தேனி மாவட்டம் வருவாய்த்துறை மற்றும் வனத்துறை நிர்வாகத்தின் மெத்தனப்போக்கு!!தேவாரம் மலைப்பகுதியில் 1500 ஏக்கர் நிலம் பறிபோகும் அவல நிலை!? தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!?
தமிழக எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதியியை சட்டவிரோதமாக கேரள எல்லைக்குள் கொண்டு செல்லும் கேரளா வருவாய்த்துறை!
கேரள தமிழக எல்லையில் தமிழக அரசின் 1500 ஏக்கர் நிலங்கள் பறிபோகும் அவலநிலை.
Vanani Caravan Park.
தமிழக அரசும், தேனி மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்திட கோரிக்கை:
கேரளா மாநிலம் சதுரங்க பாறை கிராமம்-உடும்பஞ்சோலை தாலுகா- இடுக்கி மாவட்டம்*
கோட்டயம் பகுதியைச் சேர்ந்த பிபின்குமார் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரும், கேரள மாநில சுற்றுலாத்துறை அமைச்சரான முகம்மது ரியாசிற்கு நெருக்கமானவர்கள் என்றும், இந்த சகோதரர்கள்,முகமது ரியாஸ் மூலமாக, இடுக்கி மாவட்டம், உடுமஞ்சோலை தாலுகாவில் உள்ள சதுரங்கப்பாறை கிராம எல்லையையொட்டி, சுமார் 1500 ஏக்கரில் ஒரு பொழுதுபோக்கு பூங்காவை பிரமாண்டமாக நிர்மாணித்து வருவதாகவும்,
இந்த குமார் சகோதரர்களுக்கு நெருக்கமான முகமதுரியாஸ் இருப்பதாகவும் இவர் கேரள மாநில முதல்வர் பினராயிவிஜயனின் செல்ல மகளான வீணாவின் கணவர் ஆவார் .
தமிழக-கேரள எல்லைக்குள் 1500 ஏக்கர் பரப்பில் உருவாகும் இந்த தனியார் பொழுதுபோக்கு பூங்கா அமையவிருக்கும் சர்வே எண்கள் 348/1 மற்றும் 348/2 ஆகியவை தமிழக எல்லைக்குள் இருந்தாலும், வரைபடத்தை திருத்தி சதுரங்கபாறை எல்லைக்குள் கொண்டு போன கேரளா வருவாய்த்துறை, கேரளா சுற்றுலா அமைச்சர் ரியாசின் ஒப்புதலுடன், பிரம்மாண்டமான பொழுதுபோக்கு பூங்காவை அமைக்க ஒப்புதல் கொடுத்திருப்பதாகவும்,
தேவாரம் மலை
என்று பட்டியலிடப்பட்ட நிலங்களையாவது, தேனி மாவட்ட நிர்வாகம் குறைந்தபட்சம் அளவிட வேண்டும் என்று முல்லை-பெரியாறு பாசன விவசாயிகள் வைத்த கோரிக்கை தமிழக அரசிற்கும், தேனி மாவட்ட நிர்வாகத்திற்கும் இதுவரை சென்று சேரவில்லை என்றும்,
யார் சொத்தை யார் காப்பாற்றுவது என்கிற மாற்றாந்தாய் மனப்பான்மையில், தேனி மாவட்டம் நிர்வாகம் நடந்து கொண்டதன் விளைவாக, பகிரங்கமாக தமிழகத்தின் பட்டா நிலங்களுக்குள் கட்டுமானத்தை துவக்கி இருக்கிறது வனானி நிர்வாகம் என்றும்,
சதுரங்க பாறைக்கும் தேவாரம் மலை என்று பட்டியலிடப்பட்ட பட்டா நிலங்களுக்கும் இடையிலான தூரத்தை அளந்து வகைப்படுத்துவதில், தமிழக அரசிற்கும், தேனி மாவட்ட நிர்வாகத்திற்கும் என்ன சிக்கல் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்புவதாகவும்,
ஏற்கனவே தனியார் ஜூவல்லர்ஸ் நிறுவனம், சாக்கலூத்து மெட்டில் பிரம்மாண்டமாக கட்டி எழுப்ப இருந்த சொகுசு விடுதிக்கு சொந்தக்காரர்கள் ஓடிய சுவடு மறைவதற்குள், அடுத்த கும்பல் களத்திற்கு வந்திருப்பதாகவும்,
சதுரங்க பாறையை ஒட்டி இருக்கும், தேவாரம் மலைப்பகுதியை, கண்காணிக்கும் கடமையும், பொறுப்பும் கொண்ட தேனி மாவட்ட வனத்துறை அலுவலர்களுக்கு, தனியார் நிறுவனம் கட்டி எழுப்பும் இத்தனை பிரம்மாண்டமான பூங்கா குறித்து தகவல் தெரியுமா…..? தெரியாதா…?? என்றும்,
தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஆர்டிஓ, தாசில்தார், தேவாரம் பிர்க்கா சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட யாருக்கும் இந்த கட்டுமானம் குறித்து தகவல் தெரியாது என்றால், என்ன தான் நடக்கிறது என்றும், கேரளா சுற்றுலாத்துறையின் அத்துமீறல்களை கண்டும் காணாமல் இருந்து வரும், தமிழக அரசும், தேனி மாவட்ட ஆட்சித் துறை நிர்வாகமும், தேனி மாவட்ட வனத்துறை நிர்வாகமும், இதுதொடர்பாக, முறையான, விரைவான, நியாயமான நடவடிக்கையினை எடுத்திட முன்வர வேண்டும் என்றும்,பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசும், தேனி மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்குமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்………!*