திறந்தவெளி கழிப்பிடமாக மாறிய புதுக்கோட்டை ஸ்ரீ பிரகதாம்பாள் கோவில் மங்கள நாயகி அம்மன் குளம்! நடவடிக்கை எடுக்காமல் கோமாவில் இருக்கும் கோவில் நிர்வாகம்!?
புதுக்கோட்டை திருக்கோரணம் பிரகதாம்பாள் கோவில் வளாகத்தின் பின்புறத்தில் அமைந்திருக்கும் மங்கள நாயகி அம்மன் குளம் அமைந்துள்ளது.
குளத்தில் நீருக்கு அடியில் அம்மன் பல வருடங்களாக இருந்து வருவதால் இந்த குலத்தை பக்தர்கள் புனித குளமாக பயன்படுத்தி வந்தனர்.பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் ஆலயத்தைச் சுற்றி இந்த குளத்தின் வழியாக கிரிவலம் சென்று வருவது வழக்கம்.
குளத்தைச் சுற்றி பராமரிப்பு இன்றி திறந்தவெளி கழிப்பிடமாக சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!
தற்போது இந்த குளத்தில் உள்ள தண்ணீர் முழுவதும் பாசி படர்ந்து பராமரிப்பின்றி நாணல் படர்ந்து புதராக இருக்கும் அவல நிலை.
அதே போல் குளத்தின் கரையை சுற்றிலும் முட்புதர்கள் மண்டி கிடப்பதால் கிரிவலம் சுற்றி வரும் பெண்கள் வயதானவர்கள் சிறுவர் சிறுமியர் அச்சத்தில் சென்று
வருகின்றனர்.
மேலும் இந்த பாதையில் மின் விளக்குகள் போதிய அளவு இல்லாததால் இருளாக காணப்படும். இரவு நேரங்களில் சாலைகளில் இரு புறங்களிலும் திறந்த வெளி கழிப்பிடங்களாக பயன் படுத்தி வருவதால் துர்நாற்றம் வீசுகிறது என்றும் பகல் நேரங்களில் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ மனைவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் தொற்றுநோய் பரவும் அச்சத்தில் சென்று வருவதாகவும் அது மட்டும் இல்லாமல் இப்பாதை வழியே கிரிவலம் செல்லும் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் நடந்து செல்ல முடிய வில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இந்த குளத்தை சுற்றியுள்ள கரையில் 24 மணி நேரமும் சமூகவிரோதிகள் சிலர் அமர்ந்து கொண்டு மது அருந்திவிட்டு மது பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் கப் அது மட்டும் இல்லாமல் மது அருந்துறும் போது வாங்கி வரும் தின்பண்டங்களை குளத்தின் கரையை சுற்றி போடுவதால் இப்பகுதி முழுவதும் அசுத்தமாக காணப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இரவு நேரங்களில் அங்கு மது அருந்தி கொண்டிருப்பதால் அப் பாதையில் பெண்கள் செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர் குற்றம் சாட்டுகின்றனர் .
மேலும் இப்பகுதியில் அதிக அளவில் கழிவு குப்பைகளை கொட்டு வதாலும் இறந்த நாய் பூனை போன்றவற்றை இப்பகுதியில் கொண்டுவந்து போடுவதால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிவருவதாகவும் இதனால் பொதுமக்களுக்கு பெரும் தொற்று நோய் பரவும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
கோவில் செயல் அலுவலர் முத்துராமன் பொறுப்பேற்ற பிறகு இந்த குளத்தை சுற்றி உள்ள பகுதியை கண்டு கொள்ளாமல் மெத்தனமாக கடைபிடித்து வருவதாகவும் அதனால்தான் குளத்தைச் சுற்றி கழிவு குப்பைகள் மற்றும் பொதுக்களிப்படமாக சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும் ஆகவே கிரிவலம் செல்லும் பக்தர்கள் செல்லும் பாதைகளில் உள்ள செடிகளை வெட்டி அகற்ற வேண்டும் என்றும் அதுமட்டுமில்லாமல் சாலை ஓரங்களில் பல நாட்களாக தேங்கி கிடைக்கும் கழிவு குப்பைகளால் தொற்று நோய் பரவும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்