தேவாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மேலாளர் ஏழு லட்சம் ரூபாய் மோசடி!

நாட்டின் சிறந்த கால்நடை மேலாண்மைத் துறைகளில் ஒன்றாக இருப்பதால், அதிக லாபம் மற்றும் வருவாய்க்கான வாய்ப்புகளுடன் ஆடு வளர்ப்பு மிகவும் பிரபலமடைந்து வருகிறது.
இது நீண்டகால தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய ஒரு இலாபகரமான மற்றும் நிலையான வணிகமாகும். வணிக ஆடு வளர்ப்பு முக்கியமாக பெரிய நிறுவனங்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் உற்பத்தியாளர்களால் மேற்கொள்ளப்படுகிறது. பால், தோல் மற்றும் நார்ச்சத்துக்கான முதன்மை ஆதாரமாக ஆடு வளர்ப்பு உள்ளது.
ஆடு வளர்ப்பு கடன் என்பது கால்நடை மேலாண்மை மற்றும் இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு வகையான மூலதனக் கடன் ஆகும். ஆடு வளர்ப்பு தொடங்குவதற்கு மரியாதைக்குரிய அளவு நிதி தேவைப்படுகிறது.
ஆடு வளர்ப்பு விவசாயத் துறையின் கீழ் வருவதால், ஆடு வளர்ப்புக்கான கடன்களை
மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள்
மாநில கூட்டுறவு வங்கிகள்
புதிய விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் ரூ. 2 லட்சம் மற்றும் கால்நடை வளர்ப்புக்கு ரூ. 3 லட்சம். வரை
ஆடு வளர்ப்பு கடன்களை வழங்குகிறது.
ஆடுகள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டம் மூலம் 50சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது.
தேசியக் கால்நடை ஆணையத்தின் கீழ், செம்மறி ஆடு வளர்ப்புக்கென விவசாயிகளுக்கு மத்திய அரசு சிறப்பு மானியம் வழங்கி வருகிறது. விவசாயத்துடன் சேர்த்து கால்நடை வளர்ப்பின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
தேனி மாவட்டத்தில் மொத்தம் 80 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்கள் அனைத்தும், விவசாயிகளுக்கு பல்வேறு கடனுதவிகள் மற்றும் சேவைகளை வழங்குகின்றன.
தேனி மாவட்டம் தேவாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, தேனி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ஒன்றாகும். இந்த வங்கி, விவசாயிகளுக்கு குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால கடன்கள், பயிர் கடன்கள், பண்ணை சாராத கடன்கள் போன்றவற்றை வழங்குகிறது. மேலும், பயிர் காப்பீட்டுத் திட்டங்களையும் செயல்படுத்தி, நகைக்கடன், தானிய ஈட்டுக்கடன் போன்றவைகளையும் வழங்குகிறது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் தேவாரம் மற்றும் ஓவுலாபுரம் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த 11 பெண்கள் அருந்தமிழர் மனித வள கூட்டமைப்பின் மாநில செயலாளர் பழ.முருகேசன் சமூக ஆர்வலர் சிலமலை ஈஸ்வரன் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
அதில்


2017 ஆம் ஆண்டு ஆடு வளர்ப்பு திட்டத்தில் தாட்கோ மானியத்துடன் தேவாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் தலா 2 லட்சம் ரூபாய் கேட்டு 11 பேர் விண்ணப்பித்திருந்தோம். இதில் 60 ஆயிரம் ரூபாய் மானியமாகும்.
ஆனால் அப்போதிருந்த கூட்டுறவு வங்கி மேலாளர் கோபால் என்பவர் தலா ஒரு லட்சத்து முப்பதாயிரம் வீதம் ரொக்கமாக வழங்கிவிட்டு ஒரு நபருக்கு மானியம் அறுபதாயிரம் அசல் பத்தாயிரம் என கொடுத்துவிட்டு 11 பேருக்கு ஏழு லட்சத்து எழுபதாயிரம் ரூபாயை தராமல் மோசடி செய்து விட்டார்.
ரூபாய் இரண்டு லட்சம் கடனை வங்கி காசோலையாக வழங்கியிருக்க வேண்டும் அவ்வாறு வழங்கவில்லை. மேலும் 2017 முதல் 2023 வரை கடன் வசூல் செய்யாமல் நோட்டீஸ் எதுவும் வழங்கவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் மோசடி செய்த முன்னாள் கூட்டுறவு வங்கி மேலாளர் நாகலாபுரம் கோபால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு தருவதுடன் வங்கி கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்கவும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர். எது எப்படியோ ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக மானியத்துடன் கூடிய பல திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. அப்படி மானியத்துடன் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தும் அந்தத் துறைகளில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் ஒரு சில கருப்பு ஆடுகள் ஏழை எளிய மக்களுக்கு சேர வேண்டிய பணத்தை மோசடி செய்து வருவது மிகவும் வேதனைக்குரியதாகும். ஆகவே ஏழை எளிய சாமானிய பொதுமக்களுக்கு சேர வேண்டிய பணத்தை மோசடி செய்த நபர்கள் மீது தேனி மாவட்ட ஆட்சியாளர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. ஒரு திருந்து பார்ப்போம் தேனி மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை…




