மாவட்டச் செய்திகள்

தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி! கண்டுகொள்ளாமல் மௌனம் காத்த தேனி மாவட்ட ஆட்சியாளர் !?

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி!

தேனி மாவட்டம், போடி தாலுகா, உப்புக் கோட்டை கிராமத்தில் பட்டாளம்மன் கோவில்தெருவில் வசித்து வரும் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தை சேர்ந்த (புவனேஸ்வரி (வயது 34 )கணவர் கண்ணன்( வயது 40) சில நாட்களுக்கு முன்பு
(செல்லப்பாண்டி ஆசாரி மற்றும் அவருடைய அண்ணன் சங்கிலி, ,| கட்டாயப்படுத்தி,
வீட்டு வேலைக்கு சென்ற போது அந்த வீட்டின் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டதாக சுந்தரபாண்டி மூலம் 26.09.2022) அன்று தகவல் கொடுத்துள்ளார்.
இவருக்கு 3 குழந்தைகள், மூத்தமகன் யுவன் ராஜாவுக்கு (வயது 13) மாதம் ஒரு முறை ரத்தம் மாற்றம் செய்ய வேண்டிய நிலையில் இறந்த கணவர் வேலை செய்த வீட்டின் உரிமையாளரிடம் உரிய இழப்பீடு பெற்றுத்தர

வீரபாண்டி காவல் நிலையம் 26/12/2022 அன்று புகார்

26/12/2022 அன்று புகார் கொடுத்தன் பெயரில்
வீரபாண்டி காவல் நிலையத்தில் (174 என்ற பிரிவில் )வழக்குப் பதிவு செய்து பிசி பட்டி காவல் ஆய்வாளர் ராஜேஷ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்
இது குறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தேனி துணை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தும் இது வரை அது சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை .

முன்னாள் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தற்போது மாவட்ட ஆட்சியாளராக இருக்கும் சஜீவனா

அதன் பின்பு முன்னாள் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அவர்களிடம் கருணைக் கொலை செய்ய கோரிக்கை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை
எனவே தற்போது கணவர் இறப்புக்கு உரிய இழப்பீடு வழங்காத காரணத்தால் குடும்பம் மிகவும் வறுமையில் இருப்பதாலும் இந்த குழந்தைகளை வைத்து நாங்கள் உயிர் வாழ முடியாது இறப்பதே மேல் என்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புவனேஸ்வரி மற்றும் இறந்த கண்ணனின் தாயார் இரண்டு பேரும் தன் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்தபோது மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் பணியில் இருந்த பெண் காவலர்கள்
உடனடியாக அவரை மீட்டு உடம்பில் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் உட்கார வைத்து அதன் பின்பு ஆம்புலன்ஸ் வாகனத்தில் தேனி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அனைவரின் நெஞ்சை பதவளிக்க வைத்தது. இந்த தற்கொலை முயற்சி சம்பதத்தை மாவட்ட ஆட்சியாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அந்தத் தற்கொலை முயற்சி சம்பவத்தை பற்றி மாவட்ட ஆட்சியாளர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடாமல் மௌனம் மட்டுமே மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையாக இருந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் பெண்கள் குழந்தைகள் என்ற இரக்கம் கூட இல்லாமல் மாவட்ட ஆட்சியாளர் இருந்ததற்கு காரணம் அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலோ என்னவோ என்று புலம்பி தவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். சமீப காலங்களாக கோரிக்கைகள் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியாளர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற தற்கொலை முயற்சிகளை தடுக்க முடியும் என்பது தான் நிதர்சனம் பொறுத்திருந்து பார்ப்போம் தற்போது பொறுப்பேற்றுள்ள தேனி மாவட்ட ஆட்சியாளரின் மனிதநேயம் மற்றும் நடவடிக்கையை!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button