Uncategorizedமாவட்டச் செய்திகள்

திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் பணியிடை நீக்கம் உத்தரவை ரத்து செய்ய பல கோடி வாரி வழங்கிய வள்ளல்! விவசாய சங்கங்கள் கொந்தளிப்பு! தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!?

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழல் அதிகாரி வள்ளலை பணியிடை நீக்கம் ரத்து செய்து வாழவைக்கும் தெய்வங்களுக்கு பாராட்டு விழா நடத்தி நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாய சங்கம்.

கனிமவளத்துறை உதவி இயக்குனர் வள்ளலை பணியிடை நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணியாற்றிய அதிகாரிகள் மீது கண்டித்து விவசாய சங்கம் போராட்டம் நடத்தியது

சரியான நேரத்தில் சாட்டையை சுழற்ற தெரியாதவனுக்கு முன்னால் எந்த மிருகமும் அடங்கி நிற்காது என்பது பழமொழி!

இந்த பழ மொழிக்கு ஏற்றார் போல் தமிழகத்தில் உள்ள மூன்று துறைகள் உள்ளது. கனிமவளத்துறை வருவாய்த்துறை பத்திர பதிவுத்துறை இந்த மூன்று துறைகளிலும் லஞ்ச ஊழல் முறைகளில் தொடர்ந்து செயல்பட்டு வரும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுப்பது யார் என்று செய்வதறியாது நிற்கும் நிர்வாக உயர் அதிகாரிகள்!
இந்த நிலை நீடித்தால் திமுக ஆட்சி மீதும் கட்சி மீது உள்ள மக்களின் நம்பிக்கை வீணாக போகும் என்பது தான் நிதர்சனம்.

இதற்கு உதாரணம்
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கனிமவளத்துறையில் நடக்கும் லஞ்சம் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் கனிமவளத்துறை உதவி இயக்குனர் வள்ளல் மீது நடவடிக்கை எடுத்து சட்ட விரோதமாக இயங்கும் கல்குவாரிகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் விவசாய சங்கம் நூற்றுக்கும் மேற்பட்ட புகார் மனு வழங்கி போராட்டம் நடத்தியது அரசுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதை சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட கனிமவள உதவி இயக்குனர் வள்ளல் மீது நூற்றுக்கணக்கான புகார்கள் ஆதாரங்களுடன் கொடுத்த பின்பு
இதற்கு முன்பு இருந்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் அவர்கள் கனிம வளத்துறை உதவி இயக்குனர் வள்ளலை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்தார். விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது மாவட்ட ஆட்சியர் எடுத்த நடவடிக்கைக்கு ஒட்டுமொத்த விவசாய சங்கங்கள் ஆட்சியருக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றிகளை தெரிவித்தனர்.

ஆனால் விவசாயிகளின் நன்றிகள் வாழ்த்துக்கள் சந்தோசம் சில நாட்கள் மட்டுமே நீடிக்கும் என்பது விவசாயிகளுக்கு தெரியாது. அதன் பின்பு சில நாட்களுக்குள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்பு புது மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டார். அதேபோல் கனிமவளத்துறை கூடுதல் செயலாளராக நிர்மல் ராஜ் நியமிக்கப்பட்டார்.இந்த இடைவெளியில்

திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் வள்ளல்

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருப்பூர் மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குனர் (வள்ளல் என்பது அவரது பெயரில் மட்டும் தான் வள்ளல் உள்ளது.. வள்ளல் என்ற பெயர் வைத்துக் கொண்டு ஊழல் முறைகேடு செய்து வாரி சுருட்டுவதில் வள்ளல். )இவர் திமுக மூத்த அமைச்சர் ஒருவரின் ஆதரவோடு கனிம வள துறையில் உதவி இயக்குனராக இருந்து கொண்டு பஞ்சம் ஊழல் முறைகேடு செய்து வைத்துள்ள பல கோடி ரூபாயை வைத்து கொடுக்க வேண்டிய இடத்தில் சரியான நேரத்தில் கொடுத்ததாகவும் இதனால்   மறுபடியும் அதே திருப்பூர் மாவட்டம் அதே கனிமவளத்துறை உதவி இயக்குனராக இருக்கையில் அமர்த்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது .

