மாவட்டச் செய்திகள்

தொடர் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி, வீடில்லாத, பட்டியல் சமூக பயனாளிகளுக்கு, வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டி தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்!

தேனி ( புதிய) பென்னிகுக் பேருந்து நிலையம் அருகே, பஞ்சமி நிலத்தில், சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்புகள் செய்துள்ளதாகவும், விதி மீறலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி , வீடில்லாத, பட்டியல் சமூக பயனாளிகளுக்கு, வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும் என்று கோரி, பஞ்சமர் நில உரிமை மீட்பு கூட்டமைப்பு சார்பில், கடந்த 03-04-2025 அன்று
பஞ்சமர் நிலத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. தேனி வட்டாட்சியர், தேனி ADSP, முன்னிலையில், தேனி காவல் ஆய்வாளர் பொதுமக்களிடம், முறையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த நிலையில், மீண்டும் ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அதிகப்படுத்தி இருப்பதை அறிந்த பஞ்சமர் நில உரிமை மீட்பு கூட்டமைப்பினர், தேனி வட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தும், இது வரை முறையான நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளவில்லை எனவும், தொடர் ஆக்கிரமிப்பு செய்வதை அகற்ற தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேனி வட்டாட்சியர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க கோரி, பஞ்சமி நில உரிமை மீட்பு கூட்டமைப்பு சார்பில்,

தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் கூறிய போது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் ஆகியோர், தேனியில் மட்டுமல்லாது, தேனி மாவட்டத்தில் உள்ள பஞ்சமர் நிலங்களில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது முறையான, விரைவான, நடவடிக்கை எடுத்திட முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button