தி.நகர் பிரபல ஹோட்டலில் கெட்டுப் போய் துர்நாற்றம் வீசிய பிரியாணி மட்டன், சிக்கன் மீன் பயன்படுத்தி வந்தது அம்பலம்! சீல் வைத்து அதிகாரிகள்!
நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் ஒரே இடம் சென்னையில் உள்ள
டி நகர் தான்.
சென்னை .டி .நகர்
வடக்கு உஸ்மான் ரோடு சென்னை சில்க் கடை அருகே பிஞ்சாள சுப்பிரமணி தெருவில் விருதுநகர் அய்யனார் ஹோட்டல் உள்ளது.
(No 63, Usman Road, T Nagar, Chennai – 600017 (Rear Side Of Chennai Silks)
வெளியூரிலிருந்து வந்திருந்த ஒரு குடும்பம் அந்த ஹோட்டலில் 31/06/23 அன்று மதியம் ஆறு பேர் மதிய உணவு சாப்பிட சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் சாப்பிட்ட பிரியாணி மற்றும் சிக்கன் மட்டன் குழம்பு அனைத்தும் கெட்டுப் போய் ஒரே துர்நாற்றம் வீசியதாகவும் உடனே ஹோட்டல் உரிமையாளரிடம் சாப்பிட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
அவர் எந்த பதிலும் சொல்லாமல் சாப்பிட்டவர்களிடம் பணத்தை வாங்குவதில் மட்டுமே குறிக்கோளாக இருந்துள்ளார். சாப்பிட்ட அந்த நபர்கள் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளனர். உடனே உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தி.நகர் வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ள சென்னை சில்க்ஸ் அருகே உள்ள விருதுநகர் அய்யனார் ஹோட்டலுக்கு வந்து உள்ளே சென்று சமையலறையில் சமைத்து வைத்திருந்த பிரியாணி சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, மீன் குழம்பு அனைத்தையும் பரிசோதனை செய்தனர்.
சமையலறையில் இருந்த அனைத்து உணவுப் பொருள்களும் கெட்டுப் போய் சுகாதாரமற்ற நிலையில் துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் முக்கியமாக ஐஸ் பெட்டியில் இருந்த மட்டன் சிக்கன் மீன் அனைத்தும் கெட்டு வீசியதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர் .அது மட்டும் இல்லாமல் கெட்டுப்போன பழைய பரோட்டா கெட்டுப்போன பிரியாணி சுகாதாரமற்ற நிலையில் இருந்ததை கண்டு ஹோட்டல் உரிமையாளரிடம் அதிகாரிகள் கேள்வி மேல் கேள்வி கேட்க அந்த ஹோட்டல் உரிமையாளர் இஞ்சி தின்ன குரங்கு போல் ஒன்றுமே நடக்காதது போல் தெரியாது போல் நின்று கொண்டிருந்தார். உடனே அதிகாரிகள் அங்கிருந்த உணவை ஹோட்டல் உரிமையாளரை சாப்பிடும் படி கூறினார்கள். உரிமையாளர் அதை சாப்பிட மறுத்து விட்டார். அப்போது அதிகாரிகள் நீங்கள் சாப்பிட மாட்டீர்கள் எங்கிருந்தோ வெளியூரில் இருந்து 500 1000 கிலோமீட்டர் இருந்து வரும் பாமர மக்கள் பணம் கொடுத்து சாப்பிட வந்தால் இப்படி கெட்டுப்போன உணவுகளை கொடுக்கலாமா என்று ஹோட்டல் உரிமையாளரை பார்த்து கடுமையாக எச்சரித்தார். அதன் பின்பு உடன் வந்து அதிகாரிகளை அழைத்து சமையலறையில் உள்ள அனைத்து உணவுப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு வெளியே குப்பையில் கொட்டு மாறு சொல்லிவிட்டு ஹோட்டலுக்கு சீல் வைக்குமாறு உத்தரவிட்டார்.
எது எப்படியோ பல மாநிலம், பல நாடுகளில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் ஒரே இடம் சென்னையில் டி நகர். இதை பயன்படுத்திக் கொண்ட ஹோட்டல் உரிமையாளர் பல நாட்களாக செய்து வைத்திருந்த சிக்கன் மட்டன் மீன் பிரியாணி உணவு பண்டங்களை பயன்படுத்தி பணம் சம்பாதித்து வந்துள்ளார். இப்படி கெட்டுப் போன உணவு பண்டங்களை பொதுமக்களுக்கு கொடுத்து பணம் வாங்கிக் கொண்டு அந்தப் பணத்தை வைத்து உயிர் வாழ்வதற்கு பதில் வேறு ஏதாவது தொழில் செய்யலாம் என்று சமூக ஆர்வலர்கள் கோபத்துடன் தெரிவித்துள்ளனர்.