திருட்டு வாகனத்தை
ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் விட்டு பணத்தை ஏப்பம் விட்ட புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் அவல நிலை!?நடவடிக்கை எடுப்பாரா தமிழக டிஜிபி!?
14/11/2018 to 14/12/2018 வரை புதுக்கோட்டை காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்களின் ஏல அறிவிப்பு வெளியிடப் பட்டது.
இந்த ஏலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஆயுதப் படையில் 39 வருடம் பணியில் இருந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் 21/092021 அன்று புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விட்ட டாட்டா சுமோ விக்டா வாகனம் ஒன்றை 1,10,500 ரூபாய் கட்டி வாங்கி உள்ளார்.
அதன் பின்பு வாங்கிய வண்டியின் ஒரிஜினல் நம்பர் கேட்டுள்ளார்
அதற்கு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு பதிவு நம்பரை கொடுத்துள்ளனர்.
ஆனால் அந்த நம்பர் இவர் வாங்கிய வாகனத்தின் கலர் மற்றும் நம்பர் வேறுபட்டுள்ளதை தெரிந்து கொண்ட அந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வாகனத்தின் இன்ஜின் நம்பர் சேஸ் நம்பர் வைத்து ஆர்டிஓ அலுவலகத்தில் உள்ள தகவல் சேகரிக்கும் வெப்சைட்டில் பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி என்னவென்றால் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு காவல் நிலையத்தில் 17/07/2019 ஆம் ஆண்டு அதே இன்ஜின் நம்பர் சேஸ் நம்பர் உள்ள ஒரு டாட்டா சுமோ வாகனம் திருடு போய்விட்டதாக வழக்கு பதிவு செய்து செய்துள்ளதை அறிந்து கொண்ட பின்பு விழுப்புரம் மாவட்ட மாவட்ட காவல் நிலையத்திற்கு சென்று வாகனத்தை பற்றி தகவல் கேட்டதற்கு காவல் நிலையத்தில் வாகனம் திருடு போய்விட்டதாக வழக்குப்பதிவு நிலுவையில் உள்ளது என்றும் கூறியுள்ளனர். உடனே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கரீனா பேகம் அவர்களை சந்தித்து இரண்டு முறை மனு கொடுத்துள்ளார்.
அதற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கரீனா பேகம் அரசு வழக்கறிஞர் ( P P) அவர்களிடம் ஆலோசனை செய்து பின்பு இது சம்பந்தமாக அழைத்துப் பேசுகிறேன் என்று அனுப்பி விட்டுள்ளார். அதன் பின்பு எந்த தகவலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கரீனா பேகம் அவர்கள் தெரிவிக்கவில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் அவர்களிடம் மனு அளித்துள்ளார். ஆனால் மூன்று முறை இது சம்பந்தமாக மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எடுக்கவில்லை என்றும் அதன் பின்பு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ள ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 15 தினத்திற்குள் வாகனத்திற்கு செலுத்திய ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 500 ரூபாயை ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளர் ராஜேந்திரன் வங்கி கணக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்றும் அந்த வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் நிறுத்தும்படியும் உத்தர பிறப்பித்துள்ளார். அதன் பின்பு நீதிமன்ற உத்தரவு ஆணையை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் நேரில் கொண்டு போய் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் கொடுத்துள்ளார். ஒரு வாரத்திற்குப் பின்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து தபால் ஒன்று வந்துள்ளது அந்த தபாலில் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் வைப்புத் தொகை இல்லை என்றும் உங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை அரசிடம் கேட்டுள்ளோம் ஆகவே தற்போது எங்களிடம் பணம் இல்லை என்றும் இரண்டு மாதம் கழித்து உங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை வங்கியில் செலுத்துவோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாகவுனம் ஆனால் இரண்டு மாதம் ஆகியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து எந்த வித பதிலும் பணமும் வரவில்லை என்று வழக்கறிஞர் வைத்து ஒரு நோட்டீஸ் மாவட்ட காவல் கண்காணிப்பதற்கு அனுப்பி உள்ளார். அதன் பின்பு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் மாற்றப்பட்டு விடுகிறார். புது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பொறுப்பேற்றவுடன் 3/08/2022 அன்று மனு கொடுத்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இது சம்பந்தமாக விசாரிக்க கொஞ்சம் நாட்கள் எனக்கு தேவைப்படும் என்று கூறியுள்ளார். தற்போது இரண்டு மாதம் ஆகியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் திருட்டு வழக்கு பதிவு செய்து உள்ள வாகனத்தை நான் பயன்படுத்த முடியாது என்றும் அப்படியே பயன்படுத்தினாலும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு தகவல் தெரிந்தால் உடனே என்னை கைது செய்து வாகனத்தை ஜப்தி செய்து விடுவார்கள் என்றும் பாதுகாக்க முடியாது என்றும் இந்த வாகனத்தை வீட்டின் அருகே பணம் வரும்வரை வைத்திருக்க முடியாது என்றும் இது சம்பந்தமாக பத்திரிக்கைக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும்
ஓய்வு பெற்ற காவல் உதவியாளர் ராஜேந்திரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட காவல் நிலையத்தில் பணி செய்த காவல் ஆய்வாளர் ஒருவர் ஒரு வருடமாக இந்த திருட்டு வாகனத்தை பயன்படுத்தி அதன் பின்பு பணி உயர்வு பெற்று சென்றபோது இந்த வாகனத்தை விட்டுச் சென்றுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்ற நிலையில் உள்ள 114 இரு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 1 நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 116 வாகனங்கள் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு 102 CRPC- யின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்த வந்தது. மேற்படி வாகனங்கள் தொடர்பான அறிவிப்பு புதுக்கோட்டை மாவட்ட அரசிதழ் எண் – 5 நாள் 14.11.2018 மற்றும் 14.12.2019 ஆகிய தேதிகளில் அரசிதழில் வெளியிடப்பட்டும், இது நாள் வரை யாரும் உரிமை கோரவில்லை என்பதால், மேற்படி வாகனங்கள் கைப்பற்றப்பட்ட வெகுநாட்கள் ஆகியுள்ள நிலையில், மேற்படி வாகனங்களின் மூலம் அரசுக்கு ஆதாயம் சேர்பிக்கும் பொருட்டு கைப்பற்றப்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து 21.09.2021 – ம் தேதி காலை 10.00 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தலைமையிடம், மண்டல துணை இயக்குநர், அரசு தானியங்கி பணிமனை திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலர், புதுக்கோட்டை ஆகியோர் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் கோர விருப்பம் உள்ளவர்கள் டெபாசிட் ( முன்வைப்புத் தொகை ) தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ 2000/-ம் மற்றும் மூன்று சக்கர வாகனத்திற்கு ரூ . 5000/ -ம் நான்கு சக்கர வாகனங்களுக்கு டெபாசிட் ( முன்வைப்புத் தொகை ) தொகையாக ரூ10000/ -ம் செலுத்தி ஏலம் கோர வேண்டும், ஏலத்தொகையுடன் தனியாக சரக்கு மற்றும் சேவை வரியும் செலுத்த வேண்டும். ஏலம் கோர விரும்புவோர் நேரில் ஆஜராகி ஏலம் எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்படி ஏலம் எடுக்க விரும்புவோர் *புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களை 19.09.2021 தேதி வாகனங்களை பார்வையிட்டும் 20.09.2021 தேதி காலை 08.00 முதல் 10.00 மணிவரை டோக்கன் பெற்றுகொண்டு ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.
ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது .