தொடரும் கொலை சம்பவங்கள்! துப்பு கிடைக்காமல் தற்கொலைகளாக மாற்ற முயற்சி செய்யும் போடிநாயக்கனூர் காவல் உட்கோட்ட காவல்துறையினர்!?நடந்தது என்ன!?
தேனி மாவட்டம் போடி காவல் எல்லைக்குட்பட்ட சி. பி .எ கல்லூரி பரமசிவன் கோவில் அருகே 16/09/2024 அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்த இரண்டு மூன்று நாட்கள் ஆனது போல் உடம்பில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தங்கள் உடல் முழுவதும் கசிந்து காய்ந்த நிலையில் மரத்தில் தொங்கியபடி இருந்ததை போடி மெட்டுக்கு குறுக்குப் பாதையில் நடந்து செல்பவர்கள் பார்த்து உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே போடிநாயக்கனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நிலையில் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த உடலை கீழே இறக்கி தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ உடல் பரிசோதனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
இது சம்பந்தமாக இறந்த நபர் யார் என்று போடிநாயக்கனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர் கேரளாவை சேர்ந்தவர் என்றும் குடும்பப் பிரச்சினையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் இது சம்பந்தமாக போடி நகராட்சி பேருந்து நிலையம் பகுதியில் கடைகள் வைத்து இருப்பவர்களிடம் இறந்த போன நபர் பற்றி ஏதாவது தெரியுமா என விசாரித்தபோது திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தனர். அது என்னவென்றால் போடி மெட்டு மற்றும் கேரளா பகுதியில் இருந்து விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளிகள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு போடிநாயக்கனூர் வருவது வழக்கம். அப்படி அவர்கள் வரும்போது இரவு நேரங்களில் கேரளா செல்வதற்கு பேருந்து மற்றும் வாகனங்கள் கிடைக்காமல் போடிநாயக்கனூர் நகராட்சி பேருந்து நிலையத்தில் உள்ள பகுதிகளில் படுத்து உறங்கி விட்டு காலையில் செல்வார்கள் என்றும் ஆனால் தற்போது போடிநாயக்கனூர் நகராட்சி பேருந்து நிலையம் பகுதிகளில் இரவு நேரங்களில் கஞ்சா போதையில் வழிப்பறி செய்யும் கும்பல்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் இரவு நேரங்களில் தூங்கிக் கொண்டிருப்பவர்களிடம் இருக்கும் பணம் மற்றும் பொருட்கள் செல்போன் அனைத்தையும் வழிப்பறி செய்து விட்டு போதையில் அவர்களை தாக்கி விட்டும்
சென்று விடுகிறார்கள் என்றும் இது சம்பந்தமாக போடிநாயக்கனூர் காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் புகாரியின் மீது இரவு நேரங்களில் போடிநாயக்கனூர் காவல் துறையினர் ரோந்து பணியில் அதிக காவலர்களை நியமித்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்காமல் காவல் நிலையத்தில் எந்த புகாரை விசாரிக்க கூடாது என்று ஏடிஜிபி சுற்றறிக்கை உள்ளதற்கு எதிர் மாறாக நிலம் சிவில்பிரச்சனை கந்துவட்டி பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இது போன்ற புகார்களை கையில் எடுத்துக்கொண்டு விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து போடிநாயக்கனூர் காவல் உட்கோட்ட காவல்துறையினர் கல்லா கட்டி வருவதாகவும் வழிப்பறி கொலை கொள்ளை எது நடந்தாலும் கண்டுகொள்ளாமல் போடி நாயக்கனூர் காவல் உட்கோட்ட காவல்துறை இருப்பதால் இதை சாதகமாக பயன்படுத்தி கஞ்சா போதை ஆசாமிகள் தொடர் வழிப்பறி கொலை கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் கேரளா பகுதியில் இருந்து போடிநாயக்கனூர் வரும் விவசாயிகள் அச்சத்தில் பெரும்பாலும் வருவதில்லை என்றும் போடிநாயக்கனூர் நகராட்சி பேருந்து நிலையம் சுற்றியுள்ள வியாபாரிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
முன்பு பரமசிவன் கோவில் பகுதியில் போடி நகராட்சியில் வேலை செய்த செல்வராஜ் என்ற ஊழியரை கொலை செய்துவிட்டு கொலையாளிகள் தப்பி சென்று விட்டனர்.ஆனால் நான்கு வருடம் ஆகியும் கொலையை செய்த கொலையாளிகள் யார் என இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் போடிநாயக்கனூர் காவல் உட்கோட்ட காவல் துறையினருக்கு சவாலாக இருந்து வருகிறது என்பது தான் நிதர்சனம் .மீண்டும் இரண்டு வருடங்களுக்கு முன்பு சி பி எ கல்லூரி அருகே உள்ள ஓடையில் சுமார் 18 வயதுடைய
கொலை செய்யப்பட்டு உடல் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் பெண்ணை கொலை செய்த நபர்கள் யார் என்று இதுவரை போடி காவல் துறையினருக்கு துப்புக் கிடைக்காமல் கொலையாளிகள் யார் என கண்டுபிடிக்க முடியவில்லை. அதே போல் தான் தற்போது சி பி எ கல்லூரி பகுதியில் தூக்கில் தொங்கியபடி இருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டாரா இல்லை தற்கொலை செய்து கொண்டாரா என துப்பு கிடைக்காமல் போடிநாயக்கனூர் காவல் உட்கோட்ட காவல்துறையினர் அவசர கோணத்தில் தற்கொலை என வழக்கை பதிவு செய்ய முயற்சி செய்து வருகிறார்களோ என சந்தேகம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தகவலை தெரிவித்துள்ளனர்.
எது எப்படியோ நான்கு வருடம் ஆகியும் கொலையை செய்த கொலையாளிகள் யார் என இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் போடிநாயக்கனூர் காவல் உட்கோட்ட காவல் துறையினருக்கு சவாலாக இருந்து வருகிறது என்பது தான் நிதர்சனம்.. அது மட்டுமில்லாமல் இந்த குற்றச் சம்பவங்கள் குறிப்பாக குரங்கனி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் குரங்கணி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் பணியிடம் நிறப்படாமல் இருப்பதால் குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க இயலாத சூழ்நிலை இருப்பதாகவும் இதுவரை நடந்த குற்றச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை முறையாக விசாரணை நடத்த வில்லை என்றும் ஆகவே போடிநாயக்கனூர் காவல் உட்கோட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் நடக்கும் வழிப்பறி கொலை கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் கஞ்சா போதை கும்பல்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்ட போடிநாயக்கனூர் காவல்நிலையத்தில் இரண்டு காவல் ஆய்வாளர்கள் இருந்தும் இரவு நேர ரோந்து பணிக்கு கூடுதல் காவலர்களை நியமித்து கண்காணித்து இரவு நேரங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோத கும்பல்களை காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.ஆகவே தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் போடிநாயக்கனூர் காவல் உட்கோட்ட பகுதிகளில் இரவு நேர ரோந்து பணிக்காக தனிப்படை அமைத்து இரவு முழுவதும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கையை!