தேனியில் நடைபாதை தேர்வு Health walk )சுகாதார நடை திட்டம் மருத்துவத் துறை சார்பில் “நடப்போம் நலம் பெறுவோம்!

தினசரி நாம் உடல் ஆரோக்கியத்திற்காக செய்யும் உடற்பயிற்சிகளில் ஒன்று நடை பயிற்சி. தினசரி காலை மற்றும் மாலை வேளையில் குறைந்தது 30 நிமிடங்களாவது நடக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் உடல் பருமன், சோர்வு உள்ளிட்ட பல வியாதிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் சுகாதார நடை பயிற்சி சாலை அமைக்கப்படும் .
(Health walk )சுகாதார நடை திட்டம்
பொது மக்களுக்கு உதவும் வகையிலும் பலரையும் நடைப்பயிற்சிக்கு ஊக்குவிக்கும் நோக்கிலும் புதிய சாலை அமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மருத்துவத்துறை சார்பில் “நடப்போம் நலம் பெறுவோம்” என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதில் பங்கேற்று பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், தமிழகத்தில் விரைவில் “நடப்போம் நலம் பெறுவோம்” என்ற தலைப்பில் சுகாதார நடை பயிற்சி திட்டம்
முதற்கட்டமாக தேனி மாவட்டம் அரண்மனை புதூர் கொடு விலார்பட்டி சாலை மற்றும் கொட்டாபட்டி பகுதியில் மருத்துவம் மற்றும் மக்களின் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணி அவர்கள் 8 கிலோமீட்டர் தூரம் நடை பயிற்சி செய்து மேற்கொள்வதற்கான நடைபாதையை தேர்வு செய்து உறுதிப்படுத்துவதற்கான ஆய்வு மேற்கொண்டார்.
உடன் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜிவானா தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே சரவணன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்