தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒரு ஊராட்சிக்கு 10 லட்சம் ரூபாய் வீதம் 388 ஊராட்சி ஒன்றியங்களில் மாதம் சுமார் 50 கோடி ரூபாய் வரை ஊழல் முறைகேடு! நடவடிக்கை எடுப்பார் தமிழக முதல்வர்!
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒரு ஊராட்சிக்கு 10 லட்சம் ரூபாய் வீதம் 388 ஊராட்சி ஒன்றியங்களில் மாதம் சுமார் 50 கோடி ரூபாய் வரை ஊழல் முறைகேடு! நடவடிக்கை எடுப்பார் தமிழக முதல்வர்!
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் – NREGS, என்றும் அழைக்கப்படும்). இத்திட்டத்தின் கீழ், பொதுவேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய சிறப்புத்திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். இந்திய அரசின், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், மாநில அரசாங்கத்துடன் இணைந்து, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
கிராமப்புற இந்தியாவில், வறுமைக்கோட்டிற்கு கீழே வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் வாங்கும் திறனை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இணைந்து வேலை செய்து வருகின்றனர்.நாட்டிலுள்ள ஏழை மற்றும் பணக்கார மக்களியிடையே உள்ள இடைவெளியை குறைக்க இத்திட்டம் முயலும். 3-ல், ஒரு பங்கு, வாய்ப்பினை பெண்களுக்கு இத்திட்டம் அளிக்கும்.
பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் இச்சட்டத்தின் கீழ் 33 சதவீத வேலையை பெண்களுக்கு கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு வருடத்தில் 100 நாட்களுக்கு வேலை பெறலாம். இந்த 100 நாட்கள் வேலையை ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும். வேலைக்காலம் தொடர்ச்சியாக 14 நாட்களாவது இருக்கவேண்டும். ஆனால் ஒரு வாரத்திற்கு 6 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு ஊராட்சிகளில் நடக்கும் வேலை சம்பந்தமாக கிராம பஞ்சாயத்து மற்றும் திட்ட அலுவலர் அலுவலகங்களில் உள்ள செய்தி பலகையில் வேலை நடைபெறவிருக்கும் இடம், தேதி மற்றும் வேலைவாய்ப்பு பெறவிருப்போரின் பெயர்கள் போன்ற தகவல்கள் ஒட்டப்படும்.
வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது வேலை செய்த 14 நாட்களுக்குள்ளோ வழங்கப்பட வேண்டும். கூலிப்பணத்தில் ஒரு பகுதியை நாள் கூலியாகவும் வழங்கலாம்.
வேலை நடக்கும் இடத்தில் பாதுகாப்பான குடிநீர், குழந்தைகளுக்கு நிழல், ஓய்வெடுப்பதற்கு இடம், முதலுதவி பெட்டி போன்ற வசதிகள் செய்துதரப்படவேண்டும். வேலை செய்யும்போது ஏற்படும் சிறு காயங்களுக்கான மருந்துகளையும், ஏனைய சுகாதாரத்திற்கான அவசர சிகிச்சைக்கான மருந்துகளையும் முதலுதவிப் பெட்டியில் வைத்திருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் நீண்டநாள் தாங்கும் நீடித்த சொத்துக்கள் ஏற்படுத்துதல்
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், ஊரக ஏழை மக்களுக்காக நீடித்த நிலையான சொத்துக்களை உருவாக்கி அவர்களின் வாழ்க்கையை வளமாக்குவதாகும். தரகர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் வேலைகளுக்கு அனுமதி இல்லை இத்திட்டத்தின் கீழ் செய்ய வேண்டிய வேலைகள்
நீர்வள பாதுகாப்பு மற்று நீர் சேமிப்பு
வறட்சி எதிர்ப்பு திறன் ஏற்படுத்துதல், காடு வளர்ப்பு, மரம் நடுதல்
நீர்பாசன வாய்க்கால், நுண்பாசனம், சிறுபாசனம் போன்ற வேலைகள்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினைச் சேர்ந்த மக்களுக்கும், இந்திய அரசின் இந்திரா-அவாஸ் யோஜனா திட்டத்தின் சலுகை பெறுவோருக்கும், நீர்ப்பாசன வசதி அளித்தல்
ஏரிகளை தூர்எடுத்தல் போன்ற ஏனைய பழங்கால நீர் நிலைகளை புதுப்பிக்கும் வேலைகள்
நில மேம்பாடு
நீர் தேங்கும் பகுதிகளில் வடிகால் வசதி அமைத்து வெள்ளத்தில் இருந்து பாதுகாத்தல்
அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும் கிராமங்களை இணைத்தல். சாலைகள் அமைத்து, தேவைப்படும் இடங்களில் சிறுபாலங்கள் அமைத்தல் மற்றும், கிராமங்களின் உள்பகுதிகளிலும் தேவையான இடங்களில் சிறுபாலங்கள் அமைத்தல்
மத்திய அரசு மாநில அரசுடன் கலந்து ஆலோசித்த மற்ற பணிகளும் இதனுள் அடங்கும்.
