காவல் செய்திகள்

டி.நகரில் கூட்ட நெரிசலில் சமூக விரோதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் காவல்துறை!

தீபாவளி பண்டிகையை கொண்டாட புத்தாடைகள் மற்றும் விலை உயர்ந்த தங்க நகைகள் மற்றும் பொருட்களை பொதுமக்கள் அச்சமின்றி வாங்கிச் செல்லும் வகையில்
சென்னை டி நகர் R-1 மாம்பலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் CCTV கேமராக்களின் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையை சில தினங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
டி நகரில் குறிப்பாக மக்கள் அதிகமாக கூடும் ரங்கநாதன் தெரு அருகே 64 கேமராக்கள் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ட்ரோன் கேமரா மூலமும் மக்கள் கூட்டத்தை கண்காணிக்க காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 136- காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், 100- ஆயுதப்படை ஆளிநர்கள், 100-ஊர் காவல் படை மற்றும் குற்றங்ளை தடுக்க சாதாரண உடையில் 15-ஆண் மற்றும் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் 12.10.2024-ம் தேதி முதல் சுழற்சி முறையில் காவலர்கள் நியமிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக விரோதிகள் நடமாட்டத்தை கண்காணிக்க 24 மணி நேரமும் டி நகர் காவல் நிலைய கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமக்கள் அவசர பயன்பாட்டிற்காக 2 கைபேசி எண்கள் (7358543058, 8438669822) கொடுக்கப்பட்டுள்ளது, 2 ஆம்புலன்ஸ்கள், 2 தீயணைப்பு வாகனங்கள் அவசர கால பயன்பாட்டிற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சென்னை மாநகர காவல் துறை சார்பாக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button