மாவட்டச் செய்திகள்

தொடரும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு! தமிழக முதல்வரின் உத்தரவுகளை காற்றில் பறக்க விட்டு தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு துணை போகும் மதுரை மாவட்ட ஆட்சியாளர் நிர்வாகம்!? நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?

தொடரும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு!  ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கும் மதுரை மாவட்டம் ஆட்சியாளர்!

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம்

கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தின் கீழ், முதலமைச்சர் அனைத்து திட்டங்களும் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும்”.. ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் ஒரு நல்லரசாக அமைந்திட முடியும். இதை நாங்கள் மட்டுமல்ல, நீங்களும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறீர்கள். அந்த எண்ணத்தை நெஞ்சில் ஏந்தித்தான் நாம் அனைவரும் செயல்பட்டாக வேண்டும். சுணக்கம் காணப்படக்கூடிய சில பணிகள் இந்தக் கூட்டத்தில் அடையாளம் காணப்பட்டது. அதை நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். விரைவிலே நிறைவேற்றுவோம் என்கிற நம்பிக்கையையும் சொல்லியிருக்கிறீர்கள். அதை செய்ய வேண்டிய பொறுப்பு உங்களிடத்தில் இருக்கிறது. நிர்வாகம் நல்ல வகையில் மேம்பட வேண்டும்; தொய்வுகளை நீக்க வேண்டும். நம்முடைய பணிகளில் காணக்கூடிய இடர்களையெல்லாம் குறைக்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கையை நீங்கள் எடுக்க வேண்டும். உங்களை உற்சாகப்படுத்துவதற்கும் – உங்கள் பிரச்சனையை நேரடியாக அறிவதற்கும் தான் இந்த ஆய்வுக் கூட்டம். உங்களுடைய கருத்துக்களையெல்லாம் அரசினுடைய கவனத்தில் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று முதல்வர் எடுத்துக் கூறினார்.

மாவட்ட ஆட்சியாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியம் துவரிமான் கண்மாய்  பகுதியில் உள்ள,  கிருதுமால் நதியில் சங்கமிக்கும் சின்னம்மடை பிரிவு கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் சிரமம் அடைகின்றனர்.
துவரிமான் கண்மாயின் சின்ன மடையில் இருந்து வெளியேறும் தண்ணீர்  பிரிவு கால்வாய் மூலம் பாசனத்திற்கு தேவையானது போக மீதமாகும் உபரிநீர் பள்ளமடை என்னும் கிறிதுமால் நதியில் சென்று சேருகின்றது.
தற்போது இக்கால்வாயை சில ரியல் எஜ்டேட் தனியார் நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு  செய்துள்ளதால் கிருஸ்துமால் நதியிலிருந்து  விவசாயிகளுக்கும்  தண்ணீர் செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளதோடு  விவசாயிகள் நடந்து செல்ல கூட பாதையின்றி தவிக்கின்றனர் இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி மோகன் கூறியதாவது இப்பாசன நீரை பயன்படுத்தி 150க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடந்தது தற்போது தென்னை மற்றும் வாழை உள்ளிட்ட விவசாயம் மட்டுமே நடக்கிறது நிலத்திலிருந்து அறுவடை செய்த  தேங்காய்  வாழைக்காய் உள்ளிட்ட பொருட்களை வாகனங்களில். எடுத்து செல்ல வழியில்லாமல் இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் போட்டிபோட்டு  இக்கால்வாயை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் விவசாய பொருள்களை கொண்டு செல்ல மிகுந்த சிரமப்படுகிறோம் வலம்புரிநாதன் கூறியதாவது இக்கண்மாயிலிருந்து ராஜம் கிரோ பிளாட் 30 அடி அளவில் பொதுப் பாதை உள்ளது இப்பாதை சின்னமடை பிரிவு கால்வாயின் குறுக்கே செல்லும் இப்பாதை வழியே சின்னமடைவாய்க்கால் பகுதியில் அண்ணாமலையார் பில்டர்ஸ் குழி தோண்டி போட்டு பாதையை பொதுப்பாதையை தடுத்துள்ளனர் இதனால் விவசாயிகள் விவசாய இடத்திற்கும் விவசாய பொருட்களை கொண்டு செல்லவும் மிகுந்த சிரமப்படுகின்றன கண்மாயில் இருந்து வரும் சின்னமலை வாய்க்கால் முழுவதும் ராஜம் கிரோ பிளாட் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது இதன் அகலம் 7 அடி முதல் 17 அடி வரை உள்ளது சின்னமடை கால்வாயில் பிரிவு வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அண்ணாமலை பில்டர்ஸ்  செய்துள்ளனர் இதனால் விவசாயிகளுக்கு போக்குவரத்து வழி இன்றி தவித்து வருகின்றனர் நாகலிங்கம் கூறியதாவது ஊராட்சிக்கு பதிவு செய்த பொதுபாதையை அண்ணாமலை பில்டர்ஸ் நிறுவனம் இரண்டாவது முறையாக அடைத்துள்ளனர் முதல் முறை பாதையை அடைத்து தடைசெய்தபோது   தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு புதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றினர். அதன் பின்பு தற்போது அப்போது பாதைகளில்  பள்ளம் தோண்டி போட்டுள்ளனர் இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில்   இதற்கான அனுமதி வழங்கியது அதிகாரிகள் யார் !? தனியார் ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு பின்னணியில் இருக்கும் அரசியல் புள்ளி யார் !?என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினார்.
எது எப்படியோ நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற பலமுறை நீதிமன்றங்கள் உத்தரவிட்டும் மாவட்ட நிர்வாகம் அந்த உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு அக்ரமிப்பாளர்களுக்கு துணையாக  மாவட்ட ஆட்சி நிர்வாகம் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அனுப்பிய அறிக்கையில் கூறப்பட்டதை மாவட்ட ஆட்சியாளர்கள் ஊதாசனப்படுத்தி வருகிறார்களா சந்தேகம் எழுந்துள்ளது இந்த சந்தேகத்திற்கு எல்லாம் விடை அளிக்க மதுரை மாவட்ட ஆட்சியாளரின் நடவடிக்கையை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button