இலவச திரைப்பட பயிற்சிக் கல்வி (நாம் அறக்கட்டளைக்கு) ஒரு கோடி ரூபாய் வாரி வழங்கிய கலைப்புலி எஸ் தாணு!வெற்றிமாறன் கைநீட்டி காண்பிக்கும் மாணவருக்கு V. கிரியேஷன் தயாரிப்பில் இயக்குனர் வாய்ப்பு கலைப்புலி எஸ் தாணு அறிவிப்பு!
இரண்டும் வருடம் முன்பு ஆரம்பித்த வெற்றி மாறனின் திரைப்பட கல்வி பயில நாம் அறக்கட்டளை ஆரம்பித்து கொரோனா பேரிடர் காலத்தில் செயல்படுத்த முடியாமல் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் இந்த அறக்கட்டளை சார்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து 40 மாணவர்கள் வீதம் அனைத்து மாவட்டத்திலும் உள்ள 1400 மாணவர்கள் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தார்கள் .அதில் 1,100 மாணவர்கள் தகுதி தேர்வில் கலந்து கொண்டார்கள் இந்த தகுதி தேர்வு தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் 5 கல்லூரிகளில் நடந்தது .சென்னை மதுரை திருச்சி திருப்பூர் திருநெல்வேலி போன்ற ஐந்து மாவட்டங்களில் 1100 மாணவர்கள் கலந்துகொண்டு தகுதித் தேர்வு எழுதினார்கள். தற்போது அந்த தகுதி தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் நாம் அறக்கட்டளை திரைப்படக் கல்வி பயில பரிந்துரை செய்யப்பட்டு ஜனவரி மாதம் முதல் பயிற்சி படிப்பு ஆரம்பித்து உள்ளனர்.
வெற்றிமாறன் ஆரம்பித்துள்ள இலவச திரைப்படக் கல்வி பட்டறை நாம் அறக்கட்டளை நிறுவனத்திற்கு கலைப்புலி எஸ் தாணு அவர்கள் ஒரு கோடி ரூபாய் நிதி!
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவ மாணவிகளுக்கு நுழைவுத் தேர்வு வைத்து பின்பு அவர்களது வீடுகளுக்கு நேரடியாக சென்று உண்மையிலேயே சமூகத்தால் ஒடுக்கப் பட்டு பொருளாதாரத்தில் பின் தங்கிய விளிம்பு நிலை மனிதர்களாக முதல் தலைமுறை பட்டதாரிகளா என்று கேட்டு தெரிந்து கொண்டு அவர்களின் வலியை மற்றும் தனது பண்பாட்டை ஊடகத்தில் பதிவு செய்ய ஆர்வமுடன் இருக்கிறார்களா என்று கேட்டு அவர்கள் குடும்பத்தின் ஒப்புதலோடு மாணவ மாணவிகளுக்கு கல்வி உனவு தங்கும் இடம் போன்ற வசதிகள் ஏற்பாடு செய்து கொடுத்து ஊடகத் துறையில் மிகச் சிறந்த ஆளுமைகளாக உருவாக்க இன் நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.
நாம் அறக்கட்டளையின் நிறுவனத்தின் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் திரைப்படத்துறையில் ஜாம்பவானாக திகழும் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் முதல் நபராக கலந்துக்கொண்டு வெற்றி மாறனின் தாயார் மேகலா சித்ராவேல் அவர்களிடம் ஒரு கோடி ரூபாய் கொடுத்து விட்டு அவர் பேசுகையில் மி கிரேஷன் தயாரிப்பில் எடுக்கப்படும் திரைப் படத்தின் இயக்குனராக இன் நிறுவனத்தில் படிக்கும் மாணவ மாணவிகளுக்குள் யாரை வேண்டுமானாலும் கை நீட்டி சொல்பவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்படும்.
நாம் அறக்கட்டளையின் பொறுப்பாளராக இருக்கும் வெற்றி மாறனின் மனைவி ஆர்த்தி வெற்றிமாறன் மற்றும் வெற்றி துரைசாமி மற்றும் பாடத்திட்டத்தை வடிவமைத்த பேராசிரியர் பாதர் ராஜநாயகம் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.