளி முதல் அமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் செயலாளர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் ஜி.கே.எம்.தமிழ்குமரன், இணைச்செயலாளர் எஸ்.செளந்தரபாண்டியன், செயற்குழு உறுப்பினர்கள் மாதேஷ், சுபாஷ் சந்திரபோஸ், விஜயமுரளி ஆகியோர் 2023 மே மாதம் 3ஆம் தேதி முதல் அமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர் .
அதன் பின்னர் முதல்வரிடம் தயாரிப்பாளர் சங்கத்திற்காக பல்வேறு சலுகைகள் கேட்டு கோரிக்கை வைத்ததாகவும்  அதை தாயுள்ளத்தோடு பரிசளித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார் என்று தலைவராக இருந்த முரளி ராமசாமி தெரிவித்திருந்தார். ஆனால்
முரளி ராமசாமி தலைவர் என்றாலும் உண்மையான தலைவர் தமிழ்குமரன் தான் என்றும்  ஆகவேதான் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை என்றும்  தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்த பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கான எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையில் முரளி ராமசாமி மௌனம் காத்து வந்ததாகவும்  பல தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
அதற்கு காரணம்
2023 ஆம் ஆண்டு நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க
தேர்தலுக்கான மொத்த செலவையும் தமிழ்குமரனின் லைகா நிறுவனமே செய்ததாகவும். தேர்தல் பிரச்சாரத்திற்கான விளம்பரங்களை சமூக ஊடகங்களில் கொண்டு செல்வதற்கான பணிகளை லைகா நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழு செய்ததாகவும் தயாரிப்பாளர் சங்கத்தில் பரவலாக பேசப்பட்டது.
அந்த பிரச்சனையில் தான்
2026 ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டு அணியாகப் பிரிந்து ஜி எம் குமார் தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணியில்  தலைவர் பதவிக்கும்  ராமநாராயணன் அணியில் முரளி ராமசாமி தலைவர் பதவி  போட்டியிடுகின்றனர்.

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தொடர்ச்சியாக எல்லா தேர்தல்களிலும் துணை தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றிபெற்று வரும் ராதாகிருஷ்ணன், இரண்டு முறை தலைவர், இரண்டு முறை செயலாளராக வெற்றி பெற்ற கதிரேசன் இருவருக்கும் நீண்ட கால தேர்தல் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணியில் தலைவராக போட்டியிடுவோம் ஜி எம் குமார் மீது பல விமர்சனங்களை எதிர் அணியினர் வைத்து வருகின்றனர்  அது என்னவென்றால்  ஜி எம் குமார்  தலைவராக வந்தால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கார்பெட் தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் போய்விடும்  என்றும் அப்படி கார்பெட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் சிறு தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்க மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டை வைக்கின்றனர்.
ஆனால்  சிறு  தயாரிப்பாளர்களின் பிரச்சனைகள் அனைத்தையும் பேசி தீர்த்து வைப்போம் என்றும்  அவர்கள் கூறுவது போல் தனியார் கார்பெட் நிறுவனத்திற்கு எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் எதிரணியினர் வைக்கும் குற்றச்சாட்டுக்கு நலன் காக்கும் அணியினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இரு அணியினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்து வரும் நிலையில்
இந்தத் தேர்தல் கடும் போட்டியாக தான்  இருக்கும் என்கின்றனர்

இருந்தாலும் சுயேட்சையாக செயலாளர் பதவிக்கு போட்டியிடும் 5 ஸ்டார் கதிரேசனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக முத்த தயாரிப்பாளர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
22/02/26 ஞாயிற்றுக்கிழமை  காலை  எட்டு மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணா நகர் கிழக்கு கந்தசாமி கல்லூரி வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் . பதிவு முடிந்தவுடன் உடனே வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இரவு 9  மணிக்குள்  சங்கத்தை கைப்பற்ற போவது எந்த அணி என தெரிந்துவிடும்.

Back to top button