தொழிற்சாலைகளில் கொத்தடிமை தொழிலாளர்களை பணி அமர்த்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் கொத்தடிமை தொழிலாளர்களை பணி அமர்த்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட ஆட்சியாளர் ஜெ.மேகநாதரெட்டி,அவர்கள் எச்சரிக்கை.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், தெய்வானை நகர் என்ற முகவரியை சேர்ந்த திரு.தனபால், த/பெ.சண்முகம் என்பவருக்கு சொந்தமான சிவகாசி வட்டம் விஸ்வநத்தம் கிராமத்தில் இயங்கி வரும் மெ.எஸ் கண்மணி பாலி பேக் பிரைவேட் லிமிடெட்; என்னும் தொழிற்சாலையில் கொத்தடிமை தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு வந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் சிவகாசி சார்ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் 22.07.2021 அன்று சிவகாசி சார் ஆட்சியர் மேற்கண்ட தொழிற்சாலைக்கு நேரடியாக சென்று தொழிற்சாலையில் கொத்தடிமை தொழிலாளர்கள் 14 பேர் பணிபுரிந்து வந்தது கண்டறியப்பட்டு, மேற்படி தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட தொழிலாளர்கள் விருதுநகரில் உள்ள அரசு கூர் நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குரிய நிதியுதவி விருதுநகர் மாவட்ட தொழிலாளர்கள் நல உதவி ஆணையர் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களின் உடல் நலன் குறித்து சிவகாசி அரசு பொது மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது சிவகாசி சார்ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி, மேற்படி தொழிற்சாலை உரிமையாளர்களின் மீது சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் கொத்தடிமை தொழிலாளர்களை பணி அமர்த்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித
்துள்ளார்.