திறந்தவெளி மதுபான கூடங்களாக மாறிய பழனி ஆன்மீக தளம். அதிர்ச்சி வீடியோ! கண்டுகொள்ளாமல் மாதம் 10 லட்ச ரூபாய் கல்லா கட்டும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை!? சமூகவிரோதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பழனி ஆன்மிக தளத்தை மீட்டெடுப்பாரா தமிழக முதல்வர் !?

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இந்தியாவிலேயே மிகவும் செல்வச் செழிப்பு மிக்க கோவில்களில் ஒன்றாகும்.

தமிழ்நாட்டில் ஆன்மீக தளம் என்றாலே மிகவும் பிரசித்தி பெற்ற முருகனின் அறுபடை வீடுகள் என்று சொல்லலாம் அதில் முக்கியமாக திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் அமைந்துள்ள பழனியாண்டவர் திருக்கோயில் தான். பழனி என்றாலே ஆன்மீக தளம் என்றும் இங்கே ஆன்மீகவாதிகள் மட்டுமே வந்து செல்வார்கள் என்ற நிலை மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதுதான் நிதர்சனம். தற்போது பழனி மற்றும் பழனி சுற்றுவட்டார பகுதிகளில் சமூக விரோதிகளின் கட்டுப்பாட்டில் தற்போது இருப்பதாகவும்

மதுபான கூடங்களாக மாறி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பழனி நகரம் மற்றும் பழனி சுற்றுவட்டார பகுதியில் கிடைக்காத போதை வாஸ்து பொருள்களே இல்லை எனவும் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர். அதில் முக்கியமாக கஞ்சா மற்றும் போலி மது பாட்டில்கள் 24 மணி நேரமும் கிடைக்கும் எனவும் இதற்காகவே பழனி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் இளைஞர்கள் பழனி நகரத்திற்கு வந்து போதைக்கு அடிமையாகி வருவதாகவும் இதனால் பல இளைஞர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. பழனி நகரம் சுற்று வட்டார பகுதியில் நடக்கும் திறந்தவெளி மதுபான கூடங்களை திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை எனவும்

இதற்காக மாதம் குறைந்தது பழனி நகரத்தில் மட்டும் 5 லட்சம் ரூபாய் வரை கல்லா கட்டி வருவதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் பழனி சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலங்களாக கொலை கொள்ளை வழிப்பறி முக்கியமாக தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை முக்கியமாக விபச்சாரத் தொழில் அனைத்தும் சட்ட விரோதமாக அமோகமாக நடந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் பல புகார்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொலைபேசி மூலமாக தகவல் கொடுத்தும் காவல்துறையினர் ஒரு சிலரை கைது செய்தும் சிறையில் அடைத்து கண்துடைப்பு நாடகம் நடத்தி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சமூக விரோதிகளுக்கு காவல்துறை உடனடியாக செயல்படுகிறதோ என்ற சந்தேகம் தற்போது பொதுமக்களுக்கு வந்துள்ளது என்பதுதான் நிதர்சனம்.ஆகவே சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறியுள்ள திண்டுக்கல் மாவட்டத்தை மீட்டெடுக்க திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாட்டையை சுழற்றுவாரா!? இல்லை இதற்கு முன்பு இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் போலவே சாட்டையை கீழே போடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.