தேனி மாவட்டத்திலிருந்து கம்பம் மெட்டு வழியாக கேரளாவிற்கு இரவு நேரங்களில் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக கனிமவளம் ஏற்றி செல்லும் லாரிகள்!
கண்டுகொள்ளாமல் மாதம் 20 லட்சம் வரை கல்லாக கட்டும் தேனி மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை!

தேனி மாவட்டத்திலிருந்து கம்பம் மெட்டு வழியாக
கேரளாவிற்கு பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கனிம வளங்களை கனரக டிப்பர் லாரிகள் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் எம் சாண்ட் ஜல்லி கற்கள் போன்ற கட்டுமானத்துக்கு தேவையான பொருட்களை பல்லாயிரக்கணக்கான யூனிட்டுகளை சட்டவிரோதமாக கடத்தி செல்கிறார்கள் .

குறிப்பாக கேரளாவிற்குள் கனிம வளங்களை எடுத்து செல்லும் தமிழ்நாடு பதிவு எண் கொண்ட லாரிகளை சோதனைசாவடிகளில் நிறுத்தி கேரள காவல்துறை அதிகாரிகள் சோதனை செய்து உள்ளே அனுப்புவது வழக்கமாக உள்ளது.

அப்படி தமிழ்நாடு பதிவு எண் கொண்ட லாரிகளை சோதனை செய்யும்போது ஒரு தடவை பயன்படுத்தக்கூடிய அரசு அனுமதி வழங்கிய நடை சீட்டு எனப்படும் (transit pass) போன்ற ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என்று கேரள அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கிறார்கள்.
அந்த ஆய்வில் அனுமதி இல்லாமல் சரியான ஆவணங்கள் இல்லாத டிப்பர் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கேரளா கனிமவளத் துறைக்கு காவல்துறையினர் பரிந்துரை செய்கிறார்கள் .
அதனை ஏற்று கேரளா கனிமவளத்துறை அதிகாரிகள் அளவுக்கு அதிகமாக அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக கனிம வளங்களை ஏற்றி வந்த லாரிகளுக்கு அபதாரம் விதிக்கிறார்கள்.
கேரள காவல்துறை தனது பணியை சரியாக செய்கிறது .

தமிழ்நாடு பதிவு எண் கொண்ட கனரக டாரஸ் டிப்பர் லாரிகள் மோட்டார் வாகன சட்ட விதிகள் அனுமதி வழங்கியுள்ள அளவுகளுக்கு அதிகமாக கனிம வளங்களை ஏற்றுக்கொண்டு அரசு அனுமதி வழங்கியுள்ள நடை சீட்டுகளை தவறாக பயன்படுத்தி கனிம வளங்களை கடத்திச் செல்வதாகவும் தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள தேனி மாவட்ட சோதனை சாவடியில் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதாகவும் கனிமவளத்துறை காவல்துறை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் உதவியுடன் கேரளாவிற்கு கனிமவள கடத்தல் குறிப்பாக

இரவு நேரங்களில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை (50 முதல் 60 டன் வரை) ஏற்றிச் செல்வதை கண்டுகொள்ளாமல் இருக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு கனிம வளம் எடுத்துச் செல்லும் கனரக லாரி உரிமையாளர்கள் மாதம் சுமார் 20 லட்சம் வரை கப்பம் கட்டி வருவதாகவும் 30-க்கும் மேற்பட்ட கல்குவாரி உரிமையாளர்களிடமிருந்து

தேனி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் மாதம் அரை கோடி வரை கல்லாகட்டி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது.
குறிப்பாக ஒரு கனரக டாரஸ் லாரிக்கு உத்தமபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளருக்கு 3000 வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு 5000 கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு பத்தாயிரம் காவல் துறைக்கு 2000 என ஒரு லாரிக்கு 20000 வரை மாதத்திற்கு கொடுக்கப்படுகிறது. தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு தினந்தோறும் சுமார் 100 கனரக டாரஸ் லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. அப்படியானால் மாதம் குறைந்தது 20 லட்சம் வரை லஞ்சமாக அதிகாரிகளுக்கு கிடைப்பதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
தேனி முதல் குமுளி ,கம்பம் மெட்டு, போடி மெட்டு,சாலைகள் சேதம் அடைந்துள்ளதால் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள் சிக்கி தொடர்ந்து உயிரிழப்பு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் நலன் கருதி இது சம்பந்தமாக இதற்கு முன்பு

தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த சஜீவானா மற்றும்

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் கனரக லாரிகளை ஆய்வு மேற்கொள்ள நேர்மையான அதிகாரிகளை நியமித்து தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை புகார் கொடுத்தும்
இதுவரை நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.
கடந்த காலங்களில் முல்லைப் பெரியாறு அணைக்கு வெறும் 4 யூனிட் மணலை ஏற்றி சென்ற தமிழக அரசாங்கத்தின் வாகனத்தை கேரள வனத்துறை தடுத்து நிறுத்திய போது சில அமைப்புகள் கேரளா அரசின் நடவடிக்கையை எதிர்த்து பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர்.
ஆனால் அதற்கெல்லாம் கேரளா அரசு செவி சாய்க்கவில்லை
அன்றைக்கு டிப்பர் உரிமையாளர் சங்கத்திடம் மற்றும் கேரளாவுக்கு காய்கறி கொண்டு செல்லும் வாகன உரிமையாளர்கள் சங்கத்திடமும் போராட்டம் நடத்திய அமைப்புகள் ஆதரவு கேட்டபோது கம்பம் மெட்டு வழியாகவும் போடி மெட்டு வழியாகவும் குமுளி மெட்டு வழியாகவும் கள்ளக்காதலிக்கு பூ கொடுப்பது போல் திருட்டுத்தனமாக தேனி மாவட்டத்திலிருந்து கனிம வளங்களை கொண்டு சென்றதும் குறிப்பிடத்தக்கது. தற்போது




தமிழ்நாடு பதிவு எண் கொண்ட லாரி ஓட்டுனரை கேரளா காவல்துறை தாக்கியதால் கேரளாவிற்கு கனிமங்களம் கொண்டு செல்லும் டிப்பர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் எனக் கூறியுள்ளார் டிப்பர் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் காஜா மைதீன் .
அன்றைக்கு ஒரு நியாயம் இன்றைக்கு ஒரு நியாயமா?
கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் 6.08.2023 கம்பம் மெட்டு அருகில் ஏலக்காய் தோட்டத்திற்கு தொழிலாளர்களை வாகனத்தில் ஏற்றிச்சென்ற காமய கவுண்டன்பட்டியை சேர்ந்த ஓட்டுநர் தாக்கப்பட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது அன்றைக்கு பல அமைப்புகள் அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டி போராடி தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள். அன்றைக்கு எங்கே போனது டிப்பர் உரிமையாளர் சங்கம்?
இன்றைக்கு விதிகளை மீறி கேரளாவுக்கு கனிம வளங்களை கொண்டு செல்லும்போது நேர்மையான அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றால் அனுமதி அளிக்கப்பட்ட அளவுக்கு மேல் கனிம வளங்களை எடுத்துச் செல்வதை விட்டுவிட்டு நேர்மையான கேரள அதிகாரிகள் தங்களது பணிகளை செய்து வருவதை பொறுக்க முடியாத கனிம வள கடத்தல் கும்பல் ஓட்டுனரை தாக்கி விட்டார்கள் என்று சொல்லி செய்த குற்றங்களை மறைப்பதற்கு இரு மாநிலப் பிரச்சனை என திசை திருப்பும் விதத்தில் நடந்து கொள்வதை
தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஆகவே கம்பம் மெட்டு பகுதியில் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக கனிமவளம் ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநரை கேரளா அதிகாரிகள் தாக்கிய பிரச்சனையை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனம் கொள்ள வேண்டும்.
அரசு அனுமதி வழங்கியதை விட சட்ட விரோதமாக அதிக அளவு கனிம வளம் கடத்திச் செல்லும் மாபியா கும்பல்களின் பிரச்சனையை
தமிழ்நாடு கேரளா என இரு மாநில பிரச்சனையாக கொண்டு செல்லக்கூடாது என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
எது எப்படியோ
இரண்டு ஆண்டுகளாக தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த சஜீவானா தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளம் கடத்தல் சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் கொடுத்த எந்த புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்காமல் கேரளாவில் எஸ்டேட் வாங்கி அதை பராமரிப்பு செய்வதில் மட்டுமே தீவிரம் காட்டினார் என்ற குற்றச்சாட்டை சமூக ஆர்வலர்கள் வைத்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு சட்ட விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை ஏற்றிச்செல்லும் கனரக டாரஸ் டிப்பர் லாரிகளை கண்டுபிடித்து அந்த வாகனங்களின் உரிமத்தை ரத்து செய்ய

தேனி மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் ஐஏஎஸ் நடவடிக்கை எடுப்பாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியருக்கு ரிப்போர்டர் விஷன் புலனாய்வு பத்திரிக்கை சார்பாக பணி சிறக்க வாழ்த்துக்கள்!
.