மாநகராட்சி

திமுக கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பெண் கவுன்சிலர் அலுவலகத்தில் கணவர் அமர்ந்து கொண்டு நிர்வாகத்தில் நேரடியாக தலையிடுவதால் செயல்பட முடியாமல் முடங்கிக் கிடக்கும் மாநகராட்சி அதிகாரிகள்!நடவடிக்கை எடுப்பாரா சென்னை மாநகராட்சி ஆணையர்!?

சென்னை மேற்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி
சென்னை மாநகராட்சி 113 வது வார்டு மாமன்ற திமுக உறுப்பினர் பிரேமா சுரேஷ் கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் வகையில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற முடியாததற்கு மழைநீர் வடிகால் தான் காரணம் என்றும் 113 வது வார்டு பகுதியில் உள்ள மழை நீர் வடிகால் புதுப்பிக்காமல் பழைய வடிகாலாக இருப்பதால்தான் மழை நீரை வெளியேற்ற முடியவில்லை என மழை பாதிப்பு பற்றி பாஜக ஆதரவு தொலைக்காட்சியில் தன்னிச்சையாக பேட்டி கொடுத்தன் காரணத்தினால் பெண் கவுன்சிலர் பிரேமா சுரேஷ் திமுக கட்சி அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியதாக திமுக கட்சி பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் மாமன்ற உறுப்பினராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். பெண் கவுன்சிலர் பிரேமா வின் கணவர் சுரேஷ் திமுக கட்சியின் உறுப்பினராக தொடர்ந்து இருக்கிறார். திமுக கட்சியில் இருந்து பிரேமா சுரேஷ் நீக்கப்பட்ட பின்பும் பிரேமாவின் கணவர் சுரேஷ் திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஒரே காரணத்தினால்

113 வது கவுன்சிலர் அலுவலகத்தில் கவுன்சிலர் பிரேமா வின் கணவர் சுரேஷ் அமர்ந்து கொண்டு நிர்வாகத்தில் தலையிட்டு வருகிறார். இதனால் மாநகராட்சி ஊழியர்கள் தங்களது பணிகளை சுயமாக செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திமுக கட்சிக்கும் ஆட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் 113 வது வார்டு பெண் உறுப்பினர் பிரேமாவை திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டது போல் அவரது கணவர் சுரேஷையும் திமுக கட்சியின் பொது செயலாளர திமுக கட்சி உறுப்பினரிலிருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட திமுகவின் கீழ்மட்ட தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சென்னை மாநகராட்சி 113 வது வார்டு மாமன்ற பெண் உறுப்பினர் பிரேமா அலுவலகத்தில் அவரது கணவர் சுரேஷ் அமர்ந்துகொண்டு நிர்வாகம் செய்கிறார் என்றும் பெண் கவுன்சிலர் இல்லாத இருக்கும் அலுவலகங்களில் அவர்களது கணவர்கள் மற்றும் உறவினர்கள் வந்து நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என தமிழக முதல்வர் பலமுறை எச்சரித்தும் அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு 113 வது வார்டு பெண் கவுன்சிலர் பிரேமா தன்னுடைய கவுன்சிலர் அலுவலகத்தில் உள்ள இருக்கையில் கணவர் சுரேஷை அமரவைத்து நிர்வாகத்தில் நேரடியாக செயல்பட்டு தலையீடு செய்து வருகிறார் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை வைக்கின்றனர். இந்த குற்றச்சாட்டிற்கு சென்னை மாநகராட்சி ஆணையர் 113 வது வார்டு கவுன்சிலர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு பெண் கவுன்சிலர் பிரேமாவின் கணவர் நிர்வாகத்தில் தலையிடுவது நிரூபனமானால் பெண் உறுப்பினர் பிரேமா மீது சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோ சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டுமில்லாமல் திமுக கட்சிக்கும் ஆட்சிக்கும் உள்ள நற்பயிரை களங்கப்படுத்தும் வகையில் வகையில் 113 ஆவது வார்டு உறுப்பினர் பிரேமாவின் கணவர் சுரேஷ் செயல்பட்டு வருகிறார் என பொதுமக்களின் குற்றச்சாட்டிற்கு திமுக கட்சியின் தலைமை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என நம்பி இருக்கும் திமுக கட்சியின் அபிமானிகள்!

Related Articles

Back to top button