மாவட்டச் செய்திகள்

தொடரும் தெரு நாய்களின் அட்டகாசம்! வாடிப்பட்டியில்வளர்ப்பு ஆடு மாடுகளை இழந்து வாழ்வாதாரம் இன்றி இருப்பதாக கண்ணீர் விட்டு நிவாரணம் கேட்கும் பெண்ணின் அதிர்ச்சி வீடியோ! முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து,  உடனடியாக இழப்பீடு   வழங்க  மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?

மதுரை மாவட்டம் டி வாடிப்பட்டி பேரூராட்சி 18 வார்டுகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லாததால் ஆயிரக்கணக்கான விவசாயிகள்  ஆடு மாடுகளை   வளர்த்து அதில் வரும் வருமானத்தை வைத்து எங்கள் குடும்பங்களை நடத்தி வருகிறார்கள். தற்போது

தெரு நாய்கள் அதிகமாக சுற்றி வருவதால் மேய்ந்து கொண்டிருக்கும்  ஆடு மாடுகளை  தொடர்ந்து கடித்து வருவதால் கடந்த சில மாதங்களாக

நூற்றுக்கு மேற்பட்ட ஆடு மாடுகள் உயிரிழந்ததால் பல விவசாய குடும்பங்கள் வாழ்வதற்கு இழந்து இருக்கின்றனர். உதாரணமாக வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பகுதியில் அமைந்துள்ள

பாலன் நகரில்
மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வசித்து வரும் பெண்மணி தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக ஆடுகளை வளர்த்து அதில் வரும் வருமானத்தை வைத்து தன்னுடைய மாற்றுத்திறனாளி குழந்தையையும் குடும்பத்தையும் கவனித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள பாலன் பகுதியில் சுற்றி வந்த

20 க்கும் மேற்பட்ட தெருநாய்கள் அந்தப் பெண்மணி வளர்த்து வந்த ஆடுகளைக் கடித்ததில்  மூன்றுக்கு மேற்பட்ட ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதால் தற்போது தன்னுடைய மாற்றுத் திறனாளி குழந்தைக்கு மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லாமல் வாழ்வாதாரம் இல்லாமல் மாற்றுத்திறனாளி குழந்தையுடன் மிகவும் கஷ்டப்படுவதாகவும் ஆகவே மாற்றுத்திறனாளி குழந்தையின் நலன் கருதி இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டசபையில் தெரு நாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழக்கும் பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள விதிகளின்படி, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, இந்த இழப்பீடு வழங்கப்படும்.
நாய்க்கடித்து உயிரிழக்கும் மாட்டுக்கு, 37,500 ரூபாய்; வெள்ளாடு, செம்மறி ஆட்டுக்கு, 6,000 ரூபாய்; கோழி ஒன்றுக்கு 100 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும். இதுவரை உயிரிழந்த, 1,149 கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு, 42 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது ஆகவே
மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வாழ்வாதாரம் இல்லாமல் இருக்கும் அந்தப் பெண்ணின் குடும்பத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு புதிய இழப்பீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது.
ஆகவே வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் விட்டு கோரிக்கை விடுத்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் மதுரை மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை!

Related Articles

Back to top button