வள்ளலின் ஆட்டத்தை பார்த்து திருப்பூர் மாவட்டம் மட்டுமல்ல தமிழக முழுவதும் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஊழல் அதிகாரி வள்ளலை வாழவைக்கும் தெய்வங்களுக்கு பாராட்டு விழா அழைப்பிதழ்


அதன் பின்பு விவசாய சங்க நிர்வாகிகள் அடுத்த கட்ட நடவடிக்கையாக நூதன முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்க முடிவு எடுத்தனர்.அதை அடுத்து
திருப்பூர் மாவட்ட நிர்வாக சகாப்தத்தில்
அமைச்சர் ஆய்வு கூட்டம் முதல் மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பு குழு கூட்டம், மக்கள் குறைதீர்வு கூட்டம், விவசாயிகள் குறை தீர்வு கூட்டம், கல்குவாரி புலத் தணிக்கை, கள ஆய்வு, பொதுமக்கள் புகார், விவசாயிகள் புகார், தகவல் அறியும் உரிமைச் சட்ட கேள்விகளுக்கு பதில் என எதற்கும் பணி செய்யாத வள்ளல்
கனிம வள கடத்தலில் விரும்பி லஞ்ச வசூல் லாரிக்கு 400 வசூல் அதுவும் அனுமதி இல்லாத கல்குவாரிக்கு சிறப்பு வசூல், அரசு கஜானாவை காலி செய்ய தானே அடித்த நடை சீட்டு என வள்ளல் செய்த மாபெரும் சாதனையை படைத்து வரும்
ஊழல் அதிகாரி வள்ளலை வாழவைக்கும் தெய்வங்களுக்கு பாராட்டு விழா என்று நூதன முறையில்
தேதி: 05.06.2023 திங்கள் கிழமை காலை 10:00 மணி
இடம் : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.அதில்
தமிழ்நாட்டின் விடிவெள்ளி, கனிம கொள்ளை நாயகன், ஊழலை வளர்த்த சேவகன், லஞ்சம் வளர்த்த பாரி வள்ளல் – திருப்பூர் மாவட்ட கனிமத் துறையில் உதவி இயக்குனராக பணிபுரியும் வள்ளலை வாழ வைத்து, வளர்த்து, பாதுகாத்து வரும் தெய்வங்களை பாராட்டி, சீராட்டி கொண்டாடும் நிகழ்வை கண்டு மகிழ்ந்த கனிமத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கனிமத்துறை இயக்குனர்.ஜெயகாந்தன் .
தலைமை
திருப்பூர் மாநகர செயலாளர்
திரு ரமேஷ் அவர்கள்.
முன்னிலை
திருப்பூர் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மாவட்ட செயலாளர்கள்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்
சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம்
பத்து ரூபாய் இயக்கம்
நொய்யல் இராஜவாய்க்கால் பாதுகாப்பு இயக்கம்
சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கம்
பல்லடம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம்
ஊழல் ஒழிப்பு மற்றும் சட்டப் பாதுகாப்பு குழு
இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம்
மற்றும் சமூக ஆர்வலர்கள். இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல நூதன போராட்டம் நடத்தினர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் கனிமவளத்துறை கூடுதல் செயலாளர் நிர்மல் ராஜ் அவர்களிடம் விவசாய சங்கம் வழங்கிய கோரிக்கை மனு


அதன் பின்பு புதிதாக பொறுப்பேற்றுள்ள கனிமவளத்துறை கூடுதல் செயலாளர் பணிந்த ரெட்டி மற்றும் கனிமவளத்துறை ஆணையர் நிர்மல் ராஜ் அவர்களை நேரில் சந்தித்து நான்கு பக்க கோரிக்கை மனுவை விவசாய சங்க சார்பாக கொடுக்கப்பட்டது.