ஆனால் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தில் குறிப்பிட்டுள்ள சட்ட விதிகள் அனைத்தையும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காற்றில் பறக்க விட்டு பல முறைகேடுகளை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் 388 ஊராட்சி ஒன்றியங்களும், 12,525 கிராம ஊராட்சிகளும் உள்ளன. தமிழகத்தில் உள்ள 37 மாவட்டத்திலுள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒரு ஊராட்சியில் குறைந்தது 150 வேலை செய்து வருகிறார்கள். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாட்கள் வேலை தரப்படுகிறது. ஒரு நாளுக்கு ரூ. 273 வழங்கப்படுகிறது.ஆண்டுக்கு 100 நாள் வேலை என்பது படிப்படியாக சுருங்கி, இன்றைக்கு ஆண்டுக்கு 50 முதல் 65 நாட்கள் தான் வேலை நடக்கிறது. குளம், குட்டை உள்ளிட்ட கிராமப்புற நீர்நிலைகளை தூர்வாருவது, சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகள்தான் இதன் அடிப்படை.
குறிப்பாக
விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 11 ஊராட்சி ஒன்றியங்கள் இந்த ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட்டு 450 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் குறிப்பாக அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 32 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. ஆமணக்குநத்தம்
அத்திப்பட்டி
செட்டிக்குறிச்சி
செட்டிப்பட்டி
சிதம்பரபுரம்
கோபாலபுரம்
கஞ்சநாயக்கன்பட்டி
கட்டாங்குடி
கொப்புச்சித்தம்பட்டி
கோவிலாங்குளம்
குல்லூர்சந்தை
குருந்தமடம்
மலைப்பட்டி
டி. மீனாட்சிபுரம்
பாலவநத்தம்
பாளையம்பட்டி
பந்தல்குடி
பெரியநாயகிபுரம்
பெரியவள்ளிக்குளம்
போத்தம்பட்டி
புலியூரான்
இராமானுஜபுரம்
செம்பட்டி
சேதுராஜபுரம்
சூலக்கரை
சுக்கிலநத்தம்
திருவிருந்தாள்புரம்
தும்மக்குண்டு
வதுவார்பட்டி
வெள்ளையாபுரம்
வேலாயுதபுரம்
வில்லிபத்திரி ஆகிய 32 ஊராட்சிகள் அடங்கும்.
தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் வருகை பதிவு கடந்த ஆண்டு முதல் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தேசிய மொபைல் கண்காணிப்பு முறை மூலம் இதற்காக ஒரு செயலி உருவாக்கப்பட்டு அதன்மூலம் வருகை பதிவு செய்யப்படுகிறது. இந்த ஆப்பில் காலையில் தொழிலாளர்கள் வருகையின்போது ஒருமுறையும், பணி முடிந்த பின் ஒருமுறையும் வருகைப்பதிவு செய்யப்படுகிறது. இந்த சூழலில், அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது தொழிலாளர்கள் இல்லையென்றால் ஆப்சென்ட் போட முடியாது. வெறும் எச்சரிக்கை மட்டுமே செய்துவிட்டு செல்கின்றனர். இதை பயன்படுத்தி பல கிராமங்களில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை கூடுதலாக காண்பிக்க காலை 6.30 மணிக்கே வேலை செய்யும் தொழிலாளர்களின் அட்டை பணி செய்யும் இடத்தில் பதிவு செய்யப்படுகிறது. அதன் பின்னர் தொழிலாளர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து விடுகின்றனர்.மீண்டும் பல மணி நேரம் கழித்து வேலைக்கு சென்று கணக்கு காட்டி வருகின்றனர்.இப்படி காலை, மாலையில் வருகை பதிவுக்கு மட்டும் சென்று வருவதாக புகார்கள் உள்ளது. இதை கண்காணிக்கவும், புகார் செய்யவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணில் தெரிவித்தாலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் பணிகளை அடிக்கடி சென்று கட்டாயம் களஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.ஆய்வு செய்யாமல் விடுபட்டு முறைகேடுகள் ஏதேனும் நடந்தாலும், பணியில் முரண்பாடுகள் இருந்தாலும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கைவிடுத்துள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: 100 நாள் வேலை திட்டம் எனப்படும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தினசரி பணிக்கு வருவோர் குறித்து, காலை மற்றும் மதியம் என்எம்எம்எஸ் எனப்படும் மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பெரும்பாலான ஊராட்சிகளில் குடும்பத்திற்கு வழங்கும் சராசரி வேலை நாட்கள் மிகக்குறைவாக உள்ளன.இது தொடர்ந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ஊராட்சிகளிலும், குக்கிராமங்களிலும், தினசரி வேலை நடக்க வேண்டும். கண்டிப்பாக சமுதாயப் பணிகள் நடக்க வேண்டும். இதில் முரண்பாடுகள் காணப்பட்டால் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், பணி மேற்பார்வையாளர், ஊராட்சி செயலர், ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 32 ஊராட்சி மன்றங்களிலும்
