தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க மதுரை வாடிப்பட்டி நான்கு வழிச் சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து இரவு நேரங்களில் வாகன சோதனையை துரிதப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!?

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சமயநல்லூர் சோழவந்தான், வாடிப்பட்டி சுற்று வட்டாரத்தில் சமீப காலமாக இருசக்கர வாகனங்கள் ,விவசாய நிலங்களில் கிணறுகளில் உள்ள மோட்டார் பம்புகள், கோவில்களில் உள்ள உண்டியல் , பூட்டியிருக்கும் வீடுகளில் பாத்திரங்கள் பணம் செல்போன் நகைகள் திருடு போய்விட்டதாக வாடிப்பட்டி சமயநல்லூர் அலங்காநல்லூர் சோழவந்தான் காவல் நிலையங்களில் பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தடை செய்யப்பட்ட கஞ்சா மூன்று நம்பர் லாட்டரி சட்டவிரோதமாக விற்று வருவதாக புகார் வந்துள்ளது. சமூக விரோதிகளையும் கண்காணிக்க வேண்டும்.
சில தினங்களுக்கு முன்பு ஆண்டிப்பட்டி பங்களா வன அலுவலகம் அருகில் நெடுஞ்சாலைத் துறையில் பணி செய்பவருடைய மகன் வினோத் கண்ணன்வயது21 தினசரி கூலி வேலைக்கு செல்லும் மில் தொழிலாளி தனது வீட்டு முன்பாக நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை யாரோ மர்ம மனிதர்கள் திருடிச் சென்று விட்டதாக புகார் கொடுத்துள்ளதாக தகவல்!
திருட்டுப் புகார்
காவல்துறையினரின் தகவல் படி இந்த ஒரு வாரத்தில் மட்டும் நான்கு வாகனங்கள் திருடு போயுள்ளதாக புகார் கொடுத்துள்ளதாக தகவல்!
கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் சமயநல்லூர் ,வாடிப்பட்டி ,அலங்காநல்லூர், சோழவந்தான் சுற்றுவட்டார பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன! இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒரு சில குற்றவாளிகளை மட்டும் காவல்துறையினர் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்!



ஆனால் முடிந்தளவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் காவல்துறையினர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க
தங்களாளன முயற்சியை செய்து வருகின்றனர். இருந்தாலும் இது போன்ற திருட்டு செயல்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதற்குக் காரணம் மதுரை மாநகரம் திண்டுக்கல் மாநகரத்தில் காவல்துறையினர் விழிப்புடன் இரவு பகலாக செயல்பட்டு வருவதால் கொள்ளையர்கள் நகரங்களை விட்டு தற்போது நான்கு வழிச்சாலைகளின் அருகே தங்கி கொள்ளையடித்து நான்கு வழிச்சாலையில் தப்பிச் சென்று விடுகின்றனர் என்ற தகவல் வந்துள்ளது. ஆனால் பேரூராட்சிகள் நகராட்சி ஆகும் அளவிற்கு மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டே இருந்தாலும் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் போதுமான அளவிற்கு காவலர்கள் இல்லை என்ற நிலைதான் தற்போது உள்ளது. ஆகையால் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் போதுமான அளவிற்கு காவலர்களை பணியாற்றினால் மட்டுமே கொலை கொள்ளை வழக்குகள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்பதுதான் நிதர்சனமாக உள்ளது.
வாடிப்பட்டி சுற்றுவட்டாரம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக அமைந்துவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது!
அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் வாடிப்பட்டியில் உள்ள மாதா கோவிலுக்கு சாமி கும்பிட வந்ததாக கூறி ஓரிரு நாள் விடுதிகளில் தங்கி தங்கள் திருட்டு கைவரிசையை காட்டி வருகின்றனர் என்ற தகவலும் வந்துள்ளது.
வழிப்பறி கொலை கொள்ளை போன்றவற்றை அரங்கேற்ற தற்போது வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையை சுற்றி சமூக விரோதிகள் பயன்படுத்தி வருகின்றனர் என்ற அச்சம் பொதுமக்களுடைய எழுந்துள்ளது.
ஆகவே மதுரை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சோழவந்தான் நான்கு வழிச் சாலை மற்றும் அலங்காநல்லூர் செல்லும் (தனிச்சியம் பிரிவு)நான்கு வழிச்சாலை வாடிப்பட்டி நான்கு வழிச்சாலைகளில் சுற்றி சோதனைச் சாவடிகளைஅமைத்து இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்களை காவல்துறையினர் சோதனையிட்டு கண்காணித்தால் மட்டுமே கொள்ளைகளில் ஈடுபடும் சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட முடியும் . மக்கள் தங்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர்களுக்கு நிம்மதியாக சென்றுவர முடியும் என்று சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்!
.