அடிபணியாத தேனி மாவட்ட ஆட்சியர்!அடிபணிய வைக்க முயற்சிக்கும் வருவாய்த்துறை அலுவலர் சங்கம்!? பொதுமக்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பது யார்!?
பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!? 01/06/2023 அன்று தேனி மாவட்ட ஆட்சியர் ஆண்டிபட்டி பெரியகுளம் வட்டாட்சியர் மற்றும் கம்பம் சின்னமனூர் போடிநாயக்கனூர் நிலவரி திட்ட அலுவலர்கள் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
அதன்பின்பு பெரியகுளம் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜமாபந்தியை புறக்கணிக்கப் போவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் சிலர் தெரிவித்தனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்து ஜமாபந்தியை நடத்தினர். இந்நிலையில், பெரியகுளம் தாசில்தார் காதர்ஷெரிப்பை ஆண்டிப்பட்டிக்கு மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.பெரியகுளம் வட்டாட்சியராக கம்பம் நிலவரித் திட்ட அலுவலரராக சுருளி பெரிய குளம் வட்டாசியராக நியமிக்கப்பட்டார். சின்னமனூர் நிலவரத்திட்ட அலுவலராக முருகேசன் இருந்த போடிநாயக்கனூர் சமூக நலத்திட்ட வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கூடுதலாக சின்னமனூர் நிலவரி திட்ட அலுவலர் ஆகவும் பொறுப்பு வைக்க உத்தரவிட்டார். ஆண்டிபட்டி வட்டாட்சியர் சுந்தர்லால் கம்பம் நிலவரி திட்ட அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த பணியிடம் மாற்றம் உத்தரவில் பெரியகுளம் வட்டாட்சியர் காதர் ஷெரிப் பணி மாறுதலை திரும்ப பெற வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம்! மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வடிவேல் முன்னிலை வகித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியகுளம் வட்டாட்சியர் காதர் ஷெரிப் மீது கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் பெரியகுளம் மற்றும் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த புகார் பெரியகுளம் வட்டாட்சியருக்கு களங்கப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கொடுக்கப்பட்டது என்றும் புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதுமட்டும் இல்லாமல் பல் வேறு கோரிக்கைகளை முன் வைத்து உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
அப்போது பெரியகுளம் வட்டாட்சியர் பணி மாறுதலையும் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
அதன் பின்பு தேனி மாவட்ட ஆட்சியர் உள்ளிருப்பு போராட்டம் செய்த சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில் பெரியகுளம் வட்டாட்சியர் காதர் ஷெரிப் பணியிடம் மாறுதலை மறுபரிசீலனை செய்வதாக கூறி அதுவரை பெரியகுளம் வட்டாட்சியராக பணியில் இருக்கட்டும் என்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின்கோரிக்கையின் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் உத்தரவாதம் கொடுத்த பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் செய்த வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ஷீட்டை சுருட்டி எடுத்துக்கொண்டு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
எது எப்படியோ பெரியகுளம் வட்டாட்சியர் மீது கிராம நிர்வாக அலுவலர்கள் கொடுத்த புகார்கள் இல்லாமல் பொதுமக்கள் கொடுத்த நூற்றுக்கணக்கான புகார்கள் மீது மாவட்ட ஆட்சியர் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்!? இனிமேல் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் முன் வைத்துள்ளனர்.
எது எப்படியோ வட்டாட்சியர் மீது வரும் புகார்களை கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தீர விசாரணை செய்து வட்டாட்சியர் மீது கொடுத்த புகாரில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் யாருக்கும் அஞ்சாமல் பயப்படாமல் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் தான் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மீது நம்பிக்கை வரும்.
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மூலம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதைக் கண்டு மாவட்ட ஆட்சியர் அஞ்சி பணிய வேண்டிய அவசியம் இல்லை. மாறாக சங்கத்தின் மூலம் வைக்கும் கோரிக்கை நியாயமாக இருந்தால் அவர்கள் வைக்கும் கோரிக்கையை உயர்அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தமிழக முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளர் அவர்களுக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவது தான் சரியாக இருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம்
தேனி மாவட்ட ஆட்சியரின் செயல்பாட்டை!!