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் ஊழல் முறைகேடுகள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் குட்டைகளை தூர்வாரும் பணிகளை இயந்திரங்களை பயன்படுத்தி ஒரே நாளில் அந்த வேலையை செய்து முடித்துவிட்டு
நான்கு வாரங்களாக 100 நாள் வேலை ஆட்களை வைத்து செய்து வருவதாக இயந்திரங்களை வைத்து வேலை செய்து இடத்தில் ஆட்களை நிறுத்தி புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களை வேறு பணி செய்ய அனுப்பி விட்டு ஒரு நபரிடம் வாரம் 200 ரூபாய் வீதம் 120 நபர்களிடம் வாரம் குறைந்தது 25 ஆயிரம் ரூபாய் மாதம் ஒரு லட்சம் ரூபாய் பணமாக வசூல் செய்து போலியாக ஆவணங்கள் தயார் செய்து
முறைகேடு செய்து வருவதாகவும்
32 ஊராட்சிகளில் ஒரு வாரத்திற்கு குறைந்தது 10 லட்சம் வரை வசூல் செய்து வருவதாகவும் ஒரு நபருக்கு 50 ரூபாய் வீதம் 32 ஊராட்சிகளில் 100 நாட்கள் வேலை செய்யும் நபர்களிடம் குறைந்தது சுமார் 2 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக வாங்குவதாகவும்
அப்படி என்றால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் குறைந்தது மாதம் 20 லட்சம் ரூபாய் வரை பணமாக கையூட்டு பெற்றுக் கொண்டு ஊழல் முறைகேடு நடப்பதாகவும் ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதாகவும் குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செம்பட்டி ஊராட்சியில் பணம் கேட்பதாக பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாகவும்
சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டும் இல்லாமல்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பெண் தொழிலாளா்களை அவதூறாகப் பேசுவதுடன், வேலை செய்யாத தொழிலாளா்களின் பெயா்களை வருகைப் பட்டியலில் சோ்த்து சம்பளத்தை தொழிலாளா்களுக்கு வழங்கி அதில் கையூட்டு பெறும் பணித்தளப் பொறுப்பாளரை இடமாற்றம் செய்ய வேண்டும். தொழிலாளா்களுக்கு முறையாக பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
பல ஊராட்சிகளில் பொதுமக்கள் சாலை மறியல் மறlஅந்தந்த ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம்
சட்ட விதி 15(5)(e) தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் 2005 -ன் கீழ் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் வட்டார திட்ட அலுவலர் மற்றும் கிராம ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்கும் போது பேச்சுவார்த்தை நடத்துவதும் அந்த பேச்சுவார்த்தைகளில் ஊராட்சிகளில் பணியில் இருப்பவர்கள் யாரும் 100 நாள் வேலை செய்பவரிடம் பணமாக பெறக் கூடாது அப்படி பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் முன்பு கடுமையாக விமர்சிப்பது போல் விமர்சித்து அவர்களை சமாதானப்படுத்தி கண்துடைப்பு நாடகம் நடத்தி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்
15(5)(e) சட்ட விதியை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காற்றில் பறக்க விட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தொடர்ந்து ஊழல் முறைகேடு செய்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனைவரும் அதைப் பற்றி கவலைப்படாமல் தங்களுடைய வசூல் வேட்டையை தொடர்ந்து செய்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே தமிழகத்தில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தில் நடக்கும் மக்கள் நல பணிகளில் சுமார் மாதம் 50 கோடி ரூபாய் வரை ஊழல் முறைகேடு நடப்பதாக வரும் குற்றச்சாட்டின் அடிப்படையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நேர்மையான முறையில் வேலைகள் நடக்கிறதா என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு நேர்மையான அதிகாரிகளை நியமித்து விசாரணை நடத்தினால் மட்டுமே ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளை களையெடுக்க முடியும். அது மட்டும் இல்லாமல் திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் முறைகேடுகள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே
அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.