அந்தக் கோரிக்கை மனுவில் 01/08/2022 அன்று அனுமதி இல்லாமல் கல்குவாரியில் ஏங்கி வருவதாகவும் அந்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனிநலத்தை உதவி இயக்குனர் வள்ளல் அவர்களிடம் விவசாயம் சார்ந்த கொடுக்கப்பட்ட மனுவை வாங்க மறுத்து தகாத வார்த்தையில் பேசி வெளியே செல்லுமாறு உதவி இயக்குனர் வள்ளல் கூறியுள்ளார். இது சம்பந்தமாக 16/11/2022 அன்று திருப்பூர் மாவட்டத்தில் கனிமவளத்துறையில் லஞ்சம் தலை விரித்து ஆடுவதாகவும் கனிம வளத்துறை அலுவலகத்தில் கோமதி என்ற பெண் சட்டவிரோதமாக பணியாற்றி வருவதாகவும் புகார் மனுவை தமிழக ஆளுநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தனிமங்களத் துறை செயலாளர் மூன்று அலுவலகத்திலும் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது. அதே 16/11/2022 அன்று பொதுமக்கள் சார்பாக நூற்றுக்கு மேற்பட்ட புகார் மனு அனுப்பப்பட்டது. அதன் பின்பு 11/02/2023 அன்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் கொடுக்கப்பட்டது. 18/02 2023 திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோடாங்கிபட்டி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரி ரத்து செய்ய வேண்டும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி கையெழுத்து போட்டு புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.அதன் பின்பு 03/03 2023 ,18/04/203 , 18/04/2023 ,09/03/2023 ,15/03/2023 ,22/03/2023 ,25/03/2023 ,17/05/2023 , 21/05/2023 ,26/05/2023 ,29/05/2023 30/05/2023 மனு கொடுத்துள்ளதாக அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஆகையால் தாங்கள் புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாய சங்கம் சார்பாக சென்னையில் தலைமைச் செயலகத்தில் மூலத்துறை கூடுதல் செயலாளர் நிர்மல் ராஜ் அவர்களை நேரில் சந்தித்து 05/062023 மனு கொடுத்துள்ளனர்.
அந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் பார்த்த கனிமவத் துறை கூடுதல் செயலாளர் நிர்மல்ராஜ் உடனடியாக
கனிம வளம் துறையின் ஊழல் நாயகன் வள்ளல் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
கனிமவளத் துறையின் கூடுதல் செயலாளர் பணிந்த ரெட்டி கனிமவளத்துறை ஆணையர் நிர்மல்ராஜ் ஐஏஎஸ் அவர்கள் அதிரடி நடவடிக்கையாக – திருப்பூர் மாவட்ட ஊழல் , லஞ்சப் பேர்வழி வள்ளலை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டிருப்பதற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துள்ளனர்.
மேலும் இது போன்ற ஊழல் செய்யும் அதிகாரிகளின் மீது கடுமையான விசாரணைக்கு உட்படுத்தி லஞ்ச ஊழல் முறைகேடுகளை வெளிகொனற வேண்டும். குற்ற வழக்கு பதிவு செய்து அரசு பணி செய்ய தகுதியற்ற நபர் என்ற அறிவிப்பு செய்து நீக்கம் செய்ய வேண்டும்.
இது போன்ற லஞ்ச ஊழல் பேர்வழிகளால் அதுவும் மாவட்ட ஆட்சியர் பல்வேறு ஆதார ஆவணங்களுடன் அடையாளம் காட்டப்பட்டு பணி விடுவிப்பு நடவடிக்கைக்கு உள்ளான இது போன்ற நாசக்கார, சமூக விரோதிகள், தேச துரோகிகள் இந்த நாட்டின் சொத்தான இயற்கை வளங்களை அழிக்க, இந்த நாட்டின் நிலையை சீர்குலைக்க எந்த எல்லைக்கும் தனது சுயலாபத்திற்காக செல்வார்கள். ஆகையினால் இவர்களை போன்றவர்கள் அரசு பணிக்குள் இருந்து எவ்வளவு பெரிய மோசமான செயல்களை எல்லாம் செய்வார்கள் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இவர்கள் எல்லாம் ஒரு துளி கூட அரசுபணி செய்ய தகுதி அற்றவர்கள் என்பதை அரசு உணர்ந்து இது போன்ற நபர்களை அப்புறப்படுத்தி முடிந்தால் இவர்களின் சொத்துக்களையும் கூட நாட்டுடைமையாக்கும் வேலையில் ஈடுபட சரியான நேரத்தில் நேர்மையான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சாட்டையை சுழற்ற வேண்டி விவசாய சங்கங்கள் கோரிக்கை மனு வழங்கியுள்ளது .குறிப்பிடத்தக்கது.ஆனால் அரசு அதிகாரியாக இருக்கும்  வள்ளல் அளவுக்கு அதிகமாக பல கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக குற்றச்சாட்டின் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வி சமூக ஆர்வலரிடம் எழுந்துள்ளது .ஆகவே லஞ்ச ஒழிப்புத்துறை உடனே நடவடிக்கை எடுக்க விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

_

Related Articles

12 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button