தொடரும் கனிமவள கொள்ளை!! கோடீஸ்வரர்களாக மதுரை மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள்! பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு!?நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகள் அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு துறையில் நில மோசடி செய்துள்ளதாக பல்லாயிரக் கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் 2021 மே மாதம் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நாளில் இருந்து இதுவரை தேர்தல் நேரத்தில் உங்கள் தொகுதி முதல்வர் என்ற புகார் பெட்டியில் பொதுமக்கள் கொடுத்த குற்றச்சாட்டு புகார்கள் மீது 50 சதவீதத்துக்கு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதில் மிக முக்கியமான குற்றச்சாட்டு என்னவென்றால் தமிழகத்தில் சாதாரண பொது மக்களின் நிலங்களை மோசடி செய்து பத்திரப் பதிவு செய்துள்ளதாகவும் அந்த நிலங்களை முதல்வர் அவர்கள் மீட்டுத் தர வேண்டுமென்ற புகார்கள் இருந்ததாக தகவல் வந்துள்ளன.
தற்போது திமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக மூர்த்தி அவர்கள் பதவியேற்ற பின் பத்திரப் பதிவுத் துறையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
தற்போது மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் துணை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் உள்ள சோழவந்தான் வாடிப்பட்டி காவல் நிலையங்களுக்குட்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் பட்டா நிலங்களில் சட்டவிரோதமாக கிராவல் மண் அனுமதியின்றி எடுத்து விற்கப்படுவதாக பல குற்றச்சாட்டுகள் புகார்கள் வந்த நிலையில் எந்தவித நடவடிக்கையும் சமயநல்லூர் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் வாடிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சமய நூல்கள் காவல் நிலைய ஆய்வாளர் எடுக்காமல் அவ்வப்போது மண் எடுத்துச் செல்லும் லாரிகளை பிடித்து பெயருக்கு வழக்குப்பதிவு செய்து விட்டு விடுவதும் மாதம் மாதம் அதற்காக ஒரு பெரிய தொகையை சட்டவிரோதமாக மண் எடுத்துச் செல்லும் லாரி உரிமையாளர்கள் தருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சோழ வந்தான் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2,37.ஏக்கர் புன்செய் நிலத்திற்கு முன்பணம் மட்டும் கொடுத்துவிட்டு கிரையம் செய்த பின் மீதித்தொகை கொடுக்காமல் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர்.
சோழவந்தான் அருகே முதலைக்குளம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கீழபட்டி கிராமத்தைசேர்ந்தவர் ராசு இவருக்கு இரண்டுமகன்கள்உள்ளனர்.பிரபு.35. பழனிக்குமார் 30.ஆகிய இருவரும் சொந்தமான புன்செய் நிலம் (பட்டா என்.1573).சர்வே.எண்.73/3A2,ல் 3,ஏக்கர் 48.செண்ட் பரப்பளவு உள்ள புன்செய் நிலத்தில் இவர்களுக்கு சேரவேண்டிய சொத்தின் பாகமான சர்வே எண்ணில் 2,ஏக்கர் 37.5.செண்ட் கிழக்குப்பக்கமுள்ள ஆதிதிராவிடர் சுடுகாடு அருகே இருக்கிறது. இந்நிலையில் கடந்த 21.7.08..ம் ஆண்டு இருவருக்கும் சொந்தமான புன்செஞ்சை நிலத்தினை ஒரு செண்ட் நிலம் ரூ. 1500.வீதம் 2,ஏக்கர். 37.5 செண்ட் இடத்தை விக்கிர மங்கலத்தை சேர்ந்த கோட்டைச்சாமி என்பவரிடம் முன் பணமாக. ரூ1.56..(ஒரு லட்சத்தி ஐம்பத்தி ஆறாயிரம்.) பிரபு மற்றும் பழனிக்குமார் ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டு சோழவந்தான் சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் கிரையம் பதிவு செய்து கொடுத்த நிலையில் மீதி பாக்கி தொகை. ரூ.2..லட்சம் ரூபாயை .7மாத காலத்திற்குள் கொடுத்து விடுதாக பிரபு மற்றும் பழனிக்குமார் ஆகிய இருவருக்கும் கோட்டைசாமி பதியாத பத்திரத்தில் எழதி கையெழுத்துப்போட்டுக் கொடுத்துவிட்டுக்கிரையம் செய்த புன்செய் நிலத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கனிமவளத்துறையிடம் கிராவல் குவாரிக்கு அனுமதி பெற்று உள்ளதாக போலி சான்றிதழ்களை காண்பித்து சட்டத்துக்கு விரோதமாக அரசு விதிகளை மீறி முன்னாள் அதிமுக பிரமுகர்களின் உதவியோடு சுமார் 12அடி ஆழத்திற்கு பொக்லைன் இயந்திர உதவியுடன் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கிராவல் மண்ணை அள்ளி சென்று அரசை ஏமாற்றி உள்ளார்கள். இதையெடுத்து 7 மாதம் காலம் முடிந்த பின் பிரபு பழனிக்குமார் இருவரும் கோட்டைச்சாமியிடம் நேரில் சென்று நிலத்திற்க்கிகான பாக்கிதொகை .ரூ 2.லெட்சம் பணம் கேட்டபோது முறையான பதில் தெரிவிக்காமல் 13.ஆண்டுகளாக காலமாக ஏமாற்றி வந்த கோட்டைச்சாமி மீது விக்கிர மங்கலம் காவல் நிலையத்தில் பிரபு கொடுத்த புகாரின் பேரில் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைச்செய்து வருகின்றனர். புன்செய் நில உரிமையாளர்களுக்கு பணம் கொடுக்காமல் மோசடி செய்தும் கனிமவள விதிகள் மீறி சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளி சென்று அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியவர் மீது சட்டநடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எடுக்குமா..??? இதுபோல் மதுரை மாவட்டத்தில் உள்ள பட்டா நிலங்களில் கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோதமாக கிராவல் மண் எடுத்துள்ளதாக பல புகார்கள் கனிம வளத் துறைக்கு மற்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகவே தற்போது தமிழக முதல்வராக உள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேர்மையான அதிகாரியை கனிமவளத்துறை நியமித்து பத்து வருடமாக நடந்த கனிமவள கொள்ளை கண்டுபிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்..