உடுமலை குடிமங்கலம் அதிமுக எம் எல் ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பில்
சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை வெட்டி கொலை செய்த ரவுடிகள்!
நடந்தது என்ன.!?
அதிர்ச்சி தகவல்!

குடிமங்கலம் அதிமுக எம் எல் ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பில் வைத்து
சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வெட்டி படுகொலை !
நடந்தது என்ன.!?
அதிர்ச்சி தகவல்!
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம்
குடிமங்கலம் அருகே
மூங்கில் தொழுவு அருகே

குடிமங்கலம் அதிமுக எம் எல் ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பு உள்ளது. இந்த தோப்பில்
கடந்த மூன்று ஆண்டுகளாக

வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் ஆகியோர் குடும்பத்துடன் தங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் ஐந்தாம் தேதி இரவு சுமார் 11:30மணிக்கு காவல்துறை அவசர உதவி எண் 100 க்கு தொடர்பு கொண்டு
குடிமங்கலம் அருகே உள்ள
அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தோட்டத்தில் குடியிருக்கும் தந்தை மகனுக்கிடையே சண்டை நடப்பதாகவும் சண்டையில் மகன் தந்தையை சரமாரியாக தாக்கியதில் படுகாயத்துடன் ரத்தம் வெள்ளத்தில் இருப்பதாகவும் உடனே காவல்துறையினரை அனுப்புமாறு கூறியுள்ளனர்.
உடனே காவல்துறை அவசர மையத்திலிருந்து குடிமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினரை அனுப்புமாறு கூறியுள்ளனர் .
உடனே

இரவு ரோந்து பணியில் இருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேலுக்கு தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு செல்லுமாறு காவல் நிலையத்திலிருந்து கூறியுள்ளனர். அதனை எடுத்து அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தோட்டத்திற்கு ரோந்து வாகனத்தில் சென்ற காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் சண்டை போட்டுக் கொண்ட
தந்தை மகனை சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளார். மகன் தாக்கியதில்

தந்தை மூர்த்தி படுகாயங்களுடன் இருப்பதால் அவரை மருத்துவமனைக்கு அனுப்புவதற்காக
108 ஆம்புலன்ஸ் க்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் தகவல் கொடுத்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் வருவதற்குள்

குடிபோதையில் இருந்த மூர்த்தியின் மகன்கள் ரவுடிகளான தங்கப்பாண்டி மணிகண்டன் ஆகிய இருவரும் வீட்டிற்குள் இருந்த அரிவாள் எடுத்து வந்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் கழுத்தில் வெட்டியதில்


ரத்த வெள்ளத்தில் அங்கேயே சண்முகவேல் சரிந்து கீழே விழுந்து உயிரிழந்ததை கண்ட குடிமங்கலம் காவல் நிலைய ரோந்து வாகன ஓட்டுநர் உடனே குடிமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவலை கொடுத்தவுடன் குடிமங்கலம் காவல் நிலையத்திலிருந்து காவல்துறையினர் வருவதற்குள் அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தோட்டத்தில் இருந்து தங்கப்பாண்டி மணிகண்டன் ஆகிய இருவரும் தப்பி ஓடி விட்டனர். காயமடைந்த மூர்த்தியும் தப்பி ஓடிவிட்டார்.
காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சண்முக வேலை உடுமலை அரசு மருத்துவமனைக்கு உடல் பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் பின்னர் கொலை செய்து தப்பி ஓடிய நபர்களை குடிமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
காவல்துறையினர் விசாரணையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை கொலை செய்து தப்பியோடிய தங்கப்பாண்டி மணிகண்டன் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தந்தை மூர்த்தி மற்றும் தங்கபாண்டி 2 பேரும் சரணடைந்துள்ளதாகவும் தலைமறைவாக இருக்கும் மணிகண்டனை காவல்துறை தேடி வருவதாகவும் இவர்கள் மீது ஏற்கனவே கொலை கொள்ளை வழிப்பறி போன்ற பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து திருப்பூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜி

கோவை மண்டல ஐஜி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மட்டும் இல்லாமல் டிஜிபி மற்றும் ஏடிஜிபி ஆகியோர் உயிரிழந்த சிறப்பு காவல் உதவியாளர் சண்முகவேல் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்து மரியாதை செலுத்தினர்.அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது.
வெட்டி கொலை செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த கொலை சம்பந்தமாக உடுமலை பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கூறிய அதிர்ச்சி தகவல் என்னவென்றால்
அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தோட்டத்தில் குடி இருந்தவர்களை போல பிரபல தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமான தோப்புகளில் பாதுகாப்புக்காக தற்போது தோப்புகளில் குடி இருக்கும் பல பேர் பல குற்ற வழக்குகளில் தொடர்புள்ள நபர்கள் என்றும் அவர்கள் மீது கொலை கொள்ளை வழிப்பறி போன்ற பல வழக்குகள் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
எது எப்படியோ இனிமேலாவது
அரசியல்வாதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் அவர்களுக்கு சொந்தமான தோப்புகளில் பாதுகாப்பு பணிக்காக குடி வைப்பவர்களின் பின்னணி என்ன என்பதை கண்டறிந்து அவர்கள் மீது ஏதாவது குற்ற பின்னணி வழக்குகள் உள்ளதா என தெரிந்து விசாரணை செய்து அதன் பின்னரே குடி வைக்க வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த கொலை நடந்ததற்கு பின்பு இனிமேல் இது போன்ற ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து தோப்புகளிலும் குடியிருக்கும் நபர்கள் யார் அவர்கள் பின்னணி என்ன !? என காவல்துறையினர் உடனடியாக விசாரணை செய்ய அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உத்தரவிட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம் காவல்துறையினரின் நடவடிக்கையை!




